அதிகாரம் 54 பொச்சாவாமை CHAPTER 54 NON-OBLIVION 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 54  பொச்சாவாமை
CHAPTER 54
NON-OBLIVION
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
------------------
குறள் 531:
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கடுஞ்சினத்தால் விளையும் கெடுதலை விட களிப்புற இருக்கும்பொழுது ஏற்படும் மறதியே கொடுமையானது.
வை.மகேந்திரன்

Explanation in English:
Evil caused due to forgetting during pleasure is more miserable than the evil caused due to very much anger.
MAHENDIRAN V
------------------
குறள் 532:
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வறுமையால் தினமும் அறிவு  குன்றுவதுபோல்  நெகிழ்ந்திருந்து மறந்து போகும் நிலை ஒருவனின் புகழை கொன்றுவிடும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
As if the poverty injures one's life day to day, the stance of one's oblivioness will kill his pride.
MAHENDIRAN V
------------------
குறள் 533:
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்
தெப்பானூ லோர்க்குந் துணிவு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கற்றுணர்ந்தவர்களாயிருந்தாலும் கூட மறதியும் சோர்வும் உள்ளோருக்கு புகழும் பெருமையும் கிடைக்க வாய்ப்பே இல்லை
வை.மகேந்திரன்

Explanation in English:
Even if one is very much literate, if he has oblivioness and laziness, he would never get any victory or pride.
MAHENDIRAN V
------------------
குறள் 534:
அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நல் பதவியிலிருந்தும் மறதி என்றொன்று இருந்தால் அது
பலத்த பாதுகாப்பு இருந்தும் அச்சப்படும் நிலைக்கு ஒப்பாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even if one is in a good position on his career but if he is having the stance of oblivion, it is like the stance of fearing though one is protective mode.
MAHENDIRAN V
------------------
குறள் 535:
முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை
பின்னூ றிரங்கி விடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
துயரம் வரும் முன்னே அதற்கான தற்காப்பை  செய்ய மறப்பவன் துயரம் வந்த பின் வருந்தி யாது தான் பயன் ?
வை.மகேந்திரன்

Explanation in English:
If one is failing to protect himself before he meets misery and he is worried out after he meets out, it is meaningless.
MAHENDIRAN V
------------------
குறள் 536:
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்ப தில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
எக்காலத்திலும் எதையும் மறக்காத நிலையை போல ஒரு நன்மையான நிலை இவ்வுலகில் எதுவுமில்லை.
வை.மகேந்திரன்

Explanation in English:
There is no as any equallent goodness in the world as one is having the sense of nonoblivion at any circumstance.
MAHENDIRAN V
------------------
குறள் 537:
அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்
கருவியாற் போற்றிச் செயின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மறவா நிலை என்ற கருவியை பண்பாக ஒருவர் பெற்றிருப்பின், அவர் எந்த ஒரு அரியச் செயலையும் செய்யத் திறன் படைத்தவராவார்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If one is having the tool namely nonoblivioness as his trait, he would be able to do any rare acts.
MAHENDIRAN V
------------------
குறள் 538:
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா
திகழ்ந்தார்க் கெழுமையும் இல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சான்றோர்கள் இது நன்மை என்று சொல்லிச்சென்ற செயல்களை செய்யத் தவறியவர்களுக்கு ஏழு பிறப்பிலும் நன்மை கிடைக்காது.
வை.மகேந்திரன்

Explanation in English:
One who fails to follow up to do the acts as directed by literate experts lived in the past would never get any goodness even if he lives for seven generations.
MAHENDIRAN V
------------------
குறள் 539:
இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அதீத மகிழ்ச்சியில் இருப்போர், மகிழ்ச்சியின் திளைப்பில் கடமையாற்ற மறந்து அதனால் அழிந்தவர்களை நினைத்துப் பார்த்து, கடமையாற்ற மறவாதிருத்தல் வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
One who is very much pleasure and cheerful has to think about the people those who lost their good life because of their the sense of forgetting to do their duties during their enjoying happiness, and based on this lesson one not to forget to do  his duties.
MAHENDIRAN V
------------------
குறள் 540:
உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளிய துள்ளப் பெறின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு செயலை செய்து முடிக்கும் வரை எதையும் மறவாது செயலின் இலக்கை மட்டுமே மனதில் வைத்து செயல்படுவோர் எளிதில் அதில் வெற்றி பெருவார்.
வை.மகேந்திரன்

Explanation in English:
One who is traveling towards his objective without fouling the remembrance till he reaches his goal will get victory easily.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS