திருக்குறள் "அதிகாரம் 17 அழுக்காறாமை" "CHAPTER 17 NOT TO BEING JEALOUS" (Explanation in Tamil and English is written by Mahendiran.V Northpoigainallur)
அதிகாரம் 17 அழுக்காறாமை
CHAPTER 17 NOT TO BEING JEALOUS
📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது: வை.மகேந்திரன்.
(Explanation in Tamil and English is written by Mahendiran.V Northpoigainallur)
-------------------------
குறள் 161:
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு
தமிழ் விளக்கம்:
ஒருவர் ஒழுக்கமான வாழ்க்கைக்காக யார் மீதும் பொறாமை கொள்ளாத குணத்தை வழக்கமாக்கிகொள்ள வேண்டும்.
Explanation in English:
One should make a habitual activity not to having jealousy on any one for his moralitised life.
-------------------------
குறள் 162:
விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்
தமிழ் விளக்கம்:
பொறாமை கொள்ளாத குணத்தை காட்டிலும் மிகப்பெரிய சொத்து இவ்வுலகில் எதுவும் இல்லை.
Explanation in English:
No any other property is as big one as ones' having characteristic not to be jealous on others life.
-------------------------
குறள் 163:
அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்
தமிழ் விளக்கம்:
உருவாக்கும் திறனும் அறமும் இல்லாதவரே அடுத்தவரின் படைப்புகளை கண்டு பொறாமை கொள்கிறார்
Explanation in English:
Only the man who doesn't have sense of creativeness would have jealousy a lot when he sees other's skills.
-------------------------
குறள் 164:
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து
தமிழ் விளக்கம்:
பொறாமை எண்ணம் இல்லாத வாழ்வியல் முறையே ஒழுக்கமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்பதை சான்றோர்க்கு மட்டுமே தெரியும்.
Explanation in English:
Only good man knows that he can have moralities in all respects when he is away from the character of jealousy.
-------------------------
குறள் 165:
அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது
தமிழ் விளக்கம்:
பொறாமை கொள்ளும் குணத்தை காட்டிலும் மிகப்பெரிய எதிரி எதுவுமில்லை.
Explanation in English:
No any other thing is as the biggest enemy as having the character of jealousy in one's life.
-------------------------
குறள் 166:
கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉ மின்றிக் கெடும்
தமிழ் விளக்கம்:
ஒருவர் மற்றவர்களுக்கு செய்யும் உதவிகளை கண்டு பொறாமைபடுபவர்களுக்கு செல்வம் மற்றும் துணிமணி கூட மிஞ்சாது
Explanation in English:
Getting jealousy while one is helping others is evill trait. Such trait will pluck off all wealths and cloths.
-------------------------
குறள் 167:
அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்
தமிழ் விளக்கம்:
பொறாமைகாரர்களை செல்வத்திற்கு தெய்வமான லக்ஷ்மி திரும்பி கூட பார்க்க மாட்டாள்.
Explanation in English:
One who has jealousy would never be blessed by God of wealth Laksmi.
-------------------------
குறள் 168:
அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்
தமிழ் விளக்கம்:
பாவ காரியமான பொறாமை, ஒருவரை தீய வழியில் அழைத்துச் செல்வதுடன் அவருடைய செல்வத்தையே சீர்குலைத்துவிடும்.
Explanation in English:
The stance of having sinful jealousy will spoil one's wealth and will guide him to illy path.
-------------------------
குறள் 169:
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்
தமிழ் விளக்கம்:
பொறாமையுள்ளவர்களின் நல்வாழ்க்கையையும், நல்லவர்களின் கஷ்ட்டம் நிறைந்த வாழ்க்கையும் மறுசீராய்வு செய்யவேண்டும்.
Explanation in English:
The better life of jealousers and bad stance of virtual persons must be reviewed.
-------------------------
குறள் 170:
அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்
தமிழ் விளக்கம்:
பொறாமையுடையோர் வாழ்க்கையில் ஏற்றம் இருக்க வாய்ப்பில்லை அதுபோல பொறாமை இல்லாதோர் வாழ்க்கையில் இறக்கம் இருக்காது.
Explanation in English:
Jealousers would not ascend in their life, and those who don't have jealousy wouldn't descent in their life.
-------------------------
Explanation in Tamil and English
written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
(Copyright of this work is mine. Copying, plagiarising without my permission is prohibited. MAHENDIRAN V)
Comments
Post a Comment
To call for my visiting class, contact poigaimahi@gmai.com or WhatsApp 9842490745
Thanking you.