அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் Chapter 6 COUPLE'S SAKE (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம்
Chapter 6
COUPLE'S SAKE
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V
Northpoigainallur)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
------------------------
குறள் 51:
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

விளக்கம்:
துணைவனின் சம்பாதித்யத்திற்கு தகுந்தாற்போல் குடும்பத்தை நகர்த்தி செல்பவளே சிறந்த மனைவியாவாள்.

Explanation in English:
The wisdom spouse is that to know to drive the family amicably based on the volume of her man's earning.
------------------------
குறள் 52:
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்

விளக்கம்:
மனைவி ஒழுக்கம் தவறி வாழ்ந்தால் குடும்ப கௌரவம், துணைவனின் மதிப்பு, புகழ் அனைத்தும் பாழாகும்.

Explanation in English:
If the spouse fouls at any respect or at any way, the values of her man will fly away even if he has fame tons of.
------------------------
குறள் 53:
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

விளக்கம்:
ஒரு குடும்பத்தின் தரம் என்பது மனைவியின் ஆளுமை மற்றும் அவள் தரத்தை பொறுத்தமைந்தாகும்.

Explanation in English:
The quality of a family is depending upon woman. If she is good all is well otherwise worst.
------------------------
குறள் 54:
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்

விளக்கம்:
ஒரு பெண்ணின் கற்பே குடும்பத்தின் குலவிளக்காகும். எதையும் இதனுடன் ஒப்பிட முடியாது.

Explanation in English:
Virginity of a woman in a family is the best holy lamp. No any other can be comparable.
------------------------
குறள் 55:
தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

விளக்கம்:
தன் கணவனை மனதார மதிக்கும் வணங்கும் மனைவியானவள், மழை பெய்யட்டும் என்று சொன்னால் மழை பொழியும்.

Explanation in English:
If a woman who heartily thinks that her spouse is her god orders to rain, it will rain.
------------------------
குறள் 56:
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்

விளக்கம்:
எந்த சூழலிலும், தன் கணவனையும் மக்களையும் நன்கு கவனித்து கொள்ளும் மனைவியே சிறந்த மனைவியாக கருதப்படுகிறாள்.

Explanation in English:
One who is taking care of the family and husband at all sitautions is the best and tiredless woman of a family.
------------------------
குறள் 57:
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை

விளக்கம்:
பெண்ணின் கற்பு அவளாகவே பாதுகாத்துகொள்ளும் ஒன்றாகும். பிறர் கவனித்து பாதுகாப்பது அல்ல.

Explanation in English:
Woman's virginity is protected herself but not watching by someone else.
------------------------
குறள் 58:
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு

விளக்கம்:
நன்னடத்தை உள்ள கணவனை பெற்ற மனைவியானவள் இவ்வுலகில் புகழில் சிறந்து விளங்குவாள்.

Explanation in English:
A woman who is having a genuine spouse in all respects will get all fames in the world.
------------------------
குறள் 59:
புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை

விளக்கம்:
ஒழுக்கநெறியில்லாமல் கணவனோ மனைவியோ நடந்துகொண்டால், உற்றாரின் அவச்சொல்லுக்கு முன் எப்படி தைரியமாக வாழ முடியும்?

Explanation in English:
If there is no a moral life either of couple, how can they walk bravely in the presence of blamers?
------------------------
குறள் 60:
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு

விளக்கம்:
ஒரு பெண்ணின் நற்பண்புகளுக்கு அடையாளம் அவளது நன்னடத்தைகள். சிறப்பான பிள்ளைகளை பெற்றிருப்பது இன்னும் அவளுக்கு அழகு.

Explanation in English:
The true beaty of a woman is her best attitudes, and having good children is the most beautiful.
----------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS