Skip to main content

அதிகாரம் 81. பழைமை CHAPTER 81. FAMILIARITY/ OLDNESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 81. பழைமை
CHAPTER 81.  FAMILIARITY/ OLDNESS
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 801:
பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நாட்கள் மாறினாலும் எதுவும் மாறாமல் எதையும் மாற்றாமல் பழகும் நட்பே பழைமை எனப்படும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Although days are passing, behaving with one without changing anything and keeping deeply the intimacy on friendship is called true oldness or familiarity.
MAHENDIRAN V
------------------
குறள் 802:
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்
குப்பாதல் சான்றோர் கடன்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நண்பன் உரிமையாய் ஒன்றை செய்வதே நட்பிற்கு இலக்கணம். அதை எண்ணி பெருமிதம் கொள்ளல் வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A thing done by a friend with rights is the purity of Friendship. One should most welcome such activity.
MAHENDIRAN V
------------------
குறள் 803:
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங் கமையாக் கடை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நட்பாய் இருப்பவர் நமக்கு செய்வது ஏற்புடையதில்லை ஆயினும் நன்மைக்கே அது, அதை நாமே செய்தோம் என எடுத்துக்கொள்ளல் சிறந்த நட்பை பாதுகாத்தல் ஆகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even if an activity done by our friend is found to be not agreeable in our point of view, we should broadly take such activity as that was done by us and for us.
MAHENDIRAN V
------------------
குறள் 804:
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நட்பாய் உள்ளவர், நாம் கேளாமலே உரிமையாய் ஒன்றை செய்யுங்கால் அதை விரும்பி ஏற்றுகொண்டால் நாம் அறிஞராய் ஆகிறோம்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If an activity is done by our friend interfered without our plead, if we take that willingly, we are of course a genius.
MAHENDIRAN V
------------------
குறள் 805:
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நண்பராக இருப்பவர் செய்தது வருந்தக்கூடியதானாலும் அதை தற்செயலாக உரிமையில் செய்து விட்டார் என்ற மனப்போக்கில் அதை எடுத்து கொள்ள வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even if an activity done by our friend causes some interruption to us, we should consider that such activity is done by him because of intimacy put on us.
MAHENDIRAN V
------------------
குறள் 806:
எல்லைக்கண் நின்றார் துறவார் தெலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒழுக்கத்துடன், இடைவெளிவிட்டு பல நாள் பழகிய நட்பு இனிதாய் இருந்திட்டதால், அவரால் தொல்லைகள் வந்தாலும் கூட,  நல்லோர் அந்நட்பை கைவிடமாட்டார்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If the distanced and virtual friend's friendshipness is pleasant, good men will not give up his friendship even if meeting some troubles from him.
MAHENDIRAN V
------------------
குறள் 807:
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நண்பரின் செயல் ஒருவேளை நமக்கு கேடாய் இருந்தாலும் நட்பின் பழைமையை கருதி நட்பை அவசரப்பட்டு நிறுத்திக் கொள்ள கூடாது.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even though our friend's activity causes some miseries unfortunately, we shouldn't break up the friendship with him because of considering the intimacy and familiarity put on him.
MAHENDIRAN V
------------------
குறள் 808:
கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நண்பர் பிழை செய்து அதை பிறர் வந்து சொல்ல, அதை கோளாமல் இருப்பவர் நல்லார். அந்நண்பர் பிழை செய்தது நன் நாளாக இருக்கலாம்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If one burns up about one's friend's fault to one, if the listener doesn't care of that, that's great. The day of fault done by him might be good to him.
MAHENDIRAN V
------------------
குறள் 809:
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பகையே இல்லாமல் தொன்றுதொட்டு தொடரும் நட்பை உலகம் உவந்து போற்றும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If a friendship is going on without struck for infinite years, the world will forward to applaud the stance.
MAHENDIRAN V
------------------
குறள் 810:
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நெடுநாள் நண்பரவர் பிழை செய்தாலும் பொறுத்து, நட்பை தொடருங்கால் பகைவரும் இத்தன்மையை கண்டு பாராட்டுவர்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If one resumes the friendship with a long time friend patiently despite such friend is doing fault a lot, even enemy too would praise that stance.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு.

 ஆங்கில மொழியின் இலக்கணம் -  சுத்த தமிழில் - எழுதியவர் வை.மகேந்திரன் 01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு. எத்தனையோ மொழிகள் உலகில் தொன்றுதொட்டு பேசப்பட்டு வந்தாலும் கி.பி 1000 -களில் முளைத்த ஆங்கிலம், உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு அத்தியாவசியமான மொழியாக கருதப்படுவது உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம். க்ரீக் லத்தீன் ஸ்பானிஷ் ஜெர்மனிக் பிரெஞ்ச் போன்ற மொழிகளின் கலவை இதில் இருப்பதால் ஆங்கிலம் ஒரு தனி அந்தஸ்தை பெற்றிருக்கக்கூடும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆங்கில மொழியை பற்றி ஒரு உண்மையான கூற்று என்ன தெரியுமா ? பார்ப்பதற்கு அதுவும் வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஆங்கிலம் கடினமாக தோன்றுகிறது ஆனால் இதை புழங்க ஆரம்பித்து விட்டால் இதைப்போல ஒரு எளிதான மொழி எங்கும் இல்லை என்கின்ற உணர்வு நிச்சயமாக தோன்றும். அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என்கின்றார்கள் மொழியியல் நிபுணர்கள். என்னை பொறுத்தவரையில் நான் அதை உள்ளபூர்வமாக உணர்கிறேன் . இந்த மொழியில் உள்ள இலக்கண கட்டமைப்புகள் எந்த மொழியிலும் காணப்படாதவை என்று கூறி விட முடியாது என்றாலும் ஆங்கில இலக்கண கட்டமைப்பு...

Need our seminar programme at your college?

Dear all, (This announcement is only for Engineering colleges) Now you can avail our seminar in your venue itself against your invitation. If you wish to put a programme aiming to boost your final year students of Engineering streams in communication skills and for enabling them to crack job interviews, and to make them know to balance the gape between academy and career, you may contact me.  I can be scheduling date and time any two hours for the seminar depending upon the availability of my hours. Likely the following topics shall be covered and mentored to your students.  How to balance the gape between the terms of academy and career? What's the real communication?  How to crack job interviews? The remuneration for my conducting this programme is variable based on the distance. For more details, please contact me by a call or WhatsApp or Email. Thanking you MAHENDIRAN V A VISITING PROFESSOR OF COMMUNICATION SKILLS AND SOFT SKILLS. MOTIVATIONAL SPEAKER NAGAPATTINAM W.A...

திருக்குறள் அதிகாரம் 118. கண் விதுப்பழிதல் CHAPTER 118. EYES ARE REALISING THE DEPTH OF MY LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள் அதிகாரம் 118. கண் விதுப்பழிதல் CHAPTER 118. EYES ARE REALISING THE DEPTH OF MY LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of  mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1171: கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யாங்கண் டது - தெய்வப்புலவர் விளக்கம்: கண்டதால் தானே இன்பமாக கொல்லும் இந்த காதல் ஏற்பட்டது? அவரை காண விடு என அந்த கண்கள் இப்பொழுது கெஞ்சுவது தான் ஏனோ! - வை.மகேந்திரன் Explanation in English: Because the eyes saw him and caused me the love on him. Being so, Why are those eyes begging me that I have to let them to see him again? - MAHENDIRAN V ------------------ குறள் 1172: தெரிந்துணரா நோக்கிய உண்க...