அதிகாரம் 79. நட்பு CHAPTER 79. FRIENDSHIP 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 79. நட்பு
CHAPTER 79. FRIENDSHIP
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 781:
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நட்பை போல அரிதானது எதுவுமில்லை. இனிய நட்பு  அரிதான செயல்களுக்கு பெரிய காவலாக அமையும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
None can be compared to the state of friendship. And the deep friendship would protect one in all respects.
MAHENDIRAN V
------------------
குறள் 782:
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நல்லோரிடம்/ அறிவுடையோரிடம் உள்ள நட்பு வளர்பிறை காலம் போன்று வளர்ந்து கொண்டிருக்கும் அல்லது வளர்த்துக்கொள்ளல் வேண்டும். தீயோரிடம் கொள்ளும் நட்பு, தேய்பிறை காலம் போன்று தேய்ந்து போகுதல் நலம்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The friendship with wisdom people would grow up like waxing crescent or has to raise up. And if the friendship with fools wans like the waning crescent, that's good.
MAHENDIRAN V
------------------
குறள் 783:
நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நன் நூல்களை தொடர்ந்து கற்பதனால் இன்பம் அடைவது போல் பண்பாளர்களுடன் பழக பழக மகிழ்ச்சி தானாய் கிடைக்கும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
As if getting pleasance while reading good books, behaving to ones who have good characteristics would cause much happiness.
MAHENDIRAN V
------------------
குறள் 784:
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சிரித்து பேசி மகிழ்வதல்ல நட்பு. நட்புக்குரியவன் நெறிமுறை மாறினால் திருத்த முற்படுவதே சிறந்த நட்பு.
வை.மகேந்திரன்

Explanation in English:
Friendship is not only for passing time by chating but turning him to good way if he fouls moralities.
MAHENDIRAN V
------------------
குறள் 785:
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒத்த மனதும் ஒருமித்த கருத்தும் ஒரே யோசனையும் இருப்பதே ஆழ்ந்த நட்பு. ஆழ்ந்து பழகி அடிக்கடி சந்திப்பதனால் வருவதல்ல நட்பு.
வை.மகேந்திரன்

Explanation in English:
Meeting often and speaking frequently is not meaning a good Friendship. But having similar frequencies and parellel thoughts  would make more depth in friendship. 
MAHENDIRAN V
------------------
குறள் 786:
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
முகம் மலர்ந்து பேசுவது பழகுவது அல்ல நட்பு. அகம் குளிர மகிழ்ச்சியில் மலர்ந்து திளைக்க வைப்பதே நட்பு.
வை.மகேந்திரன்

Explanation in English:
Just smiling by face and speaking sweetly is not a deep friendship. Showing love enthuciasticlly is the real-icon of the good friendship.
MAHENDIRAN V
------------------
குறள் 787:
அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நண்பன், பழி வழியில் சென்றால் இழுத்து நல்வழி படுத்துவதும், விதி வழியில் தீமை கண்டால் அதில் பங்குகொள்வதே சிறந்த நட்பு.
வை.மகேந்திரன்

Explanation in English:
The best friendship is that pulling back a friend to the right way if he fouls morality, and taking part with him if he falls in miseries due to fate.
MAHENDIRAN V
------------------
குறள் 788:
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உடை களைந்தால், உடனே கை சென்று சரி செய்வது போல், நண்பனுக்கு துன்பம் வந்து விட்டால் ஓடிச்சென்று உதவுவதே நட்பு.
வை.மகேந்திரன்

Explanation in English:
As if the hand goes immediately to set right if the dress slips unfortunately, one should take rapid action to help to a friend if he is adversed.
MAHENDIRAN V
------------------
குறள் 789:
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு பொழுதும் பிரியாது வேறுபாடும் காட்டாது ஒருவருக்கொருவர் உவகையில் உயர்ந்து நிற்பதே உண்மையான நட்பு.
வை.மகேந்திரன்

Explanation in English:
The state of not leaving with each other at any time and being indifferently and helping with each other passionately is the best friendship.
MAHENDIRAN V
------------------
குறள் 790:
இனையர் இவரெமக் கின்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நட்பின் தன்மையை அளவிட்டு பேசுவதும், உவகையின் காரணத்தை புகழ்ந்துரைத்து பழகுவதும் நட்பின் ஆழத்தை கெடுக்கும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Measuring the depth of friendship and applauding with each other for their sharing help to one and another would damage the friendship.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS