எளிதாக அறிவோம் ஆங்கிலம்-பகுதி-3 - வை.மகேந்திரன்

எளிதாக அறிவோம் ஆங்கிலம். 

பகுதி 3

- வை.மகேந்திரன்

MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA

MOBILE: 98424 90745

தொடர்ச்சி பகுதி - 3

👇👇

மொழி:நடை என்றால் என்ன? என்று ஒருவர் கேட்டிருந்தார்.

இதை ஆங்கிலத்தில் Dialect என்று கூறுவர் 

"எத்தனையாவது" என்கிற வார்த்தைக்கு சரியான ஆங்கில வார்த்தை என்ன, Google செய்தும் பார்த்து விட்டேன் சரியாக புரியவில்லை-என்று ஒருவர் என்னிடம் கேட்டார்.

எனது பதில்.....

ஒரு மொழியின் நடை மற்றொரு மொழியின் நடையை ஒத்திருக்க வேண்டும் என்று இல்லை.

Have you been kodaikkanal? இது ஆங்கிலம். இதன் நேரடி தமிழாக்கம், நீங்கள் கொடைக்கானலில் இருந்திருக்கிறீர்களா? ஆனால் அர்த்தம் சென்றிருக்கிறீர்களா? என்பது தான். Have you gone to kodaikkanal? என்று பேசுவதில்லை. 

I was born -க்கும் "நான் பிறந்தேன்" என்பதற்கும் நடையில் (dialect) சம்பந்தமில்லை, ஆனால், அர்த்தம் 'நான் பிறந்தேன்'  என்பது தான். நடைப்படி பார்த்தால் "கொண்டு வரப்பட்டேன்" என்பதாகும்.! 

I'm interested- நடை "கவரப்படுகிறேன்".

அர்த்தம், .'விருப்பாக உள்ளது'.

I'm surprised - நடை, 'நான் ஆச்சரியமூட்டப்படுகிறேன்'.

அர்த்தம், 'ஆச்சரியப்படுகிறேன்'.

"Let a language be in its own dialect during translation" என்று அக்காலத்திலேயே மொழியியல் வல்லுனர்கள் கூறியிருக்கிறார்கள்.

சரி.... நாம் மேட்டருக்கு வருவோம்! 

நீங்கள் எத்தனையாவது இட்லி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறீர்கள்?

What number iddly are you having now?

Which number iddly are you having now?

Which ordinal iddly are you having now?

நீங்கள் உங்கள் குடும்பத்தில் எத்தனையாவது குழந்தை / பிள்ளை / மகன்?

What number child/issue/son are you in your family?

Which number child/issue/son are you in your family?

Which ordinal child/issue/son are you in your family?

இது உங்களுக்கு எத்தனையாவது பயணம்?

What number journey is this to you?

Which number journey is this to you?

Which ordinal journey is this to you?

'How many' என்பதற்கு "எத்தனை" என்று அர்த்தம் என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால் "எத்தனையாவது" என்பதற்கு  ஒரே வார்த்தையில் ஆங்கிலத்தில் வார்த்தை இல்லை. WHAT NUMBER, WHICH NUMBER, WHICH ORDINAL  போன்றவை தான் இணைச் சொற்கள்.

(தொடரும்.....)

Comments

Popular posts from this blog

Need our seminar programme at your college?

திருக்குறள் அதிகாரம் 118. கண் விதுப்பழிதல் CHAPTER 118. EYES ARE REALISING THE DEPTH OF MY LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)