அதிகாரம் 47 தெரிந்து செயல்வகை. CHAPTER 47 DOING KNOWN ACTS 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 47 தெரிந்து செயல்வகை.
CHAPTER 47 DOING KNOWN ACTS
📖📖📖📖📖📖📖📖

(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖

தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the domain of mahendiranglobalenglish.blogspot.com
------------------
குறள் 461:
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு செயலை செய்யுங்கால், அதனால் வரும் லாபம் என்ன, இழப்பு என்ன, இழப்பை ஈடுகட்டும் வழி என்ன என்றாராய்ந்து செய்க.
வை. மகேந்திரன்

Explanation in English:
When you dare do an act, do it after determining the merits and demerits of such act. Try to know how to compensate the loss, if it occurs.
MAHENDIRAN V
------------------
குறள் 462:
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
கரும்பொருள் யாதொன்று மில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தெரிந்தவர்கள் துணை கொண்டு தேர்ந்து நின்று  செயல்பட்டால், இயலாத செயல் என்று எதுவுமில்லை.
வை. மகேந்திரன்

Explanation in English:
If one does an act with a strong coordinations of known persons, nothing would be impossible.
MAHENDIRAN V
------------------
குறள் 463:
ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
ஊக்கா ரறிவுடை யார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு தொழிலில் அதிகமாய் லாபம் ஈட்டலாம் என்று எண்ணி முதலீட்டையும் இழக்கும் செயலை அறிவுடையோர் செய்யமாட்டார்.
வை. மகேந்திரன்

Explanation in English:
The wise man will not do the act of losing the investment thinking that he can make more profit in a business.
MAHENDIRAN V
------------------
குறள் 464:
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பா டஞ்சு பவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தன் மீது பழி வந்தால் என்ன செய்வது என்று அஞ்சுபவரே தனக்கு தெளிவில்லாத செயல்களில் இறங்க மாட்டார்.
வை. மகேந்திரன்

Explanation in English:
The one who is afraid of what will happen if he is blamed for his blunder action by the society will not step in to do the vague actions.
MAHENDIRAN V
------------------
குறள் 465:
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தன்னை தன் நாட்டை காத்துக் கொள்ளும் வழிமுறை அமைக்காது பகைவரை எதிர்க்க துணியும் அரசனின் செயல், பகைவரை அவன் தன் மண்ணிலேயே வளரவிடுவது போலாகும்.
வை. மகேந்திரன்

Explanation in English:
The act of a king who dares to oppose the enemy who does not set himself the means of defending his country is like he grows the enemy in his own soil.
MAHENDIRAN V
------------------
குறள் 466:
செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
செய்ய தேவையற்றவைகளை செய்தாலும் கேடு வரும்; செய்யவேண்டியவற்றை செய்யாமல் இருந்தாலும் கேடு நிச்சயம்.
வை. மகேந்திரன்

Explanation in English:
Doing things that are not necessary to do is harm; Even if you don’t do what needs to be done is also certainly harm.
MAHENDIRAN V
------------------
குறள் 467:
எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு செயலை செய்யும் முன்பே ஆராய்ந்து துணிந்து செயல்படுவது விவேகம்; செயலில் இறங்கிய பின் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணுவது இழுக்காகும்.
வை. மகேந்திரன்

Explanation in English:
It is prudent to explore and act boldly before committing an act; It is a drag if you think that you can take care of yourself after getting active.
MAHENDIRAN V
------------------
குறள் 468:
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
துணைகளுடன் கூடி நின்று வெற்றி பெறுவோம் என்று எண்ணி சுய முயற்சி ஏதுமில்லாது செய்யப்படும் செயல் கெட்டுத்தான் போகும்.
வை. மகேந்திரன்

Explanation in English:
The act of doing anything without self-effort but thinking that we will succeed together with others' coordinations will go bad.
MAHENDIRAN V
------------------
குறள் 469:
நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிறக்கு உதவி செய்யுங்கால், அவரின் குணமறிந்து நிலையறிந்து அவ்வுதவி செய்யாவிட்டால், அது நன்றானது என்றாலும் பழி வந்து சேரும்.
வை. மகேந்திரன்

Explanation in English:
If you commit to help other without knowing the stance and trait of him, even if your help is good one, you'll be blamed.
MAHENDIRAN V
------------------
குறள் 470:
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
கொள்ளாத கொள்ளா துலகு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தன் தகுதிக்கு பொருந்தாத ஒரு செயலை ஒருவர் செய்யுங்கால் உலகம் அவரை இகழும் ஆதலால் இகழாவண்ணம் செயல்கள் செய்ய அறிதல் வேண்டும்.
வை. மகேந்திரன்

Explanation in English:
If a person commits an act that does not suit his qualifications, the world will despise him, and so, he should know to choose  acts to do that not be despised by the world.
MAHENDIRAN V
---------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS