Skip to main content

அதிகாரம் 11 செய்நன்றியறிதல் CHAPTER 11 KEEPING GRATITUDES (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 11
செய்நன்றியறிதல்
CHAPTER 11
KEEPING GRATITUDES
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V
Northpoigainallur)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
------------------------
குறள் 101:
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது

விளக்கம்:
யாதொரு உதவியும் பிறர்க்கு செய்யாமல் அந்த பிறரால் உபகாரம் அடைந்தோர் இந்த விண்ணுலகம் மண்ணுலகத்தையும் தந்தாலும் அது ஈடாகாது.

Explanation in English:
One who has done nothing a help to others but has been helped a lot by others cannot compensate even if he gifts this sky and earth.
------------------------
குறள் 102:
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

விளக்கம்:
கஷ்ட்ட காலத்திலிருக்கும்பொழுது பெறும் உதவி சிறிதாக இருந்தாலும் அது இவ்வுலகை விட மிகப்பெரியது.

Explanation in English:
A help done by one timely at a crisis even if such is small is bigger than this world.
------------------------
குறள் 103:
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது

விளக்கம்:
எந்த பிரதிபலனையும் மனதில்கூட நினைக்காது ஆற்றும் உதவியானது கடலைவிட மிகப்பெரியது.

Explanation in English:
The stance of a help enthusiastically done by one without any expectation is bigger than ocean.
------------------------
குறள் 104:
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்

விளக்கம்:
ஒருவர் செய்த உதவி தினையளவாகினும், அவ்வுதவி செய்யப்பட்ட காலத்தை மனதில் வைத்து, பயனடைந்தவர் அது பனைமரத்தை காட்டிலும் உயரமானது என்பர்.

Explanation in English:
Even if the volume of help is a small size, the person who is helped would know that it is taller than a palm tree because of done at crisis time.
------------------------
குறள் 105:
உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து

விளக்கம்:
உதவியின் அளவு பெரிதோ சிறிதோ, உதவி அடைந்தவரின் பண்பை பொறுத்தே உதவியின் அளவுகோள் என்னவென்று அறியமுடியும்.

Explanation in English:
The type and volume of a help is not a matter but its scale and quality is categorised based on the morality of the person who is helped.
------------------------
குறள் 106:
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு

விளக்கம்:
குற்றமற்றவர்களை மறக்காமல் இருப்பதுபோல், தக்க நேரத்தில் உதவியவர்களை துறக்காமல் இருத்தல் வேண்டும்.

Explanation in English:
One shouldn't quit persons who had helped on time as if shouldn't forget those who are crimeless in society.
------------------------
குறள் 107:
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு

விளக்கம்:
துயரத்தின் பொழுது துணை நின்று உதவியவரின் நட்பை ஏழு பிறவி எடுத்தாலும் மறத்தல் ஆகாது.

Explanation in English:
One should never forget one's help done at the time of crisis even he gets born several times in the future
------------------------
குறள் 108:
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

விளக்கம்:
ஒருவர் செய்த உதவியை காலத்திற்கும் மறக்கக்கூடாது ஒருவேளை தீமைகள் செய்திருந்தால் அன்றே மறந்துவிடுவது நல்லது.

Explanation in English:
Forgetting helps done by one on time is not moral but the evils done by one should be forgotten on the spot.
------------------------
குறள் 109:
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்

விளக்கம்:
உதவி செய்தவர் பிறகொருகாலத்தில் கொடிய தீமை செய்தால் அவர் செய்த உதவியின் தரமும் கெட்டுபோகும்.

Explanation in English:
Even if one who had helped in the past does an extreme evil in the present, the tendency of his past help would lose its grade.
------------------------
குறள் 110:
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

விளக்கம்:
எந்த ஒரு அறத்தையும் மறந்துபோனவர்களுக்கு மன்னிப்பு கிடைக்கலாம் ஆனால் ஒருவர் காலத்தில் செய்த உதவியை மறந்தவர்களுக்கு மன்னிப்பு கிடைக்காது.

Explanation in English:
Even If one destroys at any respect of virtue may be pardoned but the stance of forgetting the helps done by one will never be pardoned.
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு.

 ஆங்கில மொழியின் இலக்கணம் -  சுத்த தமிழில் - எழுதியவர் வை.மகேந்திரன் 01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு. எத்தனையோ மொழிகள் உலகில் தொன்றுதொட்டு பேசப்பட்டு வந்தாலும் கி.பி 1000 -களில் முளைத்த ஆங்கிலம், உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு அத்தியாவசியமான மொழியாக கருதப்படுவது உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம். க்ரீக் லத்தீன் ஸ்பானிஷ் ஜெர்மனிக் பிரெஞ்ச் போன்ற மொழிகளின் கலவை இதில் இருப்பதால் ஆங்கிலம் ஒரு தனி அந்தஸ்தை பெற்றிருக்கக்கூடும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆங்கில மொழியை பற்றி ஒரு உண்மையான கூற்று என்ன தெரியுமா ? பார்ப்பதற்கு அதுவும் வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஆங்கிலம் கடினமாக தோன்றுகிறது ஆனால் இதை புழங்க ஆரம்பித்து விட்டால் இதைப்போல ஒரு எளிதான மொழி எங்கும் இல்லை என்கின்ற உணர்வு நிச்சயமாக தோன்றும். அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என்கின்றார்கள் மொழியியல் நிபுணர்கள். என்னை பொறுத்தவரையில் நான் அதை உள்ளபூர்வமாக உணர்கிறேன் . இந்த மொழியில் உள்ள இலக்கண கட்டமைப்புகள் எந்த மொழியிலும் காணப்படாதவை என்று கூறி விட முடியாது என்றாலும் ஆங்கில இலக்கண கட்டமைப்பு...

எத்தனை வார்த்தைகள் தெரிந்திருக்க வேண்டும், ஆங்கிலம் பேச?

It looks difficult but no any other is as easy as it is

 Hello.. Greetings to all. This is MAHENDIRAN, a trainer of English language for grown ups.  Saying frankly, I would express the real fact of tendency of English language whether it is difficult or easy.  Even here too I should have mentioned the word EASY in the first. Because the entire world thinks that it is a bit difficult, I too entered the word DIFFICULT in the first.  When we dig on the Earth for getting water, we dig for a moment and close the pit or leaving it because the water isn't gotten suddenly. And we start the same work, digging for water in another place in the same area. Almost all who learn English are doing the same process when they want to learn English as a language. As I said earlier, Do you know what the real fact in learning English language is? Surely English can never be taught or learned as other skills are.  One can adapt with English only by the way of catching it. I mean IT here is English.  Only by the way of listening and ...