Skip to main content

அதிகாரம் 8 அன்புடைமை CHAPTER 8 LOVELYNESS (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 8 அன்புடைமை
CHAPTER 8
LOVELYNESS
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V
Northpoigainallur)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
------------------------
குறள் 71:
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்

விளக்கம்:
ஒருவர்மீது வைத்துள்ள அன்பை அடைத்து வைக்க முடியாது. அன்புக்குறியோர் துயரத்தில் இருக்கும்பொழுது கண்ணீர் பெருகி அன்பை வெளிக்காட்டுவர் அல்லவா?

Explanation in English:
Love put on one can't be blocked. Tears will have shown the loveliness when your beloved person being on suffer.
------------------------
குறள் 72:
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

விளக்கம்:
அன்புள்ளம் கொண்டோர் தன் உடைமைகளை  பிரதிபலன் எதிர்பாராது பிறர்க்கு வழங்குவர். அன்பில்லாதோர் அனைத்தையும் தானே அனுபவிப்பர்.

Explanation in English:
Ones who have loveliness in heart would offer their properties to others. Those who don't have such would be eager to own all.
------------------------
குறள் 73:
அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு

விளக்கம்:
உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவின் மதிப்பு உயிர் உடலின் பால் வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை பொறுத்ததாகும்.

Explanation in English:
The relationship between body and soul is determined based on  the depth of love of soul put on body.
------------------------
குறள் 74:
அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு

விளக்கம்:
அனைவரிடத்திலும் அன்பும் பாசமும் காட்டுவோருக்கு இப்பரந்த உலகத்தில் எல்லையில்லா நட்புகள் வந்துசேரும்.

Explanation in English:
Showing love and affection to all will bring numerous and enormous friendliness from the broad world.
------------------------
குறள் 75:
அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு

விளக்கம்:
பிறருடன் உள்ளார்ந்த மெய்யன்புடன் கூடி நின்றால் மட்டுமே வாழ்வில் ஒருவர் மகிழ்ச்சியை காணமுடியும்.

Explanation in English:
Only because of having beloved heart to approach all, one can be living cheerfully in life.
------------------------
குறள் 76:
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

விளக்கம்:
அன்பின் வெளிப்பாடு ஒழுக்கத்தினால் மட்டுமே விளைவதல்ல. ஒருவரின் விவேகமும் துணிச்சலும் கூட அன்பை கொண்டு வரும்.

Explanation in English:
Love is a cause not only for morality but also for one's bravery. (If one says love is cause only for morality it means his misunderstanding. Love is the big cause for one's bravery!)
------------------------
குறள் 77:
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்

விளக்கம்:
சுட்டெரிக்கும் சூரியன் எலும்பில்லா உயிரியை வெப்பத்தால் சுடுவதுபோல், அன்பில்லாதோரின் இதயத்தை அறம் வெறுத்தொதுக்கும்.

Explanation in English:
As if the sun is injuring a boneless living being by its hot, morality will severely hate one who doesn't have loveliness.
------------------------
குறள் 78:
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று

விளக்கம்:
அன்பில்லாதோரின் வாழ்க்கை என்பது பாலைவனத்தில் வறண்டு நிற்கும் மரம் பூத்துக் குலுங்குவது போலாகும்.

Explanation in English:
One's life being without hearty loveliness is like a dried tree in decert gets blossomed.
------------------------
குறள் 79:
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு

விளக்கம்:
உள்மனதில் அன்பு பண்பு இல்லாத ஒருவனுக்கு புற உறுப்புகள் அழகாய் ஒழுங்காய் இருந்தும் என்ன பயன்?

Explanation in English:
If ones don't have a beloved heart, what can they gain despite having all other prime parts?
------------------------
குறள் 80:
அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

விளக்கம்:
அன்பு நிறைந்த இதயம் இருந்தால் தான் உடம்பில் உள்ள உயிருக்கு மதிப்பு.  அன்பில்லை என்றால் அது எலும்புகளால் போர்த்தப்பட்ட வெறும் உடல்.

Explanation in English:
Only the beloved heart is the soul of the body of one. otherwise it is just a body covered by bones.
----------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு.

 ஆங்கில மொழியின் இலக்கணம் -  சுத்த தமிழில் - எழுதியவர் வை.மகேந்திரன் 01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு. எத்தனையோ மொழிகள் உலகில் தொன்றுதொட்டு பேசப்பட்டு வந்தாலும் கி.பி 1000 -களில் முளைத்த ஆங்கிலம், உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு அத்தியாவசியமான மொழியாக கருதப்படுவது உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம். க்ரீக் லத்தீன் ஸ்பானிஷ் ஜெர்மனிக் பிரெஞ்ச் போன்ற மொழிகளின் கலவை இதில் இருப்பதால் ஆங்கிலம் ஒரு தனி அந்தஸ்தை பெற்றிருக்கக்கூடும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆங்கில மொழியை பற்றி ஒரு உண்மையான கூற்று என்ன தெரியுமா ? பார்ப்பதற்கு அதுவும் வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஆங்கிலம் கடினமாக தோன்றுகிறது ஆனால் இதை புழங்க ஆரம்பித்து விட்டால் இதைப்போல ஒரு எளிதான மொழி எங்கும் இல்லை என்கின்ற உணர்வு நிச்சயமாக தோன்றும். அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என்கின்றார்கள் மொழியியல் நிபுணர்கள். என்னை பொறுத்தவரையில் நான் அதை உள்ளபூர்வமாக உணர்கிறேன் . இந்த மொழியில் உள்ள இலக்கண கட்டமைப்புகள் எந்த மொழியிலும் காணப்படாதவை என்று கூறி விட முடியாது என்றாலும் ஆங்கில இலக்கண கட்டமைப்பு...

எத்தனை வார்த்தைகள் தெரிந்திருக்க வேண்டும், ஆங்கிலம் பேச?

It looks difficult but no any other is as easy as it is

 Hello.. Greetings to all. This is MAHENDIRAN, a trainer of English language for grown ups.  Saying frankly, I would express the real fact of tendency of English language whether it is difficult or easy.  Even here too I should have mentioned the word EASY in the first. Because the entire world thinks that it is a bit difficult, I too entered the word DIFFICULT in the first.  When we dig on the Earth for getting water, we dig for a moment and close the pit or leaving it because the water isn't gotten suddenly. And we start the same work, digging for water in another place in the same area. Almost all who learn English are doing the same process when they want to learn English as a language. As I said earlier, Do you know what the real fact in learning English language is? Surely English can never be taught or learned as other skills are.  One can adapt with English only by the way of catching it. I mean IT here is English.  Only by the way of listening and ...