அதிகாரம் 16 பொறையுடைமை Chapter 16 HAVING PATIENCE (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 16 பொறையுடைமை
CHAPTER 16
HAVING PATIENCE
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V
Northpoigainallur)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
------------------------
குறள் 151:
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

விளக்கம்:
நிலத்தை தோண்டினாலும் நிலம் தாங்கிக் கொள்வதை போல பிறர் இகழ்ந்து பேசினாலும் பொறுமையாக இருப்பதே பேரறிவாகும்.

Explanation in English:
The good sense is that being quiet patient when one is sneering, as if the earth being quiet even if being dug
------------------------
குறள் 152:
பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
மறத்த லதனினும் நன்று

பிறர் தரும் தொல்லைகளை கண்டு பொறுமையாய் இருத்தல் நலம்தான் ஆயினும் அவற்றை மறந்துவிடுவது அதனினும் நன்று.

Explanation in English:
Although the stance of being patient is far better for life forgetting very immediately evils done by others is so great.
------------------------
குறள் 153:
இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை

விளக்கம்:
விருந்தோம்பல் செய்ய முடியாதது கொடுமையான வறுமை. அதேபோல், தீயவர்களைக் கடக்கும்போது பொறுமையாக இருப்பதுதான் ஒருவரின் பெரிய பலம்.

Explanation in English:
The cruel poverty is what being unable to hospitate. likewise one's big strength is what being patient with evil persons' overcoming.
------------------------
குறள் 154:
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்

விளக்கம்:
வாழ்க்கையில் பரிபூரண திருப்தி வேண்டுமாயின், எச்சூழலிலும் பொறுமையை கடைபிடிப்பது அவசியம்.

Explanation in English:
If one needs fulfillment in life he must have patience a lot in all respects.
------------------------
குறள் 155:
ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து

விளக்கம்:
பழிதீர்க்கும் நெஞ்சம் கொண்டோரை இவ்வுலகம் அறவே மதிக்காது. பொறுமை காப்போருக்கு தான் மகுடம் தானே வரும்.

Explanation in English:
Revenge wouldn't be respected by society ever but being patient would be crowned by the same society.
------------------------
குறள் 156:
ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்

விளக்கம்:
பழிச்செயல்கள் ஒருநாள் அல்லது இரு நாள் தீயவர்களால் பாராட்டப்படலாம் ஆனால் பொறுமை குணம் நிறைந்திருந்தால் வாழ்க்கை முழுதும் மகிழ்ச்சியாக வாழலாம்.

Explanation in English:
Action of revenge may get applause for only day but being patient will bring cheerfulness ever in life.
------------------------
குறள் 157:
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று

விளக்கம்:
ஒருவர் செய்த தீங்குக்கு பழிதீர்க்கிறேன் என்ற எண்ணத்தை மனதிற்குள் நினைக்காமல் இருப்பதே உலகின் மிகப்பெரிய பொறுமை குணமாகும்.

Explanation in English:
Being not to do any revenge as a reply for their illy activities is the biggest patience in the world
------------------------
குறள் 158:
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்

விளக்கம்:
அதீதமாக பொறுமையாக இருப்பவர்களுக்கு முன்னால் பிறரால் செய்யப்படும் தீமைகள் அனைத்தும் தோற்றுப்போகும்.

Explanation in English:
By being immensely patient, the cruel activities of others can be defeated.
------------------------
குறள் 159:
துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்

விளக்கம்:
பிறரின் தாழ்ந்த இகழ்ச்சியை பொறுத்து கொண்டு வாழும் நிலை, ஞானம் பெற்ற துறவிகளின் அந்தஸ்த்துக்கு இணையானதாகும்.

Explanation in English:
Keeping quiet and being so patient while being scolded  vulgarly by deadliers is like the status of sages.
------------------------
குறள் 160:
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொ னோற்பாரிற் பின்

விளக்கம்:
ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் தாங்கிக்கொண்டு பொறுமையாக வாழும் நிலைப்பாடு, பல நாட்கள் உண்ணாமல் விரதம் இருப்பதற்கு சமமாகும்.

Explanation in English:
The stance of one's being silent while being cruelly worded by others is greater than fasting without food for long time.
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS