அதிகாரம் 45 பெரியாரைத் துணைக்கோடல் CHAPTER 45 HAVING SUPPORTS OF WISDOMED ADULTS. 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 45
பெரியாரைத் துணைக்கோடல்
CHAPTER 45 
HAVING SUPPORTS OF WISDOMED ADULTS.
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR
From the domain of mahendiranglobalenglish.blogspot.com
------------------------
குறள் 441:
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மெத்த படித்தறிந்தவர்களின் கருத்துக்களை கேட்டறிவது கேட்ப்போரின் திறனை பெரிதும் மேம்படுத்தும்.
- வை.மகேந்திரன்.

Explanation in English:
The state of listening to the opinions of well-educated people will greatly enhance the ability of the listener.
- MAHENDIRAN V

குறள் 442:
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்
- தெய்வப்புலவர்.

விளக்கம்:
அனைத்தும் உணர்ந்த  பெரியோரின் அரவணைப்பில் இருந்தால், இருக்கும் துன்பம் போவதுடன், வரும் துன்பமும் வராமல் போகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If all is in the warmth of the conscious adult, the existing suffering will go away and the coming suffering will not come.
- MAHENDIRAN V

குறள் 443:
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்
- தெய்வப்புலவர்.

விளக்கம்:
அனுபவம் மிகுந்த பெரியோரை தமக்கே உரியவராக்கி கொள்வது அரிதிலும் அரிது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
It is extremely rare for experienced adults to claim ownership of themselves.
- MAHENDIRAN V

குறள் 444:
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை
- தெய்வப்புலவர்.

விளக்கம்:
அறிவிலும் ஆற்றலிலும் தம்மைவிட சிறந்தோரை தமக்கேயுரியவராக்கி கொள்வதே தலைச்சிறந்த பேறு.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The ultimate goal is to make someone your own colleague who is better than you in knowledge and energy.
- MAHENDIRAN V

குறள் 445:
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்
- தெய்வப்புலவர்.

விளக்கம்:
சுற்றி நிற்கும் அமைச்சர்களில் யாரை ஒரு மன்னன் கண்ணாகப் போற்றி அறிவுரை பெறுகிறானோ அவனை பிறரும் சூழ்ந்து கொள்வர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Whoever of the ministers standing around is praised by a king will be surrounded by others.
- MAHENDIRAN V

குறள் 446:
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்
- தெய்வப்புலவர்.

விளக்கம்:
தகுதி நிறை வல்லோனை துணையாக கொண்டிருக்கும் மன்னனுக்கு எதிரியால் யாதொரு துன்பமும் வர வாய்ப்பில்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
No suffering is likely to come from the enemy to the emperor who is accompanied by a meritorious expert.
- MAHENDIRAN V

குறள் 447:
இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்
- தெய்வப்புலவர்.

விளக்கம்:
ஆள்பவனிடம் தீமைகள் காணும்போது கண்டித்து அவனை குறை திருத்தும் பெரியோர் இருக்கும் பட்சத்தில், அவன் ஆட்சிக்கு தீங்கு வாய்ப்பில்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If there are well versed who condemn and criticize the ruler when he sems to be doing evil, he is unlikely to harm the regime.
- MAHENDIRAN V

குறள் 448:
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
- தெய்வப்புலவர்.

விளக்கம்:
குறைகளை சுட்டிக்காட்டும் சுற்றத்தார் இல்லாத மன்னனின் ஆட்சி, பிறரால் கெடுக்கப்படாவிட்டாலும் தானே கெடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The rule of a king who has no circle to point out faults, will spoil itself even if it is not spoiled by others.
- MAHENDIRAN V

குறள் 449:
முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை
- தெய்வப்புலவர்.

விளக்கம்:
முதலீடு இல்லாத தொழிலுக்கு வருவாய் எப்படி வரும்? அது போல அரண் போல் தாங்கி நிற்கும் பெரியோரின் துணை இல்லாத மன்னனின் ஆட்சி கவிழும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
How do you get gain from your business without investment? The rule of the emperor will be overthrown without the support of safeguard who stands like  pillars.
- MAHENDIRAN V

குறள் 450:
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்
- தெய்வப்புலவர்.

விளக்கம்:
நல்லோர் மற்றும் பெரியோரின் துணையில்லா ஒருவருக்கு பகையாளரின் தீமைச் செயலால் வரும் தீங்கு பன்மடங்கு வலியைத் தரும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The harm caused by the evil deed of the enemy will inflict multiple pains on one  if he doesn't have  support of the good and wisdomed adults.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS