அதிகாரம் 52 தெரிந்து வினையாடல் CHAPTER 52 ACTING WISELY (OBTAINING WORKS WISELY) 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 52  தெரிந்து வினையாடல்
CHAPTER 52 ACTING WISELY
(OBTAINING WORKS WISELY)
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
------------------
குறள் 511:
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நற்செயல் எது தீயச் செயல் எது என அறிந்து நாட்டு நலம் கருதி நற்செயல் புரிபவனால் தான் நாடு நல்வழியில் ஆளப்படும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A country would be ruled well only by a king who knows to distinguish which is right and wrong acts for the sake of his nation.
MAHENDIRAN V
------------------
குறள் 512:
வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
ஆராய்வான் செய்க வினை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வருவாய்க்கான வழிகளை உருவாக்கி, மேம்படுத்தி, இடையூறுகளிருந்தால் அவற்றை களைந்து செய்யப்படும் செயலே சிறந்த செயல்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The good act is one which is done by one, searching sources for income, enhancing such, and knowing to crack the issues during such actions.
MAHENDIRAN V
------------------
குறள் 513:
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அன்பும் அறிவும் நிறைந்திருந்து பேராசை அறுத்து நல்லோரை அச்சமின்றி தேர்ந்தெடுக்கும் தகுதிகள் உள்ளவனே மன்னனாக தேர்ந்தெடுக்கப்பட லாயக்கானவன்.
வை.மகேந்திரன்

Explanation in English:
One who has kindness and wisdom, gave up greed, and knows to choose good people for work is eligible to be elected as a king.
MAHENDIRAN V
------------------
குறள் 514:
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நலம் செய்வார் என்று பகுத்தாராய்ந்து ஒருவரை பதவியில் அமர்த்தினாலும், செயல்களில் வினோதம் காட்டுபவர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Also there are persons who do their acts conservatively even if they were selected distinguishingly for better acts.
MAHENDIRAN V
------------------
குறள் 515:
அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
சிறந்தானென் றேவற்பாற் றன்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அறிவுடன் அறிந்து செயலாற்றும் ஒருவன் எதிரே நிற்க, செயல்பட தெரியாத யாரோ ஒருவனை சிறந்தவன் என கூறி அமரவைப்பது சிறப்பான செயல் அல்ல.
வை.மகேந்திரன்

Explanation in English:
It's not good one that choosing anonymous one, saying that he is good, while the actual good person is standing near.
MAHENDIRAN V
------------------
குறள் 516:
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த உணர்ந்து செயல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
செயலாற்றுபவனின் தரம் அறிந்து, செயலின் தன்மையையும் அறிந்து, செயலின் காலத்தையும் உணர்ந்து ஒரு செயலை செயல்பட வைப்பதே அறிவாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The stance of activating a work by knowing the quality of the person who does it and status of the work and time when to finish the work is wise one.
MAHENDIRAN V
------------------
குறள் 517:
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு செயலை செய்து முடிக்க  அச்செயல் மீது ஆர்வம் கொண்டு சிறப்பாய் செயலாற்றுபவனை தேர்ந்தெடுத்து அவனிடம் அச்செயலை ஒப்படைப்பதே அறிவார்ந்த நிர்வாகத்திற்கு அழகு.
வை.மகேந்திரன்

Explanation in English:
The wise of an admin is allotting a work to one who can do the work successfully with passion.
MAHENDIRAN V
------------------
குறள் 518:
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு செயலுக்குறியவனை தேர்ந்தெடுத்ததோடு அல்லாமல் அவன் அச்செயலில் சிறப்பாய் செய்யும் நிலையை ஏற்படுத்துவது நியமித்தவனின் கடமை.
வை.மகேந்திரன்

Explanation in English:
An admin precise duty is not only selecting an appropriate person for a work but also making the person to do such work pleasantly by providing suitable facilities.
MAHENDIRAN V
------------------
குறள் 519:
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பணியிலமர்ந்தவன் சிறப்பாய் செயல்பட்டுக்கொண்டிருக்க, அவனை தூற்றி துஷ்பிரயோகம் செய்தால் பணி தந்தவனை விட்டு திருமகள் விலகிவிடுவாள்.
வை.மகேந்திரன்

Explanation in English:
While a person who has been appointed for a work does such work so passionately, if he is criticised in back abusively by admin, the goddes of wealth would get away from the admin.
MAHENDIRAN V
------------------
குறள் 520:
நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நாடு செழிக்க வேண்டுமானால், நாட்டில் உழைப்போரின் மணம் வாடாமல் இருக்க, ஆக வேண்டிய செயல்களை ஒரு மன்னன் செய்யவேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If a king wants that his nation to be wealthy and powerful, he ought to take care in all respects for making his people who work hard for his nation be cheerful in all ways.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS