Skip to main content

அதிகாரம் 37 அவா அறுத்தல் CHAPTER 37 TO CUT OFF DESIRES 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)

அதிகாரம் 37
அவா அறுத்தல்
CHAPTER 37 
TO CUT OFF DESIRES
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
---------------------------
குறள் 361:
அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து

விளக்கம்:
ஆசை துன்பம் தருவித்தாலும், அனைத்து உயிர்களின் உதயத்திற்கும் அவைகளை பாதுகாத்தலுக்கும் அடிப்படை வித்து ஆசையே.

Explanation in English:
Although desire causes miseries, that is the base to provide and protect births to all living beings.
---------------------------
குறள் 362:
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்

விளக்கம்:
பிறவாமை என்பதையே ஒருவர் விரும்ப வேண்டும் அப்படி செய்ய ஆசையில்லா எண்ணம் வேண்டும்.

Explanation in English:
One should like not be born again. If one wants to like so, he must cut off desires from his thought.
---------------------------
குறள் 363:
வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்ப தில்

விளக்கம்:
ஆசை அறவே இல்லை என்ற எண்ணமே பெருஞ்செல்வம். அதற்கு ஈடாக எதையும் குறிப்பிட முடியாது.

Explanation in English:
The biggest wealth is the stance of not desiring on anything. Nothing can be parellaled to it.
---------------------------
குறள் 364:
தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்

விளக்கம்:
தூய்மை என்பதற்கு இலக்கணம் பேராசையற்ற குணம். அது நேர்மையாக இருந்தால் மட்டுமே வரும்.

Explanation in English:
The base of purity is that having desireless thoughts. Only being honest would provide this tendency.
---------------------------
குறள் 365:
அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்
அற்றாக அற்ற திலர்

விளக்கம்:
பிறவியற்றவர்களே பற்றற்றவர் ஆவார்கள் அல்லது பற்றற்றவர்களே பிறவியற்றவர்களாக இருக்க முடியும் மற்றவர்கள் பற்றவர்களாக கருதப்படுவர் மாத்திரமே.

Explanation in English:
Only Birthless persons can have desireless status. Or desireless tendency can cause birthless probability. Others may be considered as desireless but not perfectly.
---------------------------
குறள் 366:
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா

விளக்கம்:
ஆசையே அடுத்தோரை வஞ்சிக்கும் எண்ணத்தை உண்டாக்கும். அவ்வாசை வரக்கூடாது என்று அஞ்சி  வாழ்வதே அறம் ஆகும்.

Explanation in English:
Only greed stimulates cunning acts that to be done on others. So living fearfully for not to get such trait is Moral or virtual.
---------------------------
குறள் 367:
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்

விளக்கம்:
ஒருவன் அழியாது இன்புற்று வாழவேண்டுமாயின் ஆசையை அறவே ஒழித்தால் மட்டுமே அது சாத்தியப்படும்.

Explanation in English:
If one wants to be living stably with all cheers, it is possible only by cutting off all desires in life.
---------------------------
குறள் 368:
அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்

விளக்கம்:
ஆசையற்றவர்களுக்கு துன்பநிலை என்றுமில்லை. ஆசையை விடார்க்கு துன்பநிலை தொடர்ந்து வரும்.

Explanation in English:
No miseries to ones who give up all desires. Likewise, miseries would cummulate to ones who don't quit desires.
---------------------------
குறள் 369:
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்
துன்பத்துள் துன்பங் கெடின்

விளக்கம்:
ஆசை என்பது துன்பம் ஆகும். அத்துன்பத்தை ஒழித்தால் மட்டுமே இடையற்ற இன்பநிலையை பெற முடியும்.

Explanation in English:
Desire is meant also as a misery. One can have pauseless pleasance in life, only when he throws out such misery called desire.
---------------------------
குறள் 370:
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்

விளக்கம்:
நிறைவு என்கிற நிலையே இல்லாத ஆசையை ஒழித்தால், நிலைத்து வாழும் இயல்பு நிலையை இயற்கை தரும்.

Explanation in English:
Only when one destroys desire that has dissatisfaction at all, he could get a habitual stance of living stably.
-----------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work are reserved by me, and it's my own property.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖

Comments

Popular posts from this blog

01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு.

 ஆங்கில மொழியின் இலக்கணம் -  சுத்த தமிழில் - எழுதியவர் வை.மகேந்திரன் 01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு. எத்தனையோ மொழிகள் உலகில் தொன்றுதொட்டு பேசப்பட்டு வந்தாலும் கி.பி 1000 -களில் முளைத்த ஆங்கிலம், உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு அத்தியாவசியமான மொழியாக கருதப்படுவது உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம். க்ரீக் லத்தீன் ஸ்பானிஷ் ஜெர்மனிக் பிரெஞ்ச் போன்ற மொழிகளின் கலவை இதில் இருப்பதால் ஆங்கிலம் ஒரு தனி அந்தஸ்தை பெற்றிருக்கக்கூடும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆங்கில மொழியை பற்றி ஒரு உண்மையான கூற்று என்ன தெரியுமா ? பார்ப்பதற்கு அதுவும் வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஆங்கிலம் கடினமாக தோன்றுகிறது ஆனால் இதை புழங்க ஆரம்பித்து விட்டால் இதைப்போல ஒரு எளிதான மொழி எங்கும் இல்லை என்கின்ற உணர்வு நிச்சயமாக தோன்றும். அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என்கின்றார்கள் மொழியியல் நிபுணர்கள். என்னை பொறுத்தவரையில் நான் அதை உள்ளபூர்வமாக உணர்கிறேன் . இந்த மொழியில் உள்ள இலக்கண கட்டமைப்புகள் எந்த மொழியிலும் காணப்படாதவை என்று கூறி விட முடியாது என்றாலும் ஆங்கில இலக்கண கட்டமைப்பு...

எத்தனை வார்த்தைகள் தெரிந்திருக்க வேண்டும், ஆங்கிலம் பேச?

It looks difficult but no any other is as easy as it is

 Hello.. Greetings to all. This is MAHENDIRAN, a trainer of English language for grown ups.  Saying frankly, I would express the real fact of tendency of English language whether it is difficult or easy.  Even here too I should have mentioned the word EASY in the first. Because the entire world thinks that it is a bit difficult, I too entered the word DIFFICULT in the first.  When we dig on the Earth for getting water, we dig for a moment and close the pit or leaving it because the water isn't gotten suddenly. And we start the same work, digging for water in another place in the same area. Almost all who learn English are doing the same process when they want to learn English as a language. As I said earlier, Do you know what the real fact in learning English language is? Surely English can never be taught or learned as other skills are.  One can adapt with English only by the way of catching it. I mean IT here is English.  Only by the way of listening and ...