அதிகாரம் 56 கொடுங்கோன்மை CHAPTER 56 - TYRANNY 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 56 கொடுங்கோன்மை
CHAPTER 56 - TYRANNY
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
------------------
குறள் 551:
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
குடிமக்களின் உரிமை பறித்து உடைமை பறித்து கோலாட்சி புரியும் வேந்தன் கொலை தொழில் செய்பவனைவிட கொடியவனாவான்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A king who rules miserably his country by plucking rights and belongings of people is worse than commercial killers.
MAHENDIRAN V
------------------
குறள் 552:
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஆட்சி அதிகாரத்தில் குடிமக்களை பொருள் தரசொல்லி கட்டாயப்படுத்துதல், இரவில் திருடன் கோல் கொண்டு வழிப்பறி செய்வது போலாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The dominant action of a king like compelling people to pay money unreasonably is equallent of the action of road side robber who stands at night with stick and plucking things.
MAHENDIRAN V
------------------
குறள் 553:
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நாட்டின் தீமைகள் களைந்து முறையாக ஆட்சி செய்யத் தவறும் மன்னன் சிறுக சிறுக தீங்கு பெருகி தன் நாட்டை இழப்பான்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A king who rules without considering to remove evils that tend in his nation would lose his nation gradually due to cummulation of penance.
MAHENDIRAN V
------------------
குறள் 554:
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
செங்கோல் தவறி கொடுங்கோல் புரியும் அரசன் தன் பொருளையும் இழப்பான், குடிகளும் கெட்டுப் போகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A king who runs his reign without justice and by tyirannising would lose his nation as well as people would be spoilt.
MAHENDIRAN V
------------------
குறள் 555:
அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கொடுங்கோல் பலனால் குடிகள் அழும் கண்ணீர் வெள்ளமே அக்கொடுங்கோல் அரசனின் செல்வத்தை அழிக்கும் படையாக அமையும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The tears of people who are suffering due to tyranny of the reign of a king would be a troop to kill such king and his wealth.
MAHENDIRAN V
------------------
குறள் 556:
மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மன்னனின் ஆட்சிமுறை செழுமையாய் இருந்தால் அவன் புகழுடன் வலம் வருவான். இல்லேல் புகழ் சரிந்து அவப்பெயர் எடுப்பான்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A king who reigns his nation on the justicious path would get all prides, otherwise, he would lose his pride and earn badwill.
MAHENDIRAN V
------------------
குறள் 557:
துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மழையின்றி மக்கள் படும் அவதி எவ்வாறோ அது போல் தான் அருள் இல்லா மன்னனின் ஆட்சி குடிமக்களை துன்பமடையச் செய்யும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The stand of people suffering because of not having graces from their king is equallent to suffering of people due to no even a drop of rain.
MAHENDIRAN V
------------------
குறள் 558:
இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
குடிமக்கள் பொருள் நிறைந்து வாழ்ந்தாலும் அவ்வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியில் கீழ் அமைந்தால் அது துன்பத்திலும் துன்பமாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even if people have a big wealth but if they are ruled by a tyranny king, there wouldn't be as a great penance as it is.
MAHENDIRAN V
------------------
குறள் 559:
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மன்னனால் முறை தவறி செய்யப்படும் ஆட்சியின் துன்பம், பருவத்தில் மழை பெறாமல் படும் அவதியை போன்றதாம்.
வை.மகேந்திரன்

Explanation in English:
People's suffering because of immoral reign of their king is equallent to the suffering of people due to get unseasonable rain.
MAHENDIRAN V
------------------
குறள் 560:
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காவலனாகிய மன்னன் மக்களை காக்கத் தவறும் ஆட்சி தந்தால், பசு தரும் பாலின் பலன் குன்றும், ஞானிகளும் ஞானம் மறப்பர்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If a king who is liable to protect people fails to protect people and nation, the milk obtained from cows would be invalid, and the wisdomed people would lose their wisdom.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS