அதிகாரம் 53 சுற்றந் தழால் CHAPTER 53 RELATIONSHIP 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 53
சுற்றந் தழால்
CHAPTER 53
RELATIONSHIP
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
------------------
குறள் 521:
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வாழ்வில் ஒருவன் நலிந்து போனாலும், அவனது நற்செயல்களை கூறி பாராட்டுவது அவனது உறவுகள் மட்டுமே.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even if one goes to poverty, only relatives would talk about his prides saying his good acts.
MAHENDIRAN V
------------------
குறள் 522:
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உறவுகளுடன் அன்பாக ஒருவன் இருந்து விட்டால், அவனுக்கு செல்வநிலை உயரும். ஆக்கம் நிறைந்த வாழ்க்கை அமையும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If one has a good relationship with many by speaking good words, it is equallent to having an infinite wealth and the best life.
MAHENDIRAN V
------------------
குறள் 523:
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கரை இல்லாது குளம் நீர் நிறைந்திருந்து என்ன பயன்? அது போலதான் உறவுகளுடன் தொடர்பில்லாமல் வாழும் ஒருவனுடைய வாழ்க்கையும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If one doesn't have a good relationship with his relatives, that is meaning of a pond has full of water but shore.
MAHENDIRAN V
------------------
குறள் 524:
சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சுற்றம் உறவுகளுடம் கலந்து பேசி வாழ்வது பெருஞ்செல்வம் பெற்றிருப்பதற்கு சமம்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Having a healthy relationship with others is equallent to having more more money.
MAHENDIRAN V
------------------
குறள் 525:
கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உறவுகளுக்கு உதவி செய்து அன்புடன் பேசி வாழ்பவனை சுற்றத்தார் சூழ்ந்து நின்று பாதுகாப்பர்.
வை.மகேந்திரன்

Explanation in English:
One who has a good relationship by helping others with using sweet words would be covered by all protectively.
MAHENDIRAN V
------------------
குறள் 526:
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத் தில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சினம் தவிர்த்து, கொடைகள் பல புரிந்து வாழ்பவனுக்கு சுற்றத்தார் நிறைந்திருப்பது போல் வேறு எவருக்கும் இருக்க வாய்ப்பில்லை.
வை.மகேந்திரன்

Explanation in English:
No one can have a big amount of relations as one who is donating to people by giving up anger can have.
MAHENDIRAN V
------------------
குறள் 527:
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காகம், தனக்கு கிடைத்த உணவை மற்ற காகங்களையும் கூவி அழைத்து பங்கிட்டு உண்ணுவது போன்ற குணம் படைத்தோனுக்கு செல்வம் குன்றாது.
வை.மகேந்திரன்

Explanation in English:
The wealth wouldn't decrease to one who has the trait as if crow is  eager to call all crows to share its food when it's eating.
MAHENDIRAN V
------------------
குறள் 528:
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பொது நிலை பார்க்காது திறமையுள்ளவர்களுக்கே ஒரு அரசன் முதலிடம் தருவானேயானால், திறமையுடன் செயலாற்ற பலரும் முனைவார்கள்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If a king prefers only skillful persons among public to facilitate, many would forward to work skillfully.
MAHENDIRAN V
------------------
குறள் 529:
தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரண மின்றி வரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உறவாக இருந்து பழகி, காரணம் குறித்து ஒருவரிடமிருந்து பிரிய   நேரிட்டாலும், மறு நேரத்தில் காரணமின்றியே ஒன்றுசேர்வார்கள்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If some who behave good but go out from a king by means of reason, they would come and rejoin with the king without having reason.
MAHENDIRAN V
------------------
குறள் 530:
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந் தெண்ணிக் கொளல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காரணமின்றி பிரிந்து சென்ற உறவு / நட்பு, காரணம் கொண்டு உறவாட வந்தால், பகுத்தாராய்ந்து உள்ளே சேர்ப்பதே சிறந்த மன்னனுக்கு அழகு.
வை.மகேந்திரன்

Explanation in English:
If a Friendship that went out from a king without reason, later comes in to rejoin by means of a having reason, such should be examined precisely by the king. Only then he would be considered a clever King.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS