அதிகாரம் 9 விருந்தோம்பல்/ CHAPTER 9 HOSPITALITY (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 9  விருந்தோம்பல்
CHAPTER 9
HOSPITALITY
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V
Northpoigainallur)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
------------------------
குறள் 81:
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

விளக்கம்:
இருந்து உண்டு வாழ்ந்து மகிழ்வது என்பது நாடி வருவோரை விருந்தோம்பி மகிழ்விப்பதை தான் குறிக்கும்.

Explanation in English:
The stance of one's living pleasant means that the quality of hospitality of him to his guests.
------------------------
குறள் 82:
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

விளக்கம்:
விருந்துண்ண வந்தோர் வெளியில் பசியுடன் காத்துகிடக்க, உள்ளே சாகா வரம் தரும் மருந்தாக இருந்தாலும் அதை உண்பது மரபு அல்ல.

Explanation in English:
While your guest is waiting outside if you eat food even if such food is a medicine for your undying, that's not humane.
------------------------
குறள் 83:
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று

விளக்கம்:
விருந்தோம்பல் தொடர்ந்து செய்வதனால் செல்வம் வற்றிவிடும் என்று பயப்பட தேவையில்லை.

Explanation in English:
Need not fear by thinking wealth would melt because of one's doing hospitality regularly.
------------------------
குறள் 84:
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல்

விளக்கம்:
மனமுவந்து அகம் மலர்ந்து விருந்தோம்பல் செய்பவரின் வீட்டில், செல்வக் கடவுளான லக்ஷ்மி என்றும் குடியிருப்பாள்.

Explanation in English:
If one hospitate a guest fullheartly with smiling face, the goddess of wealth will dwell his home.
------------------------
குறள் 85:
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்

விளக்கம்:
விருந்தளித்து உபசரித்த பின் எஞ்சியிருப்பதை உண்டு மகிழும் நல்லோர் வீட்டில் உணவுக்காக விதைவிதைக்க வேண்டியதில்லை.

Explanation in English:
Need not plant a seed for food in the house of one who eats the remaining food after he hospitates his guest.
------------------------
குறள் 86:
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு

விளக்கம்:
பலருக்கும் உணவளித்து,  மேலும் உணவளிக்க பற்பவரையும் எதிர்நோக்கும் நல் விருந்தோம்பியை வானிலிருந்து இவன் உபசரிப்பான்.

Explanation in English:
One who expects more guests for his home to hospitate despite having already guests at him home will be hospitated by God in the sky.
------------------------
குறள் 87:
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்

விளக்கம்:
விருந்தோம்பல் என்பது ஒரு யாகத்திற்கு இணையானது. விருந்தேம்பல் செய்வதால் யாகத்தின் பலன் கிடைப்பதால் வேறு பலன் தேடவேண்டியதில்லை.

Explanation in English:
Hospitating is also a kind of yagna. As one is blessed graces as far as the strength of yagna, need not seek for any blessing else.
------------------------
குறள் 88:
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்

விளக்கம்:
விருந்தோம்பல் எனும் யாகம் செய்யாதிருப்போர் செல்வத்தை இழக்கும் போது தான் விருந்தோம்பா தவறை நினைத்து உருகுவர்.

Explanation in English:
One who fails to sacrifice by hospitality will be worried out when he loses his wealth in the future.
------------------------
குறள் 89:
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு

விளக்கம்:
பொருள் நிறைய இருந்தும் வறுமை வருமோ என்றெண்ணி விருந்தோம்பல் செய்யாதவர் மடையரிலும் மடையர்.

Explanation in English:
One who is having un measurable wealth and failing to hospitate because of fearing for poverty is absolutely an utter blunder.
------------------------
குறள் 90:
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து

விளக்கம்:
அனிச்சமலர் முகர்ந்தவுடன் வாடி விடுவதை போல, முகமலர்ச்சியில்லா விருந்தோம்பல்  விருந்தினரை வாட வைக்கும்.

Explanation in English:
As if a scarlet pimpernel dries out when it is smelt, a guest too will get fade up if he gets hospitality by one badly manners.
----------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS