அதிகாரம் 78 படைச்செருக்கு CHAPTER 78 THE PRIDES OF ARMY MEN 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 78
படைச்செருக்கு
CHAPTER 78
THE PRIDES OF ARMY MEN
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 771:
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்னின்று கல்நின் றவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
என் தலைவனிடம் உங்கள் வீரத்தை காட்டாதீர்கள்; அப்படி காட்டிய பலர் ஆங்காங்கே கல் சிலையாய் நிற்கின்றனர் அறிவீரா?-என்று ஒரு வீரன் செருக்காய் முழங்க வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Hey, Dont play with my king by your wrong game; there were many stood up as statues as they had played like you. A valient soldier has to make hurray like above to enemy. 
MAHENDIRAN V
------------------
குறள் 772:
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சிறு முயல் மீது தப்பாது அம்பெய்தி வீழ்த்துவதை காட்டிலும், பெரும் யானை மீது எய்தி குறிதவறினாலும் பரவாயில்லை. அது தான் வீரம்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The true valiance is rather shooting a big elephant by arrow despite the aim fouls, than killing accurately by arrowing a poor rabbit .
MAHENDIRAN V
------------------
குறள் 773:
பேராண்மை என்ப தறுகனொன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பகைவனிடம் வீரம் காட்டி வீழ்த்துவது ஆண்மையின் அடையாளம் தான் என்றாலும், பகைவனின் இயற்கையான துன்பத்தை கண்டு இரக்கம் காட்டுவது ஆண்மையின் மகத்துவம் ஆகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even though winning enemy by showing valiance is the icon of masculinity, showing sympathy on him when he is adverse is the feature of masculinity.
MAHENDIRAN V
------------------
குறள் 774:
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கையிலிருந்த வேல் ஒன்றை எதிர்த்து வந்த யானைமேல்  வீசிய பின், அடுத்த தாக்குதலுக்கு வேல் தேடி அங்கும் இங்கும் அலையமாட்டான் நல்வீரன். தன் மார்பில் பாய்ந்திருக்கும் வேலை பிடுங்கி எறிந்து மகிழ்வான் எதிரியை தாக்க.
வை.மகேந்திரன்

Explanation in English:
After throwing a jauline to attack an elephant that comes to kill a hero, he wouldn't waste his time to search out here and there for the next jauline, he would pluck out the jauline pleasantly from his body that was stuck on his chest and wake up to attack.
MAHENDIRAN V
------------------
குறள் 775:
விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஓட்டன்றோ வன்க ணவர்க்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
விழித்த கண்ணோடு எதிரி மேல் வேல் எறிந்து பின் கண் இமை மூடுங்கால், இமைப்பொழுதில் எதிரி வேல் எறிய வாய்ப்பு கொடுத்ததாகிவிடும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Hero shouldn't close his eyes as soon as throwing jauline on enemy. It may be like giving an opportunity to enemy to re-throw it on hero.
MAHENDIRAN V
------------------
குறள் 776:
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் நாளை எடுத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தான் போர் புரிந்த நாட்களை கணக்கிடும் வீரன், தான் காயம் படா நாட்கள் அதில் இருந்தால் வருந்துவான் அவன்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A valient soldier would be worried out if there is no wounded patch on his body when he counts the days of war in the rest time.
MAHENDIRAN V
------------------
குறள் 777:
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
புகழை மட்டும் விரும்பி ஆனாலும் உயிர் மீது ஆசையின்றி போர் புரியும் நிலைத்திருக்கும் வீரன் தன் காலில் வீரக்கழல் கட்டிக்கொள்பவனாவான்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A valient man would be considered that he has worn anklet as a symbol of valiance if he is fighting for prides and no willing to be alive.
MAHENDIRAN V
------------------
குறள் 778:
உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினுஞ்சீர் குன்றல் இலர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உயிர் பயமின்றி போரிடும் வீரனை, போர் வேண்டாம் என்று தலைவன் சினத்தால் அதட்டினாலும், தன் வீரத்தின் சீற்றத்தை விட்டு விடமாட்டான் நல் வீரன்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even if the king orders to stop the war, a brave valiant man wouldn't lose his sprit of valiance during war. 
MAHENDIRAN V
------------------
குறள் 779:
இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
பிழைத்த தொறுக்கிற் பவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சாவேன் என்று சூளுரைத்த வீரன் போரில் வென்றோ தோற்றோ பிழைத்திருந்தால், அவனை இகழ்வது அபத்தம்.
வை.மகேந்திரன்

Explanation in English:
It is utter fault if one criticises a soldier who hasn't died during war but had pledged himself that he would sacrifice his live during war.
MAHENDIRAN V
------------------
குறள் 780:
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா
டிரந்துகோட் டக்க துடைத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
போரின் பொழுது, தன் வீரர்களின் நன்றியுணர்ச்சியால் கண்களில் நீர்வடிய பார்த்து நிற்கும் அரசனின் கண்முன் சாவ துணிவது ஒரு வீரனின் போர் தர்மம்.
வை.மகேந்திரன்

Explanation in English:
In front of the king who is tearing because the sense of gratitude of his valiant soldiers during war, if a soldier dares even for dying, that means war dharma.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS