அதிகாரம் 10 இனியவை கூறல் Chapter 10 THE UTTERANCE OF PLEASANT WORDS (Speaking good ones) Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur

அதிகாரம் 10  
இனியவை கூறல்
Chapter 10

The Utterance of pleasant words 
(Speaking good ones)
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V
Northpoigainallur)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
------------------------
குறள் 91:
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

விளக்கம்:
ஞானம் பெற்றவர்களால் பேசப்படும் ஆழ்ந்த கருத்துள்ள வஞ்சகமில்லா வார்த்தைகளே இனிய கருத்துரையாகும்.

Explanation in English:
The words delivered verdictly from ones who are wisdom are considered as sweet and pleasant words.
------------------------
குறள் 92:
அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்

விளக்கம்:
முகமலர்ச்சியுடன் கூறும் நல்வார்த்தைகளே அகமலர்ச்சியுடன் தரும் பொருளை காட்டிலும் சிறந்த பரிசு.

Explanation in English:
The words delivered by one pleasantly with smiling face is more valuable gift than a thing given by one enthusiastically.
------------------------
குறள் 93:
முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்

விளக்கம்:
அகம் புறம் மகிழ முகம் நோக்கி ஆத்மார்த்தமாக கூறப்படும் வார்த்தைகளே முதல் அறம் ஆகும்.

Explanation in English:
Speaking words pretily in and out fullheartly is the first morality.
------------------------
குறள் 94:
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

விளக்கம்:
யாரிடத்திலும் நல்லவற்றை இனிதாக பேசுவர்களுக்கு தீமை எதுவும் வராது.

Explanation in English:
No sadness will reach to ones who deliver good and sweet words always to whomever.
------------------------
குறள் 95:
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற

விளக்கம்:
வணக்கத்துடன் இனியவற்றை கூறுவதை விட சிறந்த ஆபரணம் வேறெதுவுமில்லை.

Explanation in English:
No one can be a good ornament to one but sweet words spoken by him with good salutations.
------------------------
குறள் 96:
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

விளக்கம்:
நல்லவற்றை மட்டும் இனிமையாக பேசினால் தீயவை ஒழிந்து அறம் செழிக்கும்.

Explanation in English:
Speaking only good matters sweetly shall destroy all evils and Morality will grow up.
------------------------
குறள் 97:
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்

விளக்கம்:
பிறரின் வாழ்க்கைக்கு நன்மைதரும் பண்புமிக்க வார்த்தைகளை கூறுபவர்களின் வாழ்க்கை சிறந்து விளங்கும்.

Explanation in English:
One whose words are causing benefits to others for their moral life will have been having a pleasant life.
------------------------
குறள் 98:
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்

விளக்கம்:
சிறுமைகள் நீங்கின இனிய வார்த்தைகளை பேசுபவர்கள் இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும்கூட இன்பம் பெறுவார்கள்.

Explanation in English:
Ones who speak only pleasant words by avoiding narrow senses will get great lives in the present and future birth.
------------------------
குறள் 99:
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது

விளக்கம்:
இனிய சொற்கள் இன்பம் தருமென்றறிந்தும் கடும் சொற்களை ஒருவர் ஏன் பேசவேண்டும்?

Explanation in English:
Though one who could realise that only sweet talks cause pleasance for life, why should he need to talk  harsh words?
------------------------
குறள் 100:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

விளக்கம்:
இனிய சொற்கள் ஏராளமாய் குவிந்து கிடக்க, கடுஞ்சொற்களை பேசுதல், பழங்கள் நிறைந்திருக்க காய்களை உண்பதுபோல் ஆகும்.

Explanation in English:
Speaking harsh words while being a plenty of sweet words is like eating rather unrip fruits than fruits cumulated a lot.
----------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS