அதிகாரம் 58 கண்ணோட்டம் CHAPTER 58 (GLANCE) BENIGNANT SIGHT 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 58 கண்ணோட்டம்
CHAPTER 58
(GLANCE)
BENIGNANT SIGHT
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
------------------
குறள் 571:
கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கண்ணுறவது என்பது ஒரு பேரழகாகும். இத்திறன் இருப்பதனால் தான் இவ்வுலகம் இயங்குகிறது.
வை.மகேந்திரன்

Explanation in English:
The stance of mercy sight is a pretty one. Only because of existing this, the world is functioning.
MAHENDIRAN V
------------------
குறள் 572:
கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கண்ணுற்று இரக்கம் காட்டுபவர்களுக்காகத் தான் இவ்வுலகம் உள்ளது. மற்றோரெல்லாம் இப்புவிக்கு பாரமானவர்கள்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The world is here only for those who are benignant sight. Others are considered just overload to this earth.
MAHENDIRAN V
------------------
குறள் 573:
பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்
கண்ணோட்டம் இல்லாத கண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கண்ணுறும் தன்மையை ரசிக்க தெரியாதோருக்கு இருக்கும் கண்கள், பாடலில் நல்ல சந்தத்திற்கு பொருந்தாத வரிகளுக்கு ஒப்பாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The eyes had by ones those who dont desire to glace pleasance of the world are equallent to wrong lyrics that is written to the right tune
MAHENDIRAN V
------------------
குறள் 574:
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற்
கண்ணோட்டம் இல்லாத கண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காணவேண்டியவற்றை வேண்டுமென்றே காணாமல் இருக்கும் கண்கள், முகத்தில் ஒரு உறுப்பு என்பதை தவிர வேறு அந்தஸ்தேதும் அதற்கில்லை.
வை.மகேந்திரன்

Explanation in English:
If one's eyes wantonly deny to have a mercy look, such eyes are considered just only as the parts in head than any other status.
MAHENDIRAN V
------------------
குறள் 575:
கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற்
புண்ணென் றுணரப் படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கண்களின் பெருமையே கண்ணோட்டம் தான். கண்ணோட்டம் விரும்பாத கண்கள் வெறும் புண்களாக மட்டுமே கருதப்படும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The pride of eyes is its benignant sight. If the eyes deny to glance a mercy sight, those would be considered as sores.
MAHENDIRAN V
------------------
குறள் 576:
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைடந்துகண் ணோடா தவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கண்கள் இருந்தும் கண்ணோட்டம் செய்ய தவறுபவர்கள் மண்ணில் புதைந்து நிற்கும் மரத்திற்கு இணையானவர்கள்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Despite having eyes, if ones fail to be interested to have a benignant glance, it means that those persons are parallel to a tree that is buried on the soil.
MAHENDIRAN V
------------------
குறள் 577:
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கண்களுடையவர்களுக்கு கண்ணோட்டம் இருப்பதென்பது இயல்பு. கண்கள் இருந்தும் கண்ணோட்டம் விழையார் கண்களில்லாதவர்களாவார்கள்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Having benignant sight is nature to those who are having eyes. Being so, if ones aren't willing to have a mercy sight despite having eyes, they are considered as an utter blind.
MAHENDIRAN V
------------------
குறள் 578:
கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்
குரிமை உடைத்திவ் வுலகு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தொழிலும் கெடாமல் கடமையும் தவறாமல் கண்ணோட்டம் செய்யும் வல்லவர்களுக்கே இவ்வுலகம் சொந்தமாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
This world can be owned by good men who are having benignant sight without failing their duties and profession.
MAHENDIRAN V
------------------
குறள் 579:
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
எதிராய் பெரும் தீங்கிழைக்கும் கொடியோனிடமும் பொறுமைமையாய்  கண்ணோட்டம் கொள்ளும் பண்பு மாண்புக்குறியது.
வை.மகேந்திரன்

Explanation in English:
The state of having mercy look of one on ones those who do miseries a lot against him is such a honourable status.
MAHENDIRAN V
------------------
குறள் 580:
பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
முகத்திற்கு முகம் என்ற நாகரிகம் கருதுவோர் நட்புக்குறியோர் நஞ்சை கொடுத்தாலும் நயம்பட அதை உண்ண மறுக்க மாட்டார்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Because of for considering face respect, the great persons would not deny to eat a thing despite knowing that is a poison since that is given by his close ones . 
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS