அதிகாரம் 7 மக்கட்பேறு CHAPTER 7 THE WEALTH OF MATERNITY (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 7 மக்கட்பேறு

CHAPTER 7
THE WEALTH OF MATERNITY
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V
Northpoigainallur)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
------------------------
குறள் 61:
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற

விளக்கம்:
அறிவார்ந்த குழந்தைகளை பெற்றிருப்பதை காட்டிலும் பெருஞ்செல்வம் இவ்வுலகில் வேறு எதுவுமில்லை.

Explanation in English:
No any other wealth is the biggest to one in the world but to having intellectual children.
------------------------
குறள் 62:
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்

விளக்கம்:
சமூகத்தில் யாதொரு கலங்கமும் இல்லா அறிவிற்சிறந்த குழந்தைகளை பெற்றிருந்தால் ஏழேழு பிறவியிலும் வருத்தம் வராது.

Explanation in English:
One who has wisdom children those without carrying any dirty grade from the society will not meet any sadness ever.
------------------------
குறள் 63:
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்

விளக்கம்:
தம்பதியினர் என்ன தான் தன் மக்களை புகழாக மெச்சினாலும், மக்களின் (குழந்தைகளின்) நல்லவை கெட்டவை அவர்களின் நன்நடத்தைகளால் பெறக்கூடியவைகளே.

Explanation in English:
Though parents say children are their sources, betterment and sadness of children are obtained by their own virtues and sins.
------------------------
குறள் 64:
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்

விளக்கம்:
அமிர்தத்தை காட்டிலும், ஒரு பெற்றோருக்கு சுவையான உணவு யாதெனில், தன் குழந்தைகள் தங்கள் கைகளால் பிசைந்து தரும் ஒரு கவளம் கஞ்சியே.

Explanation in English:
The top most best food greater than nectar in the world to parents is only the kneaded kanji by hands of their children.
------------------------
குறள் 65:
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

விளக்கம்:
பெற்றோரிடன் குழந்தைகள் பெறும் அரவணைப்பும், குழந்தைகளின் இனிமையான மழலை சப்தமும் தரும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை வேறெதுவுமில்லை.

Explanation in English:
No any other pleasance is to both child and parent than hugging affectionately, likewise the sweetest sound to parent is to hearing early talks of child.
------------------------
குறள் 66:
குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

விளக்கம்:
தன் குழந்தைகளின் மழலை சப்தங்களை கேட்காத பெற்றோர்களே குழலும் யாழும் இனிமையாக இருக்கிறது என்பர்.

Explanation in English:
Parents those who haven't heard the early talks of children may say that the sounds of fluet and veena are sweet.
------------------------
குறள் 67:
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

விளக்கம்:
ஒரு தந்தை மகனுக்கு/மகளுக்கு செய்யக்கூடிய சிறந்த உபகாரம் எது என்றால், அவர்களை சமூகத்தில் ஒழுக்க சீலர்களாக்குவதும் கல்விமான்களாக்குவதும்தான்.

Explanation in English:
The highest assistance of father that to be done to his son is to make him the best and first in literate.
------------------------
குறள் 68:
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது

விளக்கம்:
பெற்றோரை விட பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கும் நிலைப்பாடு பெற்றோருக்கு சந்தோஷம் தருவதோடு அனைத்து உயிரினங்களுக்கும் நன்மைபயக்கக்கூடியதாகும்.

Explanation in English:
If children are greater in literate than parents, the stance of such is not only happiness of parents but also helpful to all living beings.
------------------------
குறள் 69:
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

விளக்கம்:
பெற்றோருக்கு, தன் பிள்ளைகள் சமூகத்தில் நல்ல அந்தஸ்த்தில் உள்ளார்கள் என்று கேட்கும் ஒலியே  அவர்களை பெற்றெடுத்த பொழுது கிடைத்த சந்தோஷத்தை விட பெரிதானதாகும்.

Explanation in English:
The good talks of society about her son will cause more happy to a mother than the happiness felt by here when she had given him birth
------------------------
குறள் 70:
மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்

விளக்கம்:
ஒரு மகன் தன் தந்தைக்கு செய்யும் பெரிய உதவி எது என்றால், தன் நன்நடத்தையாலும் தான் பெறும் புகழாலும் 'இவனை பெறுவதற்கு இவன் தந்தை எத்தனை தவம் செய்தானோ' என்று சமூகத்தை புகழவைப்பதுதான்.

Explanation in English:
The greatest help of a son to his father is by having good attitudes that the society has to applaud his father's prayer for his being born him son.
----------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS