Skip to main content

அதிகாரம் 36 மெய்யுணர்தல் CHAPTER 36 CONSCIOUSNESS/ TO PERCEIVE TRUTHFULNESS 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)

அதிகாரம் 36 மெய்யுணர்தல்
CHAPTER 36
CONSCIOUSNESS/
TO PERCEIVE TRUTHFULNESS
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
---------------------------
குறள் 351:
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு

விளக்கம்:
பொய்மையை உண்மை என்று உணர்வோர் மற்றும் பிறர்க்கும் அதை உணர்த்துவோரின் பிறப்புநிலை இழிவானதாகும்.

Explanation in English:
The stance of ones who perceive falsehood to be true and those who perceive it to others is contemptible.
-----------------------
குறள் 352:
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு

விளக்கம்:
ஒருவர் குற்ற நிலையிலிருந்து நல்ல நிலைக்கு வரும்பொழுதுதான் இன்பநிலைகளை நிறைய பெறுவர்.

Explanation in English:
One can get a lot of pleasures only when one skips him from a state of guilt to a state of good.
-----------------------
குறள் 353:
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து

விளக்கம்:
அச்சத்திலிருந்து நீங்கி தெளிந்த அறிவு பெறுபவர்களுக்கு இந்த வானமும் வசப்படும்.

Explanation in English:
This heaven will be subdued for those who are freed from fear and receive enlightened.
-----------------------
குறள் 354:
ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு

விளக்கம்:
ஒருவருக்கு ஐம்புலன்களை அடக்கியாள தெரிந்திருந்தும், மெய்யுணர்வு எது என்று அறியா நிலையில் அவர் இருந்தால் யாதொரு பயனும் இல்லை.

Explanation in English:
It is of course useless for a person to know how to suppress five senses, but if he does not know what consciousness is.
-----------------------
குறள் 355:
எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

விளக்கம்:
கூறும் பொருள் எத்தகையதாகினும், யார் அதை கூறினாலும் அதிலுள்ள உண்மைப் பொருளை கண்டறிவதே சாணக்கியத்தனம்.

Explanation in English:
Whatever the meaning of whatever is said, the wisdom is to find the reality in whoever says it.
-----------------------
குறள் 356:
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி

விளக்கம்:
நன்கு கற்றறிந்து மெய்ப்பொருள் கண்டறிந்தோர்க்கு மறுப்பிறப்பு துன்பம் வந்து சேராது.

Explanation in English:
Those who are well educated and find the truth would not meet out the misery of rebirth
-----------------------
குறள் 357:
ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு

விளக்கம்:
உண்மைநிலையறிந்து அதில் உறுதியாய் இருப்போர், மறுப்பிறப்பு நிலை குறித்து அஞ்சவேண்டியதில்லை.

Explanation in English:
Ones those who know by distinguishing the facts and are firm in it, do not have to fear about the state of rebirth.
-----------------------
குறள் 358:
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு

விளக்கம்:
பிறப்பு எனும் மடைமையை நீங்கச்செய்து, சிறப்பு எனும் உண்மை பொருளை கண்டறிவதே சிறந்த ஞானமாகும்.

Explanation in English:
The best wisdom is to cut off the clutter of birth and discover the true meaning of features of life.
-----------------------
குறள் 359:
சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்

விளக்கம்:
மெய்பொருளின் சார்பு என்னவென்று அறிந்து அதனை பின்பற்றி பற்றின்றி வாழ்ந்தால் துன்பங்கள் வாழ்வில் அணுகாது.

Explanation in English:
Miseries will not tend in life of ones if they know what the bias is and follow it and live without dedires.
-----------------------
குறள் 360:
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமங் கெடக்கெடு நோய்

விளக்கம்:
காமம், சினம், ஆசை இவை மூன்றையும் விடாவிட்டால், சமூகத்தில் ஒருவர் தன் நற்பெயரை இழந்து தீமைகளை மட்டுமே பெறுவர்.

Explanation in English:
If the bad senses such as lust, anger and desire are not given up, one will lose one's reputation in the society and only gain evil.
-----------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work are reserved by me, and it's my own property.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖



Comments

Popular posts from this blog

01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு.

 ஆங்கில மொழியின் இலக்கணம் -  சுத்த தமிழில் - எழுதியவர் வை.மகேந்திரன் 01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு. எத்தனையோ மொழிகள் உலகில் தொன்றுதொட்டு பேசப்பட்டு வந்தாலும் கி.பி 1000 -களில் முளைத்த ஆங்கிலம், உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு அத்தியாவசியமான மொழியாக கருதப்படுவது உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம். க்ரீக் லத்தீன் ஸ்பானிஷ் ஜெர்மனிக் பிரெஞ்ச் போன்ற மொழிகளின் கலவை இதில் இருப்பதால் ஆங்கிலம் ஒரு தனி அந்தஸ்தை பெற்றிருக்கக்கூடும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆங்கில மொழியை பற்றி ஒரு உண்மையான கூற்று என்ன தெரியுமா ? பார்ப்பதற்கு அதுவும் வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஆங்கிலம் கடினமாக தோன்றுகிறது ஆனால் இதை புழங்க ஆரம்பித்து விட்டால் இதைப்போல ஒரு எளிதான மொழி எங்கும் இல்லை என்கின்ற உணர்வு நிச்சயமாக தோன்றும். அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என்கின்றார்கள் மொழியியல் நிபுணர்கள். என்னை பொறுத்தவரையில் நான் அதை உள்ளபூர்வமாக உணர்கிறேன் . இந்த மொழியில் உள்ள இலக்கண கட்டமைப்புகள் எந்த மொழியிலும் காணப்படாதவை என்று கூறி விட முடியாது என்றாலும் ஆங்கில இலக்கண கட்டமைப்பு...

எத்தனை வார்த்தைகள் தெரிந்திருக்க வேண்டும், ஆங்கிலம் பேச?

It looks difficult but no any other is as easy as it is

 Hello.. Greetings to all. This is MAHENDIRAN, a trainer of English language for grown ups.  Saying frankly, I would express the real fact of tendency of English language whether it is difficult or easy.  Even here too I should have mentioned the word EASY in the first. Because the entire world thinks that it is a bit difficult, I too entered the word DIFFICULT in the first.  When we dig on the Earth for getting water, we dig for a moment and close the pit or leaving it because the water isn't gotten suddenly. And we start the same work, digging for water in another place in the same area. Almost all who learn English are doing the same process when they want to learn English as a language. As I said earlier, Do you know what the real fact in learning English language is? Surely English can never be taught or learned as other skills are.  One can adapt with English only by the way of catching it. I mean IT here is English.  Only by the way of listening and ...