திருக்குறள் அதிகாரம் 5 இல் வாழ்க்கை Chapter 5 LIFE STYLE IN FAMILY ------------------------ (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur)
திருக்குறள்
அதிகாரம் 5
இல் வாழ்க்கை
Chapter 5
LIFE STYLE IN FAMILY
------------------------
(Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V
Northpoigainallur)
------------------------
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
------------------------
குறள் 41:
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
- தெய்வப்புலவர்
விளக்கம்:
இல்வாழ்வில் சிறந்து விளங்குபவன் யாரெனில், பெற்றோர், மனைவி, மக்கள் மூவரையும் நல்வழியில் காத்து நிற்பவனே.
- வை மகேந்திரன்
Explanation in English:
Liabilities of a married man is to lead and protect his parents, wife and children in all good respects.
MAHENDIRAN V
------------------------
குறள் 42:
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை
- தெய்வப்புலவர்
விளக்கம்:
தன் குடும்பத்திற்கும் அப்பாற்பட்டு ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் உதவுபவனே உண்மையான இல்லத்தரசன்.
- வை மகேந்திரன்
Explanation in English:
Only the man who protects, respects and helps infinitely (beyond his family) to all poor people and orphaned persons who suffer from poverty is a true married man
MAHENDIRAN V
------------------------
குறள் 43:
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை
- தெய்வப்புலவர்
விளக்கம்:
இறைவனை, முன்னோர்களை துதிப்பது, விருந்தினர்களை உபசரித்தல், உறவினர்கள் நட்புகளை மதித்தல் இவைகளே ஒருவனின் தலையாய கடமை.
- வை மகேந்திரன்
Explanation in English:
Praying God and ancestors, respecting guests, colleagues and friends is the prime duties of ones.
MAHENDIRAN V
------------------------
குறள் 44:
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல
- தெய்வப்புலவர்
விளக்கம்:
பழியில்லா முறையில் ஈட்டிய செல்வத்தை மனமுவந்து உறவுகளுக்கு கொடுத்துதவவேண்டும். அப்புண்ணிய செயலின் பலன் காலத்திற்கும் அழியாது.
- வை மகேந்திரன்
Explanation in English:
Earnings done without any sin to be shared with relations fullheartly. Doing such virtues will never be destroyed.
MAHENDIRAN V
------------------------
குறள் 45:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
- தெய்வப்புலவர்
விளக்கம்:
அன்பு செலுத்தி அறம் செய்து வாழ்தல் ஒரு குடும்பஸ்த்தனின் வாழ்க்கைக்கு தரத்தையும் பயன்களையும் சேர்க்கும்.
- வை மகேந்திரன்
Explanation in English:
Showing love and morality to others will cause a good quality and benifits to ones' married life.
MAHENDIRAN V
------------------------
குறள் 46:
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்
- தெய்வப்புலவர்
விளக்கம்:
குடும்ப உறுப்பினர்களிடம் அன்பு செலுத்தி வாழும் வாழ்க்கை தரும் சந்தோஷத்தை ஒருவன் வேறு எது மூலமும் பெறமுடியாது.
- வை மகேந்திரன்
Explanation in English:
One won't get any pleasant on other manners rather than he gets the pleased life by joying with his family.
MAHENDIRAN V
------------------------
குறள் 47:
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை
- தெய்வப்புலவர்
விளக்கம்:
நல்ல இல்லற வாழ்க்கைக்கு வரைமுறை வகுத்து செயற்கையாக திட்டங்கள் வகுப்பதை காட்டிலும், நற்பண்புகளுடன் இயல்பாக துணைவியுடன் வாழும் வாழ்க்கையே உயர்ந்தது.
- வை மகேந்திரன்
Explanation in English:
One who lives by naturally good activities with his spouse is greater than ones who just seek for formulae to do the same.
MAHENDIRAN V
------------------------
குறள் 48:
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து
- தெய்வப்புலவர்
விளக்கம்:
தான் அறம் செய்து ஒழுக்கத்துடன் வாழ்வதை போன்று பிறர் வாழ்க்கையையும் அறம் நிறைந்ததாக செய்வது தவம் செய்து வாழ்வதை விட சிறந்தது.
- வை மகேந்திரன்
Explanation in English:
Bringing others too to virtual way like one's own life is greater than living by a valued prayer.
MAHENDIRAN V
------------------------
குறள் 49:
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று
- தெய்வப்புலவர்
விளக்கம்:
பிறரின் விமர்சனங்களுக்கு இடம் கொடாது நல்லொழுக்கங்களுடன் வாழ்வதே எல்லாவற்றையும் விட மேன்மையானது.
- வை மகேந்திரன்
Explanation in English:
The stance of living by loving with each other is a real moral life. Living without giving chance to others to criticize your life is greater than all.
MAHENDIRAN V
------------------------
குறள் 50:
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
- தெய்வப்புலவர்
விளக்கம்:
நற்பண்புகளுடன் அடுத்தோர் வியக்கும் வண்ணம் வாழ்க்கை நடத்துபவன் இறைத்தன்மைக்கு இணையானவனாவான்.
- வை மகேந்திரன்
Explanation in English:
One who moves his life amazingly with enormous attitudes in this world shall be considered parellel to God.
MAHENDIRAN V
----------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
----------------------------------
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V
----------------------------------
Comments
Post a Comment
To call for my visiting class, contact poigaimahi@gmai.com or WhatsApp 9842490745
Thanking you.