Skip to main content

அதிகாரம் 41 கல்லாமை CHAPTER 41 ILLITERACY 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)

அதிகாரம் 41 கல்லாமை
CHAPTER 41  ILLITERACY
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
---------------------------
குறள் 401:
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்
- தெய்வப்புலவர்.

விளக்கம்:
கருத்து நிறைந்த நூல்களை படிக்காமல், கற்கிறேன் என்று கூறுவது, அரங்கு மற்றும் உபகரணம் இல்லாமல் பகடை விளையாடுவது போல் ஆகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one says that he is learning but not studying books that contain wisdom, that is like the state of playing gambling without hall and instrument.
- Mahendiran V
---------------------------
குறள் 402:
கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.
- தெய்வப்புலவர்.

விளக்கம்:
கல்லாதவர்கள், கற்றோர் அவையில் பேச விரும்புவது என்பது, மார்பங்களிரண்டும் இல்லாதவள் புணர்ச்சிக்கு ஆசைப்படுவது போலாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The state of willing of ill-educated to address in the hall of educated is like a woman is willing for lust without her boobs.
- Mahendiran V
---------------------------
குறள் 403:
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்
- தெய்வப்புலவர்.

விளக்கம்:
கற்றவர்கள், அவையில் உரையாற்றும் பொழுது கல்லாதவர்கள் அவையடக்கத்துடன் முந்தி நின்று எதுவும் பேசாமல் கவனித்துக்கொண்டிருந்தால், கல்லாதோரும் கற்போரே.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If ill-educted is being quiet and listen obediently while educated are addressing, ill-educated too are learners.
- Mahendiran V
---------------------------
குறள் 404:
கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்
கொள்ளார் அறிவுடை யார்
- தெய்வப்புலவர்.

விளக்கம்:
கல்லாதோரின் கருத்துக்கள் சிறந்ததாயிருந்தாலும், கற்றோர் அதை ஏற்க மறுப்பர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even if the concept spoken by ill-educated is found to be best, educated would deny to accept that.
- Mahendiran V
---------------------------
குறள் 405:
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்
- தெய்வப்புலவர்.

விளக்கம்:
கற்றோர் அவையில் கல்லாதோர் தற்பெருமை பேசினால், அவர்களின் சொல்லாடல் நீர்த்துப்போகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If ill-educated speak their self prides in the hall of educated, the words expressed by illeducated would be invalid.
- Mahendiran V
---------------------------
குறள் 406:
உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்
- தெய்வப்புலவர்.

விளக்கம்:
கல்லாதோர், விளைச்சல் தராத தரிசு நிலத்தை போல உயிரிருந்தும் பலனில்லாத உடலை மட்டும் தாங்கி நிற்பவரே.
- வை.மகேந்திரன்

Explanation in English:
As if a dried land that is not providing harvest, Ill-educated are like a mere body despite having live.
- Mahendiran V
---------------------------
குறள் 407:
நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம்
மண்மாண் புனைபாவை யற்று
- தெய்வப்புலவர்.

விளக்கம்:
நூல்கள் பலபடித்து நுட்பமான அறிவு பெறாமல் அழகாக மட்டும் இருப்பவனின் நிலைப்பாடு, அழகுப் பதுமையொன்று மணல் சிற்பமாக இருப்பதற்கு சமமாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Being pretty in appearance but not carrying knowledge by studying books a lot is like a beautiful woman sculptured by mere sand.
- Mahendiran V
---------------------------
குறள் 408:
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு
- தெய்வப்புலவர்.

விளக்கம்:
கல்லாதோரிடம் குவிந்து கிடக்கும் செல்வம், கற்றுணர்ந்த நல்லோரின் வறுமையை விட கொடியது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Immesurable wealth that is had by ill-educated is atmost worst than the severe poverty of educated.
- Mahendiran V
---------------------------
குறள் 409:
மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு
- தெய்வப்புலவர்.

விளக்கம்:
கல்லாதோர் மேற்பிறப்போ கீழ்பிறப்போ, அது முக்கியமல்ல, அவர்கள் கற்றோருக்கு சமமாக கருதப்பட மாட்டார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Whether ill-educated is a born bred of highclass or lowclass is not a matter, they can't be considered equallent to educated.
- Mahendiran V
---------------------------
குறள் 410:
விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்
- தெய்வப்புலவர்.

விளக்கம்:
நுல்கள் பல கற்று மதி நிறைந்தோரே மக்களாக கருதப்படுவர். மற்றோர் விலங்குகளுக்கு ஒப்பானவர்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
People those who have studied books a lot and being fullfilled with wisdom are called human. Others are considered as animals. 
- Mahendiran V
---------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work are reserved by me, and it's my own property.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖

Comments

Popular posts from this blog

01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு.

 ஆங்கில மொழியின் இலக்கணம் -  சுத்த தமிழில் - எழுதியவர் வை.மகேந்திரன் 01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு. எத்தனையோ மொழிகள் உலகில் தொன்றுதொட்டு பேசப்பட்டு வந்தாலும் கி.பி 1000 -களில் முளைத்த ஆங்கிலம், உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு அத்தியாவசியமான மொழியாக கருதப்படுவது உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம். க்ரீக் லத்தீன் ஸ்பானிஷ் ஜெர்மனிக் பிரெஞ்ச் போன்ற மொழிகளின் கலவை இதில் இருப்பதால் ஆங்கிலம் ஒரு தனி அந்தஸ்தை பெற்றிருக்கக்கூடும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆங்கில மொழியை பற்றி ஒரு உண்மையான கூற்று என்ன தெரியுமா ? பார்ப்பதற்கு அதுவும் வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஆங்கிலம் கடினமாக தோன்றுகிறது ஆனால் இதை புழங்க ஆரம்பித்து விட்டால் இதைப்போல ஒரு எளிதான மொழி எங்கும் இல்லை என்கின்ற உணர்வு நிச்சயமாக தோன்றும். அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என்கின்றார்கள் மொழியியல் நிபுணர்கள். என்னை பொறுத்தவரையில் நான் அதை உள்ளபூர்வமாக உணர்கிறேன் . இந்த மொழியில் உள்ள இலக்கண கட்டமைப்புகள் எந்த மொழியிலும் காணப்படாதவை என்று கூறி விட முடியாது என்றாலும் ஆங்கில இலக்கண கட்டமைப்பு...

எத்தனை வார்த்தைகள் தெரிந்திருக்க வேண்டும், ஆங்கிலம் பேச?

It looks difficult but no any other is as easy as it is

 Hello.. Greetings to all. This is MAHENDIRAN, a trainer of English language for grown ups.  Saying frankly, I would express the real fact of tendency of English language whether it is difficult or easy.  Even here too I should have mentioned the word EASY in the first. Because the entire world thinks that it is a bit difficult, I too entered the word DIFFICULT in the first.  When we dig on the Earth for getting water, we dig for a moment and close the pit or leaving it because the water isn't gotten suddenly. And we start the same work, digging for water in another place in the same area. Almost all who learn English are doing the same process when they want to learn English as a language. As I said earlier, Do you know what the real fact in learning English language is? Surely English can never be taught or learned as other skills are.  One can adapt with English only by the way of catching it. I mean IT here is English.  Only by the way of listening and ...