திருக்குறள். அதிகாரம் 27. தவம் Chapter 27. PENANCE (Explanation in Tamil and English written by Mahendiran V)

அதிகாரம் 27. தவம் Chapter 27. PENANCE
(Explanation in Tamil and English written by Mahendiran V)

தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
----------------------------

குறள் 261:
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு

விளக்கவுரை:
தனது துன்பத்தை தாங்கிக்கொள்வதும், பிறருக்கு துன்பம் தராமல் இருப்பதே பெரும் தவமாகும்.

Explanation in English:
The prime penance is that the state of being patient despite having difficulties, and not to do illy activities to others.
----------------------------
குறள் 262:
தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள்வது

விளக்கவுரை:
தவம் செய்யும் ஒழுக்கநெறிமுறைகளை அறிந்தோரே தவம் செய்யமுடியும் மற்றோர் தவம் செய்தலாகாது.

Explanation in English:
Only the persons who know the disciplines of penance can do penance. Others can't do it.
----------------------------
குறள் 263:
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
மற்றை யவர்கள் தவம்

விளக்கவுரை:
துறவறம் பூண்டோர்க்கு பணிவிடை செய்வதே ஒரு தவம் என்றெண்ணி தவம் செய்ய மறப்பார்கள் பலர்.

Explanation in English:
Some might forget to perform penance since they are enthusiastically servicing to those who have quitted all desires.
----------------------------
குறள் 264:
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்

விளக்கவுரை:
தவ வலிமையால் தீயோரை திருத்தமுடியும். நல்லோரை மிக வல்லோராக்க முடியும்.

Explanation in English:
Surely, Through one's penance, he  can correct evil guys to bring to the right path, and can enhance purists more and more.
----------------------------
குறள் 265:
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்

விளக்கவுரை:
விரும்பியவற்றை விரைந்து பெற்றுக்கொள்ளும் பாக்கியம் தவ வலிமைக்கு உண்டு.

Explanation in English:
One can obtain all betterments rapidly by doing a strong penance morally.
----------------------------
குறள் 266:
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு

விளக்கவுரை:
நற்குணம் கொண்ட நல்லவர்களே தவம் செய்ய முற்படுவர். ஏனையோர் ஆசைக்குட்பட்டு அவலநிலை அடைவர்.

Explanation in English:
Only disciplined persons would desire to do penance. Others would be spinned in greedy net and get evils a lot.
----------------------------
குறள் 267:
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு

விளக்கவுரை:
சூட்டினால் தங்கம்  மென்மேலும் மிளிர்வது போல, தன்னை மென்மேலும் வருத்தி தவம் செய்வோருக்கு பிரகாச வாழ்க்கை கிட்டும்.

Explanation in English:
As if gold is glittering more and more since it is heated, ones who do penance more and more would get glittering in their life.
----------------------------
குறள் 268:
தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்

விளக்கவுரை:
தன் உயிரே முக்கியம், தன் வாழ்க்கையே செளக்கியம் என்று நினைக்காதவர்களை   இம் மண்ணிலுள்ள அனைத்து உயிர்களும் வணங்கும்.

Explanation in English:
All living beings in this earth would be praising ones who don't consider that only their lifes are important for them.
----------------------------
குறள் 269:
கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு

விளக்கவுரை:
இறப்பையும் எதிர்கொள்ளும்/வெல்லும் ஆற்றலை தூய்மையான தவத்தின் பயனால் பெற முடியும்.

Explanation in English:
One can defeat his death too by virtue of his pure penance.
----------------------------
குறள் 270:
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்

விளக்கவுரை:
இவ்வுலகில் பலருக்கு எதுவுமில்லா நிலை ஏற்படுவதற்கு காரணம் ஒழுக்கம் நிறைந்த தவநிலை மேற்கொள்ளாததே. சிலருக்கு மட்டும் அருள் கிடைப்பதற்கு காரணம் துன்பத்தையும் பொறுத்து தவநிலையை பின்பற்றுவதே.

Explanation in English:
Nil betterment in many persons' life is happening because of their ignorance of moral penance. Likewise a few are getting grace of God because of their strong penance despite having difficulties.
----------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com

(Copyright of this work is mine. Copying, plagiarising without my permission is prohibited. MAHENDIRAN V)
--------------------------


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS