அதிகாரம் 59 ஒற்றாடல் CHAPTER 59 MANAGING SPIES 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 59 ஒற்றாடல்
CHAPTER 59 MANAGING SPIES
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
------------------
குறள் 581:
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சிறந்த அரசனின் ஆளுமைக்கு, ஒற்றர்களை கையாளுதல், நூல்களை பயில்வதனால் பெறும் அறிவு ஆகிய இரண்டும் இரு கண்களை போன்றதாம்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Governing spies' activities, gathering knowledge through books are like two eyes to a king.
MAHENDIRAN V
------------------
குறள் 582:
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நாட்டின் அனைத்து இடங்களிலும் நிகழும் நிகழ்வுகளை ஒற்றர்களை கொண்டு அவ்வப்பொழுது அறிதல் அரசனின் கடமை.
வை.மகேந்திரன்

Explanation in English:
Gathering news across the nation and internation now and then by trustful spies is the prime duty of a good king.
MAHENDIRAN V
------------------
குறள் 583:
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்த தில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒற்றன் மூலம் செய்தி அறிய தெரியா மன்னனின் ஆளுமையால் அவன் ஆட்சி வளமை பெறாது.
வை.மகேந்திரன்

Explanation in English:
A reign ruled by a king who is intelligent to gather news from truthful spies would not be wealthy.
MAHENDIRAN V
------------------
குறள் 584:
வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்
கனைவரையும் ஆராய்வ தொற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நல்லவர் சுற்றத்தார் பகவர் என பகுத்தாய்ந்து அவர்களிடமிருந்து செய்தி தொகுத்து மன்னனிடம் அளிப்பதே ஒற்றனின் பணி.
வை.மகேந்திரன்

Explanation in English:
An intelligent duty of a good spy is that to distinguish the facts that not to show partiality such as good people, relatives and enemies during gathering secrets, and bringing reports to king.
MAHENDIRAN V
------------------
குறள் 585:
கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
யாரும் அறியா வேடம் கொண்டு, அறிந்தாலும் எதிர்க்கும் துணிவு கொண்டு, பிடிபட்டாலும் ரகசியம் காக்கும் தன்மை உடையவரே சிறந்த ஒற்றர்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A good spy is who acts on his duty not to make others know him, and even if he is caught not to fear and not to reveal secretes of his nation.
MAHENDIRAN V
------------------
குறள் 586:
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்
தென்செயினுஞ் சோர்வில தொற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
துறவியர் வேடத்தில் உள்நுழைந்து, நிகழ்வுகளை கண்காணித்து, பிடிபட்டு துண்பம் கொண்டாலும் துளியும் ரகசியம் வெளியிடா ஒருவரே நல் ஒற்றர்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A good spy is who masks a sage's role and penetrates into enemy's ground, watching all secret activities, even if he is caught and suffering, not to reveal secrets to enemies.
MAHENDIRAN V
------------------
குறள் 587:
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பா டில்லதே ஒற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மறைத்த செய்திகளையும் மதியால் பெற்று அறிந்தவற்றை ஐயமில்லாமல் கொண்டுவருபவரே சிறந்த ஒற்றர்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A good spy is who observes the suppresed facts of enemis by his intelligence, and to bring them daringly to king.
MAHENDIRAN V
------------------
குறள் 588:
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஓர் ஒற்றரால் அறியப்பட்ட தகவலின் உண்மைத்தன்மையை, மற்றோர் ஒற்றரின் மூலம் செய்திப் பெற்று சரிபார்த்தலே அறிவாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The wisdom of a king is that to confirm truthfulness of the message brought by the first spy, by sending another one spy to the same place.
MAHENDIRAN V
------------------
குறள் 589:
ஒற்றொற் றுணராமை யாள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒற்றர்கள் மூவராயின், ஒருவரையொருவர் அறியாவண்ணம் வினை செய்ய வைத்து, மூவரின் கருத்தையும் ஒப்பிட்டு உண்மையறிதல் வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Perhaps sending three spies to a place to gather facts, it's very important to making situation not to know those spies with each other, and to confirm realisation from the messages brought by those three.
MAHENDIRAN V
------------------
குறள் 590:
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற்
புறப்படுத்தான் ஆகும் மறை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சபையறிய ஒற்றரை பாராட்டுவது நல்லாட்சிக்கு நல்லதல்ல. ரகசியம் பெறுதலை அம்பலப்படுத்துவது போல் அமையும் அது.
வை.மகேந்திரன்

Explanation in English:
It's not a wisdom activity of a king if he appreciates spies on the stage like a function. If he does so, It would be looking like a state of distributing secretes to all.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS