திருக்குறள் அதிகாரம் 125. நெஞ்சொடு கிளத்தல் CHAPTER 125. A CONVERSATION WITH THE HEART (LAMENTATION WITH HEART) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்
அதிகாரம் 125.
நெஞ்சொடு கிளத்தல்
CHAPTER 125.
A CONVERSATION WITH THE HEART (LAMENTATION WITH HEART)
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH;
WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of 
mahendiranglobalenglish.blogspot.com
----------------
குறள் 1241:
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கு மருந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
எம்மருந்தும் தீர்க்கா நோயாம் காதல் நோய். நெஞ்சே, நீ நினைத்துப் பார்த்து ஏதேனும் மருந்திருந்தால் சொல்வாயா?
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh my heart, I assume that this love pain is unrecoverable.. would you please prescribe a right remedy by your research?
- MAHENDIRAN V
------------------
குறள் 1242:
காத லவரிலர் ஆகநீ நோவது
பேதமை வாழியென் நெஞ்சு

என் நெஞ்சே! உன் பெருந்தன்மைக்காக உனை வாழ்த்துகிறேன். அவர் நம் மீது பாராமுகம் காட்டியும் அவர் நினைவாகவே நீ இருக்கிறாயே அதற்கு தான்!
- வை.மகேந்திரன்

Explanation in English:
Although my lover is not bothering us still you are always thinking about him. Really I praise you due to that.
- MAHENDIRAN V
------------------
குறள் 1243:
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நெஞ்சே, உன் போல் அவரிடம் கருணை உள்ளம் இல்லை. காதல் நோயில் எனை வெம்ப வைத்தவர்.  ஆகையால் நீ இங்கிருந்து அவர் நினைவாய் வாடுவதில் யாதொரு நியாயமும் இல்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh my heart, my lover doesn't have a mercy heart as you are. He is the man who is injuring me of love pain. So, what you think always about him is injustice.
- MAHENDIRAN V
------------------
குறள் 1244:
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நெஞ்சே, அவரை நீ காணச் சென்றால் என் கண்களையும் அழைத்துச் சென்று அவரிடம் காட்டு. அவரைக் காணவேண்டுமென்று அவை என்னை தின்கின்றன!
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh my heart, if go out to meet my lover, just take my eyes too with you, and make them meet him because they are killing me to show him to them.
- MAHENDIRAN V
------------------
குறள் 1245:
செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நெஞ்சே, அவர் நம்மை வெறுத்து ஒதுக்குவதால் அவரை விரும்பி நினைத்து என்றும் உருகும் நாமும் அவரை வெறுப்பது நாகரிகமாகாது
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh my heart, Even though my lover pushes out us from his heart, what we show the hatred on him while we melt much more on him of love is not etiquette.
- MAHENDIRAN V
------------------
குறள் 1246:
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கூடி கலந்து ஊடலை கலையுங்கால் அவர் மீது பிணக்கேதும் காட்டாத என் நெஞ்சே, இப்பொழுது மட்டும் அவர் மேல் என்ன கோபம்? பொய்யான கோபம் தானே?
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh my heart, while you hadn't shown your anger on my lover at the time of our being together after the playful quarrel, why are you angry on him now? It's fake one, isn't it?
- MAHENDIRAN V
------------------
குறள் 1247:
காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேனிவ் விரண்டு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நல்ல நெஞ்சமே, ஒன்று காதல் ஆசையை விட்டு விடு அல்லது நாணப்படுவதை விட்டு விடு. உனக்கு இரண்டும் வேண்டுமெனில் அதனால்  துன்பப்படுவது நானல்லவோ!
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh my pretty heart, either you leave out the act of loving him or leave out the act of getting shy. If you carry the both activities together, only I get suffered, don't I?
- MAHENDIRAN V
------------------
குறள் 1248:
பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதையென் நெஞ்சு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நெஞ்சமே, பிரிந்த துயரில் இரக்கம் காட்டியாவது வந்து அணைப்பார் என்றெண்ணி அவர் பின் நீ தொடர்வது பேதமையின் உச்சம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh my heart, It is of course innosent one what you are pursuing him by expecting that he would come and hug me atleast because of sympathy on me.
- MAHENDIRAN V
------------------
குறள் 1249:
உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
என் நெஞ்சமே, உள்ளத்தின் உள்ளே அவர் இங்கு உள்ள பொழுது நீ யாரை தேடி எங்கு செல்கிறாய்?
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh my heart, whereas he is sitting in my heart intensively inside, where do you go and to look for whom?
- MAHENDIRAN V
------------------
குறள் 1250:
துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா
இன்னும் இழத்தும் கவின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிரியா காதலர் பிரிந்தெங்கோ சென்றாலும் உள்ளத்தின் உள்ளே அவர் வீற்றிருந்தும் என் அழகு மெலிந்து குறைவது தான் ஏனோ?
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even though my lover who hasn't parted from me has gone somewhere by parting me, he is sitting permanently in my heart. Then why do I become leaned?
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 98424907456380406625
Email: poigaimahi@gmail.com 
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. 
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS