அதிகாரம் 44 குற்றங்கடிதல் CHAPTER 44 CONDEMNING CRIMES. 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 44  குற்றங்கடிதல்
CHAPTER 44 
CONDEMNING CRIMES.
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். 

VISITING PROFESSOR IN ENGLISH AS A FOREIGN LANGUAGE. CONTENT WRITER, TRANSLATOR

MOBILE 9842490745, 6380406625
---------------------------

குறள் 431:
செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஆணவம் சினம் காமம் இவை மூன்றையும் அகற்றினால் பெருமையாக வாழலாம்.
- வை.மகேந்திரன்

EXPLANATION IN ENGLISH:
One who gives up pride, anger and lust will be alive proudly in the world.
-MAHENDIRAN V
------------------
குறள் 432:
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கொடை நிறுத்தல், மதிப்பிழந்த மானம்,  அளப்பறியா பெருமை ஆகியவை ஆள்பவர்களுக்கு இருக்கக்கூடாத பண்புகள்.
- வை. மகேந்திரன்

EXPLANATION IN ENGLISH:
Stopping donations, valueless honour, infinite pride are big enemies to rulers.
-MAHENDIRAN V
------------------
குறள் 433:
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சிறிதளவு குற்றமாகினும் அதுவும் பெரியக் குற்றங்களுக்கு சமம் தான் என்று கருதி குற்றம் செய்யாதிருப்போரே பழிக்கு அஞ்சி நடப்பவராவர்.
வை.மகேந்திரன்

EXPLANATION IN ENGLISH:
No size for crime. Even if it is a little one, one should consider such is big. If one follows this concept that means that he is the man who fears to sins.
-MAHENDIRAN V
------------------
குறள் 434:
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
குற்றம் அது பழி கொணரும். பகையை தரும். அழிவுக்கான ஆதாரம் அது. குற்றம் காக்க குற்றம் செய்யின் தீமையை விலைக்கு வாங்குவது போலாகும்.
வை.மகேந்திரன்

EXPLANATION IN ENGLISH:
Crime would bring sin, eneminess. That is the factor for demise. If one commits at crime, it mean that he purchases evils by paying money.
-MAHENDIRAN V
------------------
குறள் 435:
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
குற்றம் செய்யும் முன்பே அதை செய்யாதிருக்க பண்படாதவனின் வாழ்க்கை எரியும் தீயின் அருகில் இருக்கும் வைக்கோல் போல் கருகிப்போகும்.
- வை.மகேந்திரன்

EXPLANATION IN ENGLISH:
If one doesn't stop himself crimes even if he is in the situation to do, that is like hills of straws is kept near the flaming fire.
-MAHENDIRAN V
------------------
குறள் 436:
தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிறரிடம் குற்றம் காணும் முன்னே தன்பால் ஏதும் குற்றம் இல்லை என்று நிற்பவனே குறையில்லாத அரசன்.
- வை.மகேந்திரன்

EXPLANATION IN ENGLISH:
One who stands without any crime on him before he accuses others is a faultless king.
-MAHENDIRAN V
------------------
குறள் 437:
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கொடையேதும் செய்யாது கஞ்சம் காட்டி பூட்டி வைக்கப்பட்ட செல்வம் வீணாய் அழிந்துபோகும்.
- வை.மகேந்திரன்

EXPLANATION IN ENGLISH:
One's wealth that is kept locked as stinginess by not using that to donate to inabilities will vanish itself.
-MAHENDIRAN V
------------------
குறள் 438:
பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பொருளின் அல்லது செல்வத்தின் மேல் வீணான பற்றுக்கொண்டு அது சேர வேண்டிய இடத்திற்கு செல்ல விடாமல் நிறுத்திவைப்பதே பெருங் குற்றமாகும்.
- வை.மகேந்திரன்

EXPLANATION IN ENGLISH:
By putting a fake affection on money and stopping such to reach at right place is a very big crime.
-MAHENDIRAN V
------------------
குறள் 439:
வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நன்மை தரும் செயல் செய்யாது தன்னைக் கண்டு தானே வியந்து பாராட்டிக் கொண்டிருப்பவன் நல்ல மனிதனில்லை.
- வை.மகேந்திரன்

EXPLANATION IN ENGLISH:
Instead of doing good acts, if one's getting surprised of his own prides and speaking proudly himself, he is  not a good person.
-MAHENDIRAN V
------------------
குறள் 440:
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தன் விருப்பம் எதுவென்று பிறர் அறியாவண்ணம் செயல்படுபவனை/ ஆட்சி புரிபவனை பகைவனின் வஞ்சனை கூட எதுவும் செய்யாது.
- வை.மகேந்திரன்

EXPLANATION IN ENGLISH:
Manoeuvre acts of enemies will not affect to the king who is ruling intelligently by making others not knowing his activities of his future plans.
-MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work are reserved by me, and it's my own property.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖

Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS