அதிகாரம் 48 வலியறிதல் CHAPTER 48 TO KNOW THE STRENGTH 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 48 
வலியறிதல்
CHAPTER 48 
TO KNOW THE STRENGTH
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
------------------
குறள் 471:
வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு செயலை செய்யத் துணியும் முன்பு, தனது வலிமை, செயலின் வீரியம், எதிரியின் பலம், தனக்கும் எதிரிக்கும் துணை வருவோரின் வலிமை இவை நான்கையும் ஆராய்ந்த பின்பே துணியவேண்டும்.
வை. மகேந்திரன்

Explanation in English:
Before daring to take an action, one should dare to examine his strength, the vigor of the action, the strength of the enemy, and the strength of himself and the adversary's companions.
MAHENDIRAN V
---------------------
குறள் 472:
ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
போருக்கு செல்லும் அரசன் அல்லது ஒரு செயலை செய்யும் நபர், தன் சுயத்திறன் அனைத்தையும் கணக்கிட்டு அதற்கேற்றார் போல் செயல்பட்டால் தோல்விக்கு இடமே இல்லை.
வை. மகேந்திரன்

Explanation in English:
There is no room for failure if the king who goes to war, or the person who does an act, calculates all of his self-efficiency  and acts as if they are appropriate.
MAHENDIRAN V
---------------------
குறள் 473:
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஏதோ ஒரு உத்வேகத்தில் மனஎழுச்சி ஏற்பட்டு திட்டமிடாமல் அவசரகதியில் செயல்பட்டு தோல்வியடைந்தோர் பலர்.
வை. மகேந்திரன்

Explanation in English:
There are many people who got upset and failed on their action because of their sudden inspiration and act in an unplanned emergency.
MAHENDIRAN V
---------------------
குறள் 474:
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தன் வலிமை எந்தளவு என்றறியாமல், தன்னைத்தானே புகழ்ந்துரைத்து வியந்து செய்யப்படும் செயல் கெட்டுப்போகும்.
வை. மகேந்திரன்

Explanation in English:
The action done by one without realizing how strong he is, and  praising himself and wondering will be spoiled.
MAHENDIRAN V
---------------------
குறள் 475:
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மயிலிறகை பல மடங்கு வண்டியில் ஏற்றினால் அது வண்டியின் அச்சை முறிக்கக்கூட செய்யும்.  ஆகையால் எளியார் தானே என நினைத்து பகைக்கொள்வது ஆபத்து.
வை. மகேந்திரன்

Explanation in English:
If the feathers of peacock is over-loaded on a cart, it will even break the axle of the cart. Therefore, it is dangerous if one calculates that the enemy is simple.
MAHENDIRAN V
---------------------
குறள் 476:
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தான் வலிமைப் பெற்றவன் என்றெண்ணி மரக்கிளையின் நுனிக்கு செல்ல ஆசைப்பட்டால் உயிர் மிஞ்சாது. எதிரியின் தன்மைக்கேற்றவாறு ஒருவர் செயல்படவேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
வை. மகேந்திரன்

Explanation in English:
If one wants to go to the tip of the tree thinking that he is strong, life will not survive. It implies that one must act according to the character of the enemy.
MAHENDIRAN V
---------------------
குறள் 477:
ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தன் இருப்பின் அளவறிந்து ஈகை செய்தால் மட்டுமே ஒருவனின் செல்வம் அவனிடம் தங்கும் இல்லேல் அது கரைந்துபோகும்.
வை. மகேந்திரன்

Explanation in English:
Only when one spends or donates his wealth according to his staying asset, his wealth and asset would exist otherwise it would vanish.
MAHENDIRAN V
---------------------
குறள் 478:
ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
செல்வத்தின் வரவு சிறிதாகினும் பெரும் செலவு செய்யாதிருப்பின் செல்வத்தின் இருப்பிற்கு பாதகம் வராது. அளவறிந்து செலவு செய்வதே பொருளை காக்கும்.
வை. மகேந்திரன்

Explanation in English:
The existence of wealth will not be affected if the credit of the wealth is spent reasonably. Measuring and spending will save one's sources.
MAHENDIRAN V
---------------------
குறள் 479:
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தன் இருப்பு மற்றும் செலவினத்தை அறியாமல் வேகத்தில் நடைபோடும் ஒருவரின் வாழ்க்கையில் செல்வம் பொருள் இருப்பது போல் தெரிந்தாலும் இல்லாத நிலையை ஏற்ப்படுத்தும்.
வை. மகேந்திரன்

Explanation in English:
Wealth in the life of one who walks at speed without knowing his balance and expense can cause a state of non-existence even if it seems to be existing.
MAHENDIRAN V
---------------------
குறள் 480:
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒருவர் தன் வருவாய்க்கும் இருப்புக்கும் மீறி உபகாரம், ஈகை செய்தால் இருக்கும் செல்வம் தானாக வற்றிப்போகும்.
வை. மகேந்திரன்

Explanation in English:
If one does good deeds beyond his means of income and wealth, the existing wealth will dry up itself.
MAHENDIRAN V
---------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS