அதிகாரம் 57 வெருவந்த செய்யாமை (வரம்பு மீறாமை) CHAPTER 57 NOT TO EXCEED THE LIMIT 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 57
வெருவந்த செய்யாமை
(வரம்பு மீறாமை)
CHAPTER 57
NOT TO EXCEED THE LIMIT
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
------------------
குறள் 561:
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங் கொறுப்பது வேந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
குற்றம் செய்தவனை அவன் மீண்டும் அக்குற்றம் செய்யாவண்ணம் ஆராய்ந்து தண்டனை வழங்குவதே சிறந்த வேந்தனுக்கு அழகு.
வை.மகேந்திரன்

Explanation in English:
One who is brilliant to issue punishment for a crime as far as not to repeat the same crime is the best king.
MAHENDIRAN V
------------------
குறள் 562:
கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
குற்றம் செய்தவனுக்கு தண்டனையை கொடியதாக காட்டி மென்மையாக அத்தண்டனையை வழங்கும் அரசன் ஆட்சி கட்டிலில் நீடிப்பான்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A king who punishes crimed persons has to announce that his punishment would be very severe but he has to punish reasonably. Only then he could prolong his reign.
MAHENDIRAN V
------------------
குறள் 563:
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
குடிகள் அனைத்தும் அஞ்சி நடுங்கும் வகையில் செய்யப்படும் ஆட்சி விரைவில் கவிழ்ந்து கெட்டுப்போகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A reign done by a king goes on tyrannical and causing suffering to people would be spoilt and dissolved.
MAHENDIRAN V
------------------
குறள் 564:
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
குடிகளால் கொடுங்கோலன் என்று கெட்டப் பெயர் சம்பாதித்த அரசனும் வீழ்வான் ஆட்சியும் கெடும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A king who earns badwill from people and earns worst name like a tyrannic king will fall down and lose his reign.
MAHENDIRAN V
------------------
குறள் 565:
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்ன துடைத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
குடிகளிடம் முகம் காட்டா அல்லது கடுகடுத்த முகத்துடன் காணப்படும் அரசன் நிறைந்த செல்வம் வைத்திருந்தாலும், அவன் பூதத்துடன் ஒப்பிட மட்டுமே லாயக்கானவன்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A king whose face is always looking rude and who is rarely seen by people would lose his wealth despite having lots of, and he is equallent to apparition.
MAHENDIRAN V
------------------
குறள் 566:
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கடிந்து பேசும் குணமும் இன்முகமும் இல்லாத அரசனிடம் உள்ள செல்வம் எளிதில் கரைந்துபோகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The wealth of a king, who is the characteristic of speaking with people by rough and harsh words without pleasant face, would vanish easily.
MAHENDIRAN V
------------------
குறள் 567:
கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கடுங்குணமும் அதீத தண்டனையும் தரும் அரசனின் அரண் வளமையாக இருந்தாலும் நாளுக்கு நாள் தேய்ந்து போகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The acropolis of a king, who has tyrannic reign and who gives cruel punishment to people, would be worn-out day to day. 
MAHENDIRAN V
------------------
குறள் 568:
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகுந் திரு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இனத்தோடு (அமைச்சர்களோடு) ஒட்டாது கடுங்கோபக்காரனாக இருக்கும் அரசனின் செல்வம் அளப்பறிய கெடும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The wealth of a king, who doesn't take coordination of his co-ministers, and being cruel, would be spoilt immeasurably.
MAHENDIRAN V
------------------
குறள் 569:
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
போர் போன்ற நெருக்கடி வரும் முன்பே நாட்டைக் காக்க திட்டமிடா அரசன் போர் வந்த பின்னே தன் அரணை இழப்பான்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A king who doesn't take care to protect his country as a pre-planned action before war would lose his acropolis.
MAHENDIRAN V
------------------
குறள் 570:
கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நல்லோர் பேச்சை கேட்காதவனே கடுங்கோல் அரசாட்சி செய்யும் அரசனாக உருவாகுவான் .  இந்நிலையை போன்ற ஒரு பெருஞ்சுமை ஒரு நாட்டிற்கு வேறெதுவுமில்லை.
வை.மகேந்திரன்

Explanation in English:
A king who doesn't listen to good words of well-versed people would become a cruel king. There is no any other worst status to a nation as it is.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS