அதிகாரம் 51 தெரிந்து தெளிதல் CHAPTER 51 TACTICS OF RECRUITMENT 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 51 தெரிந்து தெளிதல்
CHAPTER 51 TACTICS OF RECRUITMENT
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
------------------
குறள் 501:
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மன்னனாக தேர்ந்தெடுக்கப்பட  தகுதிப் பெற்றவன், அறம் செய்யத் தெரிந்தவனாகவும், பொருளை காத்து உயரச் செய்பவனாகவும், இன்பத்தில் மட்டுமே திளைக்க வேண்டுமென்ற எண்ணம் இல்லாதிருப்பவனாகவும், உயிருக்கு அஞ்சும் கோழைத்தனம் இல்லாதவனாகவும் இருத்தல் வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A king who is elected must be virtuous, and should know to protect and increase the wealth; shouldn't be a fellow to desire lust and shouldn't be a coward.
MAHENDIRAN V
------------------
குறள் 502:
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நற்குடியில் பிறந்து, குற்றம் புரியும் குணமில்லாது, தீயவை செய்ய வெட்க்கப்படும் உயரிய மனம் படைத்தவனே பதவிக்கு தகுதியானவனாவான்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Only a high-minded person who is born bred of good family, without guilt, and ashamed to do evil, deserves the position.
MAHENDIRAN V
------------------
குறள் 503:
அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மெத்த படித்து அறிவுக்கூர்மை பெற்றவராகினும், ஏதோ ஒன்றைப் பற்றி அவருக்கு அறியாமை இல்லாமல் இருக்காது.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even if one is well-educated and intelligent, It's not sure that he would be well to do in all. He might be an unknown on something.
MAHENDIRAN V
------------------
குறள் 504:
குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒருவனிடமுள்ள நற்குணங்களையும், குற்றம் சார்ந்த தீய குணங்களையும் ஆராய்ந்து அளவிட்டு எது பெரிது என்று கண்டபின்பே அவனை ஒரு பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
One should be selected for a position only after examining the merits and demerits of him and finding out what is great.
MAHENDIRAN V
------------------
குறள் 505:
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒருவரின் பெருமைமிகு செயலுக்கும் சிறுமைத்தனமான செயலுக்கும் அவர் தன் பிறப்பில் வந்த புத்தியே காரணம் ஆகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The trait of his birth is the cause of one's proudable deed and the deed of petty.
MAHENDIRAN V
------------------
குறள் 506:
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மக்கள் தொடர்பு நிலை மற்றும் சுற்றத்தார் உறவு நிலையில் பலமில்லாதாவர்கள், பந்தபாசம் அற்றவர்கள் ஆவார்கள் ஆதலால் அவர்கள் தலைமை பண்புக்கு தகுதியற்றவர்கள்.
வை.மகேந்திரன்

Explanation in English:
One who is not having a healthy relationship with public is not eligible to put on a post since he would not have an affection at a work.
MAHENDIRAN V
------------------
குறள் 507:
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அன்பின் காரணமாக அறிவிலாரை தெரிவு செய்தால் அறியாமை தான் விரிவடையும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If one places a fool person at a position by means of love and kind on him, only ill knowledge would increase there.
MAHENDIRAN V
------------------
குறள் 508:
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தகுதி இல்லாதவனை பற்று இல்லாதவனை தெரிந்தும் தேர்வு செய்தால், நாடும் கெடுவதுடன், வழிமுறைக்கும் அது துன்பம் தரும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If one places knowingly a person who is not affectionate at the work, not only it is bad for the nation but also it would spoil the society subsequently.
MAHENDIRAN V
------------------
குறள் 509:
தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தகுதியில்லா ஒருவரை தேர்ந்தெடுத்து விட்டால், அவரிடம் உள்ள திறமையை கண்டறிந்து அதற்குறிய பண்பில் அவரை அமர்த்துதல் வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Incase of selecting a person who is not eligible for a work, one who selects should find out the selected person's skills and utilise him based on such skill.
MAHENDIRAN V
------------------
குறள் 510:
தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தேராத ஒருவனை தேர்ந்தெடுத்து பணியிலும் அமர்த்திய பின் அந்நிலை குறித்து கவலையுறுவது மிகுந்த துன்பத்தை தரும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
After placing a weak person at a position, if one who selected him is worried out of the stance of the person whom he selected, it would cause a deep misery.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖

Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS