அதிகாரம் 55 செங்கோன்மை. CHAPTER 55 GOOD REIGN. 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 55 செங்கோன்மை.
CHAPTER 55  GOOD REIGN.
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
------------------
குறள் 541:
ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தனிப்பட்ட காழ்ப்பு ஏதுமில்லாமல், குற்றம் எதுவென்று ஆராய்ந்து உறுதியாய் நடுவாய் நின்று வழங்குவதே உண்மையான நீதியாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The virtue justice is that not laying any side and examining the actual crime and justifying correct judgment for the sake of people's life.
MAHENDIRAN V
------------------
குறள் 542:
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வானத்தின் கொடையான நீரை/மழையை நம்பி வாழ்வதை போல், மன்னனின் செங்கோல் தவறாத ஆட்சியையும் நம்பித்தான் வாழ்கிறார்கள்.
வை.மகேந்திரன்

Explanation in English:
People live by believing the honest reign of a king as if they live by believing the sky for rain.
MAHENDIRAN V
------------------
குறள் 543:
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு அரசனின் ஆட்சி அந்தணர்கள் போற்றும்/ கடைபிடிக்கும் அறம் சார்ந்த வேதத்திற்கும் முதன்மையானதாத இருக்க வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A king's reign ought to be primer than the verdicts of vedic and epics sloganed by vedic readers.
MAHENDIRAN V
------------------
குறள் 544:
குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மக்களை அரவணைத்து நல்லாட்சி புரியும் ஒரு அரசனை மக்கள் அடி பிறழா பின் தொடர்வர்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Surely a king who rules an honest reign by hugging people would be obeyed by people without fouling the king's foot print.
MAHENDIRAN V
------------------
குறள் 545:
இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நீதி வழுவா நல்லாட்சியை ஒரு அரசன் தருங்கால், பருவமழை தானாய் பொழியும் நிலபுலன்கள் சீராய் விளையும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If a king reigns his country so honestly, it would be raining itself and crops would cummulate over-all.
MAHENDIRAN V
------------------
குறள் 546:
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு மன்னனின் வெற்றியை தீர்மானிப்பது அவன் எறியும் வேலை (ஆயுதம்) காட்டிலும் அவன் செய்யும் நீதி வழுவா ஆட்சி முறையே.
வை.மகேந்திரன்

Explanation in English:
Jawline thrown by a king does not determine the victory of him, only the reign done by him without fouling justice.
MAHENDIRAN V
------------------
குறள் 547:
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வையகத்தை அரசன் காப்பான். அந்த அரசை காப்பதுவோ அவன் செய்யும்  குறையில்லா ஆட்சி முறையே.
வை.மகேந்திரன்

Explanation in English:
The world might be protected a king but he is protected by his faultless good reign.
MAHENDIRAN V
------------------
குறள் 548:
எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மக்களின் குறையறிந்து நீதி வழங்காது, கற்றோர் கருத்து கேளாமல் ஆட்சியாளும் அரசனும் கெடுவான் அவனது ஆட்சியும் கை கூடாது.
வை.மகேந்திரன்

Explanation in English:
A king who rules his nation without lending his ears for the pleads of people, and rules without hearing suggestions from well-versed people would be affected, and his reign too would fall down.
MAHENDIRAN V
------------------
குறள் 549:
குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிறர் வருத்தும் பழியிலிருந்து மக்களையும் தன்னையும் காத்து, பழி செய்வோரை ஆராய்ந்து கடும் தண்டனை வழங்கி ஆட்சி செய்வது ஒரு அரசனின் கடமை.
வை.மகேந்திரன்

Explanation in English:
A king's prime duty is that he ought to protect people from evils raised from out, and to sentence a big punishment to ones who does very much miseries.
MAHENDIRAN V
------------------
குறள் 550:
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கொலை பாதகம் செய்வோரை தண்டித்து மக்களை காப்பது என்பது  பயிர்களை காக்க களைகளை பிடுங்குவதுதற்கு ஒப்புமையாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
It's just like a plucking weeds for the growth of crops what a king  protects people by giving big punishment to murderers for people's sake.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖

Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS