அதிகாரம் 42 கேள்வி CHAPTER 42 HEARING 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)

அதிகாரம் 42 கேள்வி
CHAPTER 42  HEARING
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
---------------------------
குறள் 411:
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
செவி மற்றும் செவி வழியாக கேட்டறியும் நல் கருத்துக்களே எல்லா செலவங்களையும் விட தலைச்சிறந்த செல்வமாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Rather hearing good words through ears and ears alone are the prime wealth ever than any other.
- Mahendiran V
---------------------------
குறள் 412:
செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
செவிக்கு விருந்தாக கருத்துக்கள் கிடைக்காத சமயத்தில் வயிற்றுபசிக்கு சிறிது உணவு எடுத்துக்கொள்ளலாம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If there is no feast to abate hunger of hearing good words by ears, may utilise such time for having food to abate stomach's hunger.
- Mahendiran V
---------------------------
குறள் 413:
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
செவிவழி கேட்டு கேட்டு  ஞானம் அடைந்து புவியில் வாழும் மக்களவர், தவமே உணவென்று வாழ்ந்த அடியார்களுக்கு ஒப்பாவர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
People who had obtained wisdom by hearing through ears are parellel to sages who lived by thinking penance alone is food.
- Mahendiran V
---------------------------
குறள் 414:
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாந் துணை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நூல்கள் பல படிக்க  வாய்ப்பில்லாவிடினும் கற்றறிந்தோர் உரைகளை செவி வழி கேட்டு கற்பது, சங்கடங்கள் வரும் போது ஊன்றுகோலாய் அமையும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even if one doesn't have an opportunity to study books or epics, studying by hearing good words from scholars would help him during suffering like a stick helps to a disabled man.
- Mahendiran V
---------------------------
குறள் 415:
இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒழுக்கமுடையோரின் சொற்களை கேட்டறிதல், வழுக்கும் நிலத்தில் விழாமல் காக்கும் ஊன்றுகோல் போல், வாழ்க்கைக்கு பெரிதும் உதவும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Words heard from Morality persons would be helpful to one's life like a stick is helping one when he is walking on slipping floor.
- Mahendiran V
---------------------------
குறள் 416:
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
எந்த அளவுக்கு நல்லவைகளை கேட்டறிகிறோமே அந்த அளவுக்கும் அதிகமாகவே பெருமை சேர்க்கும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One would get multiple amount of prides only based on the amount of good words of good people heard by him.
- Mahendiran V
---------------------------
குறள் 417:
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நுணுக்கமாய் கேட்டறிந்து ஞானம் பெற்றோர், அறிந்ததில் ஒரு சில பிழையென்றாலும் அதை பேதமையாய் சொல்லி உடைக்க மாட்டார்.
- வை.மகேந்திரன்
Explanation in English:
Those who are intellectual and earning wisdom of hearing preciously good words from good people would not break errors innocently perhaps found by them.
- Mahendiran V
---------------------------
குறள் 418:
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நல்லோரின் நல் கருத்தை செவி வழியே கேட்க தயங்குபவர்களுக்கு/மறுப்பவர்களுக்கு செவிகளிருந்தாலும் அவர்கள் செவிடர்களே.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Those who are hesitating or denying to hear good words of good people are also deaf despite having ears.
- Mahendiran V
---------------------------
குறள் 419:
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நுண்ணிய கருத்துக்களை நயம்பட கேட்டறிய தவறியோர், பணிவுடன் பேசும் பண்பை இழப்பர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Those who fail to hear pleasant and good words of good people would lose the trait of saluation and obedience during their speaking.
- Mahendiran V
---------------------------
குறள் 420:
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினு மென்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
செவி இனிக்க கேட்டறியும் சுவையை உணராது, வாய் இனிக்க உண்ணும் உணவே சுவை என்போர் இவ்வுலகில் இருப்பதும் இறப்பதும் ஒன்றுதான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Being alive and dying is same what those who don't realise the sweet taste of hearing for gathering good words through ears, but preferring for the taste of food that they eat.
- Mahendiran V
---------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work are reserved by me, and it's my own property.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖

Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS