திருக்குறள். அதிகாரம் 100. பண்புடைமை CHAPTER 100. HAVING GOOD MANNERISM 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.
அதிகாரம் 100. பண்புடைமை
CHAPTER 100.
HAVING GOOD MANNERISM
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 991:
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒருவர் இனிமையாய், எண்களை போல் எளிதாய் எவரிடத்திலும் பழகும் பாங்கே பண்புடைமையாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The state of one that one  behaves so kindly and easily like reading numbers with whomever is known as good manners.
- MAHENDIRAN V
------------------
குறள் 992:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நற்குடியில் பிறந்ததற்கான இலக்கணத்துடன் வாழ்வது, நல்வழியில் அன்புடன் அனைவரிடத்திலும் பழகுவது இவ்விரண்டும் அன்புடைமையின் இலக்கணங்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Living according the status of being born in noble family, and behaving with others so benevolently are the grammar of the good trait.
- MAHENDIRAN V
------------------
குறள் 993:
உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உருவத்தில் தோற்றத்தில் ஒருவருடன் ஒத்திருப்பது ஒற்றுமையல்ல. உள்ளத்தில் வேற்றுமை எண்ணம் இல்லாதிருத்தலே இணைபிரியா ஒற்றுமையாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The real resemblance of the twos doesn't mean similar appearance but it means the similar frequency in mind.
- MAHENDIRAN V
------------------
குறள் 994:
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புள ராட்டும் உலகு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நீதியை காத்து நிற்கும் நெறிமுறைகளுடனும் அறம் செய்யும் விரும்பி பிறர்க்கு உதவும் வகையிலும்  வாழ்பவரை இவ்வுலகம் போற்றும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The world would praise ones who  is living justicious and helping others morally for they getting benifits. 
- MAHENDIRAN V
------------------
குறள் 995:
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நகைச்சுவைக்காகக் கூட  பிறரை இகழ்தல் துன்பம் தருவிக்கக் கூடியது என்பதை அறிந்து, பகைவனானாலும் பண்பறிந்து பழகுபவரே பண்புடைமைக்கு சொந்தக்காரர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Shouldn't blame others even for fun. One who behaves even with enemies by knowing good manners is the real trait haver.
- MAHENDIRAN V
------------------
குறள் 996:
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சிறந்த பண்புடையோர் நிறைந்திருப்பதால் தான் இவ்வுலகம் இனிதாக இயங்குகிறது, இல்லையேல், மண்ணுக்குள் புதைந்திருக்கும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Only because of living of great traited persons, this world is functioning pleasantly. Otherwise, it would have got burried under the earth.
- MAHENDIRAN V
------------------
குறள் 997:
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அரம் போன்ற கூர்மையான அறிவு உள்ளவராகினும், மக்களிடம் மனித நேயம் காட்ட தெரியாதவர் மரத்திற்கு ஒப்பானவராவார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even though one is being intelligent like a sharp saw, if he doesn't know to show humanism to others, he is equallent to a tree.
- MAHENDIRAN V
------------------
குறள் 998:
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நட்பற்ற பகைவர் தீச்செயல்கள் செய்தாலும், அவர்களிடம் பண்பற்ற முறையில் நடந்துகொள்வதும் ஒருவித இழுக்கே.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one behaves un traitedly even if the one's enemies are doing miseries to him, that is also a dirty manner.
- MAHENDIRAN V
------------------
குறள் 999:
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிறருடன் பழகி நெகிழ்ந்து பண்புடன் இருக்க தெரியாதவர்களுக்கு, பகல் பொழுதும் இருள் சூழ்ந்தே காணப்படும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
To those who don't know to behave traitedly with kindness with others, the day time too would be looking like dark.
- MAHENDIRAN V
------------------
குறள் 1000:
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பண்பில்லாதவனிடம் உள்ள மட்டற்றசெல்வம் என்பது, கலம் குலைந்துபோன  பாத்திரத்தில் ஊற்றப்பட்ட நல்ல பால் திரிந்து போனது போலத்தான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Having a big wealth of one who is ill-traited is equallent to the good milk becomes soured milk because of having poured it in the dirty vessel.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖

Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS