ஆங்கிலம் பேசுவது எளிது. கற்கும், கற்றுதரும் வித்தைகள் சரியாக இருக்கும்பட்சத்தில்.- வாருங்கள். எளிதாக அறிவோம் ஆங்கிலம் - வை.மகேந்திரன்

ஆங்கிலம் பேசுவது எளிது. கற்கும், கற்றுதரும் வித்தைகள் சரியாக இருக்கும்பட்சத்தில்.

பிற மொழிகளை விட ஆங்கிலம் எளிதானது. அதை கற்கும் அல்லது கற்பிக்கும் முறையில் உள்ள பிழையே அம்மொழி கடினமானது போல் தோன்றுகிறது.

ஒருவர் ஆங்கிலம் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தாலே, அம்மொழியை பேசும் திறன் வர ஆரம்பித்துவிடும். அதனால்தான் நான் தரும் பயிற்சியில் LISTENING SKILL - க்கு முக்கியத்துவம் தருகிறேன்.

தினந்தோறும் குறைந்தது ஒரு மணி நேரமாவது இப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
முதல் ஒருவாரம் வந்து அமர்ந்து கவனித்துக்கொண்டிருக்கவேண்டியதுதான். அவ்வப்பொழுது நான் கேட்கும் (உங்களைப் பற்றிய) சிறுசிறு வினாக்களுக்கு ஒரு வார்த்தையில் ஆங்கிலத்தில் பதில் சொன்னால் போதும்.

பிறகு
தங்களின் அன்றாட நடவடிக்கைகளை சரியோ தவறோ ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்கும் தைரியம் உங்களுக்கு தானாக வரும்.

ஆங்கிலத்தின் மீது ஆர்வம் வருவது இப்பொழுதுதான்.

தொடர்ந்து சிறுசிறு தலைப்புகள் தருவேன். நிறைய பேச வேண்டியதில்லை. தவறாக இருந்தாலும் பரவாயில்லை.. கச்சிதமாக பேசினால் போதும்.

எந்தெந்த இடத்தில் இலக்கண பிழைகள் செய்கிறீர்கள் என்பதை தாங்களே உணரும் பக்குவம் வரும்.

முக்கியமான விஷயம் யாதெனில், இலக்கணத்தை ஒரு தலைப்பாக எடுத்து பயில்வது இலக்கணத்தின் மீதே கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தலாம். ஆதலால் தான் உரையாடலின் பொழுது எந்த இடத்தில் எந்த இலக்கணம் தேவைப்படுகிறது என்பதை உங்களை அறிந்து கொள்ள செய்கிறேன்.
பயிற்சி எடுக்க எடுக்க பிழைகள் தவிர்க்கப்படுவதை தாங்களே உணர்வீர்கள்.
இதை தான் நான் Imitative type of learning என்கிறேன்.

20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பயிற்சி இது.

பட்டம் மற்றும் பட்டய படிப்பு படிப்பவர்கள் படித்து முடித்து நேர்முகத் தேர்விற்கு ஆயத்தமாகுபவர்கள், இப்பயிற்சியில் சேரலாம்.
பயிற்சியில் சேர
விபரங்கள் வேண்டுமாயின்,
தொடர்புகொள்ளவும்.
நன்றி.
MAHENDIRAN V
(Writer, Translator, Formerly professor of English)
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM
Mobile: 9842490745, 6380 406 625

Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS