Skip to main content

திருக்குறள். அதிகாரம் 102. நாணுடைமை CHAPTER 102. SHAME / MODESTY / SHYNESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.
அதிகாரம் 102. நாணுடைமை
CHAPTER 102.
SHAME / MODESTY / SHYNESS
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 1011:
கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இழிச் செயல் செய்பவன் சமூகத்தில் வெட்கப்படுவது வேறு. நெற்றி நிறை அழகுப் பெண் இயல்பாக வெட்கப்படுவது வேறு. வெட்கம் என்ற வார்த்தையினால் இரண்டும் ஒன்றாகிவிடாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The shamefulness attained by one because of his having done evil activities to society and the shyness felt by a pretty woman who has a beautiful forehead aren't same. The first one is considered as dirty and the second one is pretty.
- MAHENDIRAN V
------------------
குறள் 1012:
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உணவு உடை உள்ளிட்ட அனைத்தும் அனைவருக்கும் பொதுவானது. ஆனால், நாணம் மட்டும்  நல்ல மனிதர்களின் உடைமையாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Food and clothe is common to all living beings but shyness is the great sense had by only good people.
- MAHENDIRAN V
------------------
குறள் 1013:
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
நன்மை குறித்தது சால்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உயிர் உடலுடன் தான் இணைந்து நிற்கும். அது போலத்தான், நாணமும் நற்குனம் உயர்ந்த பண்புள்ளோரிடத்தில் தான் இருக்கும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Live is merged with body is well known. Likewise, shyness too is merged with the great traited persons.
- MAHENDIRAN V
------------------
குறள் 1014:
அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்
பிணியன்றோ பீடு நடை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நாணம் என்ற நற்குணத்தை ஆபரணமாக  பெற்றிருப்பதால் தான் சான்றோர்களால் பீடுநடை போடமுடிகிறது. நாணம் என்பது இல்லையேல், அது இழிவு என்பதை அறிவார்கள் அவர்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Only because the great wisdomed are having the sense of shamefulness or modesty as an ornament, they could walk straightly infront of society. They clearly know if there is no such senses it means degraceful.
- MAHENDIRAN V
------------------
குறள் 1015:
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்
குறைபதி என்னும் உலகு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தன் பழிக்காக நாணுதல் ஒரு பெரிய விஷயமல்ல. பிறரின் பழியை கண்டு ஒருவன் நாணம் கொள்கிறார் என்றால் அவரை இவ்வுலகம் பெரிதும் போற்றும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one is getting shy because of his illy act, that is not a matter, but if the one gets shy due to other's degraded activity, the world would praise him.
- MAHENDIRAN V
------------------
குறள் 1016:
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பெருமக்கள், தன் நற்குணங்களுக்கு நாணமே வேலி என்றும் இவ்வுலகில் அது போன்ற பாதுகாப்பு பிற எதுவும் இல்லை என்பர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The great persons would comment that only the trait of shy is the protection for one's life and no anything can be compared to that.
- MAHENDIRAN V
------------------
குறள் 1017:
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நாணமே பெரிது என்று கருதுபவர்கள் உயிரை துச்சமாக நினைப்பர். உயிரை காக்க மானத்தை அடகு வைப்போர் வெட்கமில்லாதவர்களாவார்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Those who think shame is great will think life is trivial. Those who mortgage their honour to save their lives are shameless.
- MAHENDIRAN V
------------------
குறள் 1018:
பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்
அறநாணத் தக்க துடைத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிறர் பார்த்து கை கொட்டி சிரிக்கும் அளவுக்கு வெட்கக்கேடான செயல் புரிந்த ஒருவன், கொஞ்சமும் வெட்கமின்றி வலம் வந்தானானால், வெட்கமே அவனை விட்டு வெட்கி விலகி விடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one has done a very shameful activity but walks on street shamelessly, even the shyness would get away from him with shame.
- MAHENDIRAN V
------------------
குறள் 1019:
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கொள்கை குன்றி நடப்பவனுக்கு குலப்பெருமை கெட்டுவிடும். மேலும் அது கண்டு வெட்காமல் இருப்பவனுக்கு நலமனைத்தும் கெடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One whose principles are found to be bad in life would lose the prides if his family. And if he is not shameful for that act, all of his goodness would be collapsed.
- MAHENDIRAN V
------------------
குறள் 1020:
நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வெட்கம் என்ற ஒன்றே இல்லாமல் நடமாடுபவன், கயறு கட்டி இழுத்தாட வைக்கும் மரப்பாச்சி பொம்மைக்கு ஒப்பானவனாவான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One who behaves in life without even a bit of shy is equallent to a wooden toy played by roping just for showing that it has live.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு.

 ஆங்கில மொழியின் இலக்கணம் -  சுத்த தமிழில் - எழுதியவர் வை.மகேந்திரன் 01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு. எத்தனையோ மொழிகள் உலகில் தொன்றுதொட்டு பேசப்பட்டு வந்தாலும் கி.பி 1000 -களில் முளைத்த ஆங்கிலம், உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு அத்தியாவசியமான மொழியாக கருதப்படுவது உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம். க்ரீக் லத்தீன் ஸ்பானிஷ் ஜெர்மனிக் பிரெஞ்ச் போன்ற மொழிகளின் கலவை இதில் இருப்பதால் ஆங்கிலம் ஒரு தனி அந்தஸ்தை பெற்றிருக்கக்கூடும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆங்கில மொழியை பற்றி ஒரு உண்மையான கூற்று என்ன தெரியுமா ? பார்ப்பதற்கு அதுவும் வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஆங்கிலம் கடினமாக தோன்றுகிறது ஆனால் இதை புழங்க ஆரம்பித்து விட்டால் இதைப்போல ஒரு எளிதான மொழி எங்கும் இல்லை என்கின்ற உணர்வு நிச்சயமாக தோன்றும். அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என்கின்றார்கள் மொழியியல் நிபுணர்கள். என்னை பொறுத்தவரையில் நான் அதை உள்ளபூர்வமாக உணர்கிறேன் . இந்த மொழியில் உள்ள இலக்கண கட்டமைப்புகள் எந்த மொழியிலும் காணப்படாதவை என்று கூறி விட முடியாது என்றாலும் ஆங்கில இலக்கண கட்டமைப்பு...

Need our seminar programme at your college?

Dear all, (This announcement is only for Engineering colleges) Now you can avail our seminar in your venue itself against your invitation. If you wish to put a programme aiming to boost your final year students of Engineering streams in communication skills and for enabling them to crack job interviews, and to make them know to balance the gape between academy and career, you may contact me.  I can be scheduling date and time any two hours for the seminar depending upon the availability of my hours. Likely the following topics shall be covered and mentored to your students.  How to balance the gape between the terms of academy and career? What's the real communication?  How to crack job interviews? The remuneration for my conducting this programme is variable based on the distance. For more details, please contact me by a call or WhatsApp or Email. Thanking you MAHENDIRAN V A VISITING PROFESSOR OF COMMUNICATION SKILLS AND SOFT SKILLS. MOTIVATIONAL SPEAKER NAGAPATTINAM W.A...

திருக்குறள் அதிகாரம் 118. கண் விதுப்பழிதல் CHAPTER 118. EYES ARE REALISING THE DEPTH OF MY LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள் அதிகாரம் 118. கண் விதுப்பழிதல் CHAPTER 118. EYES ARE REALISING THE DEPTH OF MY LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of  mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1171: கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யாங்கண் டது - தெய்வப்புலவர் விளக்கம்: கண்டதால் தானே இன்பமாக கொல்லும் இந்த காதல் ஏற்பட்டது? அவரை காண விடு என அந்த கண்கள் இப்பொழுது கெஞ்சுவது தான் ஏனோ! - வை.மகேந்திரன் Explanation in English: Because the eyes saw him and caused me the love on him. Being so, Why are those eyes begging me that I have to let them to see him again? - MAHENDIRAN V ------------------ குறள் 1172: தெரிந்துணரா நோக்கிய உண்க...