அதிகாரம் 15 பிறனில் விழையாமை Chapter 15 No desiring others' spouse (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 15
பிறனில் விழையாமை 

CHAPTER 15
NO DESIRING OTHERS' SPOUSE 📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English written by 
Mahendiran V Northpoigainallur)

📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
------------------------
குறள் 141:
பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்தறம்பொருள் கண்டார்க ணில்

விளக்கம்:
அடுத்தவர் மனைக்கு (கணவன்/மனைவி) ஆசைப்படுவோர் அறனுக்கு முரணானவர் என்பதை கற்றோர் அறிவர்.

Explanation in English:
The characteristic of desiring other's spouse is against the morality. Well versed literates would know it.
------------------------
குறள் 142:
அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்

விளக்கம்:
பிறர் மனைக்கு ஒழுக்கத்திற்கு முரணாக ஆசைப்படும் செயலைப் போல கொடிய பாவம் உலகில் வேறெதுவுமில்லை.

Explanation in English:
There is no as such a worst sin in the world as desiring on other's spouse immorally.
------------------------
குறள் 143:
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்

விளக்கம்:
நம்பிக்கைக்குட்பட்டு அனுமதிக்கப்படுபவன் அனுமதித்தவனின் மனைவி மீது இச்சை கொள்வானானால், அவன் இறந்த உடலுக்கு சமம்.

Explanation in English:
If a person who is believed very much by another is desiring the another's wife in wrong way, such person is worse than dead body.
------------------------
குறள் 144:
எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்

விளக்கம்:
எத்தனைதான் உயர்வாய் இருந்து புகழ்பெற்றவராயிருந்தாலும் அவர் அடுத்தோர் மனையாளின் மேல் மோகம் கொண்டால் அவர் தன் தகுதி புகழ் அனைத்தும் மதிப்பற்று போகும்.

Explanation in English:
How far as one is prime and fame, if he wills to have other's spouse, his entire status is invalid.
------------------------
குறள் 145:
எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி

விளக்கம்:
எளிதான ஒன்று என்று எண்ணி பிறர் மனைவியின் மீது ஆசை கொள்வது தீர்க்க முடியாத பாவச்செயல்.

Explanation in English:
One who tries to have other's spouse by thinking that's an easy one will earn an unsoluable sin.

குறள் 146:
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்

விளக்கம்:
பிறர் மனை நோக்கி ஆசை கொள்வோர், பகை, பாவம், அச்சம் மற்றும் பழி ஆகிய இந்த நான்கிலிருந்து தப்பிக்கவே முடியாது.

Explanation in English:
One who wills to have other's spouse will never escape from four forms such as enemines, sin, fear and crime.
------------------------
குறள் 147:
அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன்

விளக்கம்:
எச்சூழலிலும் பிறர் மனைக்கு இச்சை கொள்ளாதவரே நல்லொழுக்கத்துடன் வாழ்பவராகிறார்.

Explanation in English:
Living with good disciplines means that not to will other's spouse at any circumstance.
------------------------
குறள் 148:
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனென்றோ ஆன்ற வொழுக்கு

விளக்கம்:
பிறர் மனை நோக்காத் தன்மை அறம் மட்டுமானதல்ல, மேன்மையான ஒழுக்கம் நிறைந்தது ஆகும்.

Explanation in English:
The stand of not willing other's spouse is not only virtuality but also an immense morality.
------------------------
குறள் 149:
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தார்

விளக்கம்:
பிறர்மனை பால் விரல் கூட  படா எண்ணம் கொண்டோரே பயம் காட்டும் கடல்சூழ்ந்த இப்புவியில் வாழத் தகுதியுடையவர்.

Explanation in English:
Only the man who even doesn't desire to touch other's spouse is fully eligible to live in the earth covered by fearful oceans.
------------------------
குறள் 150:
அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று

விளக்கம்:
பிறருக்கு உபகாரம் செய்யாதாகினும் பரவாயில்லை, அது ஒரு பொருட்டு அல்ல. ஆனால் பிறர்மனை பால் கனவிலும் ஆசை கொள்ளக் கூடாது.

Explanation in English:
Even if one hasn't done even a bit betterment to others, that is not a matter at all. But he shouldn't even think to desire other's wife.
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖

Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS