திருக்குறள். அதிகாரம் 99. சான்றாண்மை CHAPTER 99. THE PERFECTNESS OF THE GREAT MEN 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.
அதிகாரம் 99. சான்றாண்மை
CHAPTER 99.
THE PERFECTNESS OF THE GREAT MEN
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 981:
கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு கடமையை, 'இது தான் நாம் செய்யத்தகுந்த பணி' என மணமுவந்து ஏற்று திறப்பட செய்ய முயற்சிப்போருக்கு நல்ல குணாதியங்கள் இருப்பது இயல்பு.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One who takes a work enthusiastically that it is his prime duty and tries to complete successfully is always having very great traits.
- MAHENDIRAN V
------------------
குறள் 982:
குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத் துள்ளதூஉ மன்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சிறந்த பண்புகளை கொண்ட குணநலமே சான்றோரை பெருமை படுத்தும் மற்ற நலன்கள் எல்லாம் அதற்கு பிறகே.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Only the state of having great traits would bear prides a lot to the perfect men. Other goodwills are put next to that.
- MAHENDIRAN V
------------------
குறள் 983:
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ
டைந்துசால் பூன்றிய தூண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அன்பு, நாணம், உதவும் மனப்பான்மை, தயவுதாட்சண்யம், வாய்மை - இவை ஐந்தும் சிறந்த ஆண்மைக்கு தூண்களாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The main Pillers of perfect men are, kindness, modesty, helping tendency, face respect and honesty.
- MAHENDIRAN V
------------------
குறள் 984:
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உயிர் வதை செய்யாமை தவத்திலும் சிறந்தது. பிறர் குறையை கூறாதிருப்பது ஆண்மைக்கு சிறந்தது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Not to be killing lives is greater than the penance. The state of not talking about the drawbacks of others is the greatness of perfect men.
- MAHENDIRAN V
------------------
குறள் 985:
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஆற்றலின் ஆற்றல் பணிவுடன் இருத்தல். சான்றாண்மையின் ஆற்றல் பகைவரை நட்பாக்குதல்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The strength of effort is being humble. The strength of great men is, making enemy to be a friend.
- MAHENDIRAN V
------------------
குறள் 986:
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
எளியோரிடம் தோற்றுவிட்டால், வாதிடாமல், மனம் உவந்து தோல்வியை ஒப்புக் கொள்வதும் சான்றாண்மையே.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Incase of getting failure with weaker, the state of solemnly consenting such failure is too is known as greatness.
.- MAHENDIRAN V
------------------
குறள் 987:
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒருவர் துன்பம் கொடுத்திருந்தாலும், அவருக்கு உதவி செய்யாமல் போகும் பண்பு சான்றாண்மையாகாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even though one had paid misery, the state of not helping him is not meant as perfectness.
- MAHENDIRAN V
------------------
குறள் 988:
இன்மை ஒருவற் கிளிவன்று சால்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சிறந்த ஆண்மை பெற்று நற்பண்பு இருந்தால்  போதும், வறுமையும் அவனைக் கண்டு அஞ்சும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If a perfect man has gotten all the best traits, even the poverty too would be afraid of nearing to him.
- MAHENDIRAN V
------------------
குறள் 989:
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி யெனப்படு வார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சான்றாண்மை பெற்று கடல் அளவு சாதிக்கும் வல்லவர்கள், வையகமே மாறினாலும், தன் தரத்தை மாற்றிக்கொள்ளார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The most great perfect men who could achieve as far as the size of ocean would never change their quality even if the Earth changes its turns.
- MAHENDIRAN V
------------------
குறள் 990:
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான்
தாங்காது மன்னோ பொறை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சான்றோரின் சான்றாண்மை விலகுங்கால், இவ்வையகமே  வலிமையிழந்ததாக கருதப்படும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If the perfectness leaves out from the great men, the entire world would be considered as strengthless.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS