திருக்குறள். அதிகாரம் 29 கள்ளாமை CHAPTER 29 NOT TO STEAL OTHERS' (Explanation in Tamil and English written by Mahendiran V)

அதிகாரம் 29 கள்ளாமை

CHAPTER 29 
NOT TO STEAL OTHERS'

(Explanation in Tamil and English written by Mahendiran V)


தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
----------------------------
குறள் 281:
எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு

விளக்கவுரை:
பிறரிடம் அவப்பெயர் எடுக்க  வேண்டாமெனில் அடுத்தவரின் பொருளை கிஞ்சித்தும் அபகரிக்க நினைக்கக்கூடாது.

Explanation in English:
If ones don't want to get worst name in society, he ought not to think steal others.
--------------------------
குறள் 282:
உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வே மெனல்

விளக்கவுரை:
அடுத்தோரின் பொருளை அடைய நினைத்துப் பார்ப்பதே ஒரு வித கள்வத்தனம்.

Explanation in English:
Even one thinks about stealing others, that too is a kind of robriness.
--------------------------
குறள் 283:
களவினா லாகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும்

விளக்கவுரை:
பிறர் பொருளை களவி இன்பம் பெற்றால் பல மடங்காக தன் பொருள் அழியும்.

Explanation in English:
If one may be pleasant by stealing others', he would lose his things multiple times.
--------------------------
குறள் 284:
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்

விளக்கவுரை:
ஒரு முறை களவு செய்து ஆசைக் கண்டுவிட்டால் பல முறை செய்ய நேர்ந்து அளவிலா துன்பம் பெற வழிவகுக்கும்.

Explanation in English:
If one desires stealing act one time, he would meet out infinite evils as he would be eager to steal often.
--------------------------
குறள் 285:
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்

விளக்கவுரை:
அருளும் அன்பும் மனதில் நிலைத்திருந்தால் களவு செய்யும் எண்ணம் கனவிலும் வராது.

Explanation in English:
If one is graceful and kindness, he would never think about stealing others'.
--------------------------
குறள் 286:
அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்

விளக்கவுரை:
இருப்பதை வைத்து வாழ்க்கை நடத்த விரும்பாது பேராசை நிரம்பியவருக்கே களவு செய்யும் தீமை எண்ணம் வரும்.

Explanation in English:
Only the greedy persons who aren't able to live with sufficient wealth would get the illy thoughts of stealing others'.
--------------------------
குறள் 287:
களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்க ணில்

விளக்கவுரை:
அளவறிந்து வாழும் ஆற்றல் பெற்றோர் களவு செய்யும் மாயவலையில் விழ மாட்டார்.

Explanation in English:
Ones who know to move their lives with codes of limitation wouldn't not fall on stealing greed.
--------------------------
குறள் 288:
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சில் கரவு

விளக்கவுரை:
அளவோடு ஆசைப்பட்டு வாழ்பவர்கள் நெஞ்சில் அறம் இருக்கும். களவு செய்து வாழ்வோர் நெஞ்சில் வஞ்சம் மட்டும்தான் இருக்கும்.

Explanation in English:
Ones who live by feeling their wealth is sufficient would have morality. Thieves would have only aggressiveness.
--------------------------
குறள் 289:
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்

விளக்கவுரை:
திருடும் தொழிலை தவிர பிற தொழில் மேல் நாட்டமில்லாதவர்கள் அதனாலேயே அழிந்துபோவர்.

Explanation in English:
Ones who don't experience and desire at any profession other than stealing would be destroyed because of that characteristic.
--------------------------
குறள் 290:
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு

விளக்கவுரை:
கள்வர்களின் உயிர் அவர்களிடம் இருப்பதையே ஒரு பாவமாக நினைக்கும், களவு எண்ணம் இல்லாதோரின் உயிர்நிலைக்கு தேவர்களின் ஆசீர்வாதம் கிட்டும்.

Explanation in English:
Even soul too be shy and would think as a sin to tend on stealers. Those who don't have stealing thoughts in mind would be blessed by Gods.
--------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com

(Copyright of this work is mine. Copying, plagiarising without my permission is prohibited. MAHENDIRAN V)
--------------------------

Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS