அதிகாரம் 50 இடனறிதல் CHAPTER 50 TO KNOW TO CHOOSE THE PLACE FOR BATTLE 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 50 இடனறிதல்

CHAPTER 50  

TO KNOW TO CHOOSE THE PLACE FOR BATTLE
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
------------------
குறள் 491:
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பகைவர் மீது படையெடுக்கும் முன்பே முற்றுகை செய்வதற்கான இடத்தை ஒரு அரசன் தேர்வு செய்துகொள்ள வேண்டும். எதிரியை வெல்வது எளிது என்கிற இறுமாப்பு அவனுக்கு இருக்கக்கூடாது.
வை.மகேந்திரன்

Explanation in English:
A king must choose a place to lay siege before invading the enemy. He should not have the arrogance that it is easy to defeat the enemy.
MAHENDIRAN V
------------------
குறள் 492:
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அதி வலிமை நிறைந்து போரிடும் திறமையது ஒரு அரசனுக்கு இருந்தாலும், அரண் காத்து போரிடும் குணம் அவனிடம் இருப்பின் அது பலவித ஆக்கத்தை தரும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Although a king has the ability to fight with great strength, if he has the ability to fight the bulwark, it will give a variety of creativity.
MAHENDIRAN V
------------------
குறள் 493:
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இடம் எது என்று அறிந்து, தற்காப்பு முறையுடன், அதன் மேல் போர் செய்யும் அரசன் வலிமையில்லாதவரானாலும் வலிமையானவரே.
வை.மகேந்திரன்

Explanation in English:
Knowing what the place is, with a defensive system, the king who fights over is strong even if he is not strong.
MAHENDIRAN V
------------------
குறள் 494:
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஏற்ற இடம் நன்கறிந்து சூழ்ந்து நின்று போரிட்டால், எதிரியின் வெற்றி கனவு எளிதாக பறந்து செல்லும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If the right place is well known and surrounded, and fight, the enemy's dream of victory will easily fly away.
MAHENDIRAN V
------------------
குறள் 495:
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நீரில் வாழ்ந்து பிற உயிர்களை கொல்லும் முதலை, நிலத்திற்கு வந்தால் அந்த பிற உயிர்களால் கொல்லப்படும்.
(வீரம் விவேகம் வெற்றி அனைத்தும் இருக்கும் இடத்தை பொறுத்தது)
வை.மகேந்திரன்

Explanation in English:
The crocodile that lives in the water and kills other creatures will be killed by those other creatures if it comes to land. (Bravery Wisdom Success all depends on where you are)
MAHENDIRAN V
------------------
குறள் 496:
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வீதியில் உலாவரும் தேர் கடல் சென்றால் மூழ்கும். கடலில் உலாவரும் கப்பல் நிலம் வந்தால் கரை தட்டும்.
(எந்த செயலுக்கு எந்த இடம் என்பதை ஒரு அரசன் அறிவது அவசியம்)
வை.மகேந்திரன்

Explanation in English:
The chariot that roams the streets will sink if it goes to sea. A ship sailing in the sea will hit the shore if it lands. (A king needs to know which place is suitable for which action)
MAHENDIRAN V
------------------
குறள் 497:
அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி யிடத்தாற் செயின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பகைவரின் களம் அறிந்து போர் செய்யவேண்டிய திறன்களை எதை எதை எங்கு வைப்பது என்றறிந்தால் போதும், அஞ்சாமை என்கிற துணை ஒன்றே போதும் எதிரியை எளிதில் வென்றுவிடலாம்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Knowing the enemy's domain and knowing where to put the fighting capabilities is enough, by having the state of fearlessness one can defeat the enemy.
MAHENDIRAN V
------------------
குறள் 498:
சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சிறிய படையாகினும் குறை ஒன்றுமில்லை. போர் களத்தில் அதற்கு ஏற்ற  இடத்தில் வைக்கப்பட்டால், அது பெரும்படையும் அழிக்கும் வல்லமை பெறும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
There is nothing wrong with a small force. If it is placed on the battlefield in a suitable place, it will gain most of its destructive power.
MAHENDIRAN V
------------------
குறள் 499:
சிறைநலனுஞ் சீறும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோ டொட்ட லரிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மிகுந்த அரணும் மிகச்சிறந்த படை பலமும் வைத்திராமல், பகைவனின் இடம் சென்று பகை தீர்க்க படையெடுத்து வெல்வது என்பது அரிதாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
It is hardly to go to the enemy's place and invade and defeat the enemy without having the greatest defense and the best force.
MAHENDIRAN V
------------------
குறள் 500:
காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பாகனுக்கும் அஞ்சாத, வேல் கொண்ட வீரர்களையும் வீழ்த்த வல்ல யானை, சேற்றில் சிக்கினால் நரிக்கு தான் அது இரையாகும்.
(வீரம் அது சார்ந்து நிற்கும் இடத்தில் தான் பயன்படும்)
வை.மகேந்திரன்

Explanation in English:
The elephant that is not afraid of its mahout may defeat the warriors who are with weapons, but if it is caught in the mud, even a fox too will kill it. (Bravery is used only where it depends)
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS