திருக்குறள் அதிகாரம் 4 அறன் வலியுறுத்தல் CHAPTER 4 FEATURES OF MORALITY ---------------------------------- (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur)

திருக்குறள் 

அதிகாரம் 4
அறன் வலியுறுத்தல்
CHAPTER 4
FEATURES OF MORALITY
----------------------------------
(Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V
Northpoigainallur)
----------------------------------
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
------------------------
குறள் 31:
சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒழுக்கம் நிறைந்த வாழ்வியல் முறை ஒன்றே ஒருவனுக்கு செல்வத்தையும் புகழையும் கொண்டுவர முடியுமேயொழிய வேறெதுவும் இல்லை.
வை.மகேந்திரன்

Explanation in English:
None can offer fames and wealth but the stance of moral help of ones will do.
- MAHENDIRAN V
------------------------
குறள் 32:
அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒழுக்கம் அறநெறியை ஒருவர் பெற்றிருத்தல் அவசியம். இல்லேல், உலகிற்கு கேடு விளைவிக்கும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Morality is the prime sense and to be had. Failing which is concerned an evil disease in the world.
- MAHENDIRAN V
------------------------
குறள் 33:
ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உதவி செய்யும் நற்குணம் கொண்டோர், உதவுவதற்கு நேரம் காலம் ஆள் பார்க்க மாட்டார்கள்.
வை.மகேந்திரன்

Explanation in English:
No time or place to be scheduled by ones if they want to help to others.
- MAHENDIRAN V
------------------------
குறள் 34:
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மனதில் குற்ற உணர்வையும், வெறுப்பையும் சுமந்துகொண்டு பிறர்க்கு அறம் செய்யும் நிலை மதிப்பற்றது.
வை.மகேந்திரன்

Explanation in English:
Having guilty self and being moral to others is not pure morality. Helps done by them are invalid.
- MAHENDIRAN V
------------------------
குறள் 35:
அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பேராசை, பொறாமை, கோபம், கொடுமை குணம் கொண்டோர் பிறகுக்கு உதவி செய்யுங்கால், அது அறம் ஆகாது.
- வை. மகேந்திரன்

Explanation in English:
The state of doing helps by having the four dirty senses jealousy, greed, anger and harshness is not virtual.
- MAHENDIRAN V
------------------------
குறள் 36:
அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காலம் அறிந்து நேரத்திற்கு செய்யும் உதவியே பிற்காலத்தில் முதுமையில் ஒருவருக்கு கஷ்ட்ட நிலை இல்லாத வாழ்க்கையை தரும்.
- வை. மகேந்திரன்

Explanation in English:
To do virtues shouldn't be postponed in early days at any reason. Doing those earlier will save ones from suffers in elderly times.
- MAHENDIRAN V
------------------------
குறள் 37:
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பல்லக்கில் அமர்ந்து பயணிப்பவர்களையும், அதை சுமந்து செல்பவர்களையும் வைத்தே அறத்தின் தன்மையை அறியலாம் என்பதை சொல்ல தேவையில்லை.
- வை. மகேந்திரன்

Explanation in English:
Needless to say that this is cause of morality to ones who sit on the chariot and ones who carry that.
- MAHENDIRAN V
------------------------
குறள் 38:
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நிறுத்தாமல் அறம் செய்துகொண்டிருப்பவனுக்கு அச்செயலே அவனது மறுபிறப்புநிலைப்பாட்டை நிறுத்திவைக்கும்.
- வை. மகேந்திரன்

Explanation in English:
Doing helps morally without stopping will block ones' rebirth stances.
- MAHENDIRAN V
------------------------
குறள் 39:
அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மனமுவந்து செய்யும் அறத்தால் கிடைக்கும் மகிழ்ச்சியை வேறு எதன் மூலமும் பெற முடியாது.
- வை. மகேந்திரன்

Explanation in English:
Nothing will cause the true happiness but ones' doing hearty helps to others will cause it.
- MAHENDIRAN V
------------------------
குறள் 40:
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தார்மீக ரீதியில் மற்றவர்களுக்கு உதவுவது ஒருவருக்கு ஒரு பழக்கமான செயலாக மாற வேண்டும் மற்றும் அனைத்து தீமைகளையும் தூக்கி எறிய வேண்டும்.
- வை. மகேந்திரன்

Explanation in English:
Aiding others morally should become a habitual activity to ones and all evils to be hurled up.
- MAHENDIRAN V
----------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
----------------------------------
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
----------------------------------

Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS