அதிகாரம் 43 அறிவுடைமை CHAPTER 43 POSSESSION OF KNOWLEDGE 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)

அதிகாரம் 43
அறிவுடைமை
CHAPTER 43
POSSESSION OF KNOWLEDGE
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
---------------------------
குறள் 421:
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பகைவனாலும் அழிக்க முடியாத கோட்டை போன்றது அறிவு. அழிவிலிருந்து காப்பாற்றும் கருவி ஆகும் அறிவு.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Knowledge is power like a fort. It is a strong weapon to protect from destroyal
- Mahendiran V
---------------------------
குறள் 422:
சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பா லுய்ப்ப தறிவு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மனம்போன போக்கில் போக விடாமல், தீய வழியை தகர்த்து நல்வழிக்கு இட்டுச் செல்வதே அறிவு ஆகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Knowledge will direct one very right path by cracking evils; won't lead to wrong path wherever mind goes.
- Mahendiran V
---------------------------
குறள் 423:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
யார் எக்கருத்தை கூறினாலும், அதிலுள்ள நற்பொருளை இனம்கண்டு எடுத்துக்கொள்வதே அறிவார்ந்த செயல்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If whoever says whatever about a matter, the wisdom is that to pick out good ones from such matter by distinguishing intelligently.
- Mahendiran V
---------------------------
குறள் 424:
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிறரிடம் கருத்துரைக்கும் பொழுது அவர் புரியும்படி உரைப்பதே அறிவார்ந்த செயல். அதுபோல பிறர் கூறும் கருத்து நுட்பமாய் இருந்தாலும் அதை புரிந்துகொள்ளும் ஆற்றலே அறிவு ஆகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The right knowledge is that to express a matter to others understandably, and to comprehend the concept from a matter despite being tough.
- Mahendiran V
---------------------------
குறள் 425:
உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங் கூம்பலு மில்ல தறிவு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிறரிடம் நட்பு பாராட்டி, பகைத்து மீண்டும் கூடி என்றிராமல் எப்பொழுதும் பகையின்றி நட்பு பாராட்டி நிலைத்து வாழ்வதே அறிவாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Living stably by making friendship always with others without making eneminess now and then is knowledge.
- Mahendiran V
---------------------------
குறள் 426:
எவ்வ துறைவ துலக முலகத்தோ டவ்வ துறைவ தறிவு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உலகத்தார் செல்லும்/ சொல்லும் வழி நல்வழியாயின், முரண்படாமல் அதை  பின்பற்றுவதே அறிவார்ந்த செயல்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If the route of world people is found to be correct, following such without controversial is knowledgable act.
- Mahendiran V
---------------------------
குறள் 427:
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அறிவுடையோர் ஒரு செயலை அதன் பின்விளைவை துல்லியமாய் அறிந்து செயல்படுவர். அப்படி செய்யாதார் அறிவில்லாதவராவர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Wisdomed people would act always by predicting precisely the future effect of their acts. Those who don't fo do are senseless people.
- Mahendiran V
---------------------------
குறள் 428:
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ தஞ்சல் அறிவார் தொழில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அஞ்சவேண்டியதற்கு அஞ்சாமல் வீரம் காட்டுபவர்கள் அறிவில்லாதவர்கள்; விளைவை நினைத்து வீரம் காட்டாதவர்கள் அறிவாளிகள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Those who show their bravery in the situation when one should be calm are senseless. Those who don't show their anger in the same situation, and being calm are knowledgeable persons.
- Mahendiran V
---------------------------
குறள் 429:
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வரப்போகும் விளைவை அனுமானித்து புத்திக்கூர்மையாக செயல்படுவோர்க்கு எக்காலத்திலும் துன்பம் வர வாய்ப்பில்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
No miseries to people those who act by thinking and predicting intelligently about future effects.
- Mahendiran V
---------------------------
குறள் 430:
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனு மிலர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அறிவுடையோரிடம் பொருள், செல்வம் இருப்பினும் இல்லாவிடினும் இருக்க பெற்றவரே. அறிவிலாரிடம் அவை குவிந்திருந்தாலும் இல்லா நிலையிலிருப்பர் ஆவர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Whether knowledged are having wealth and sources or not is not a matter, it is considered that they have all those because of having knowledge. But, even if ill- knowledged are having an infinite wealth and property, it is considered that they have nothing.
- Mahendiran V
---------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work are reserved by me, and it's my own property.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖

Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS