அதிகாரம் 49 காலமறிதல் CHAPTER 49 TO KNOW THE IMPORTANCE OF TIME 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 49
காலமறிதல்
CHAPTER 49  TO KNOW THE IMPORTANCE OF TIME
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
------------------
குறள் 481:
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இரவு நேரத்தில் பலமுடையதான கோட்டானை பகல் நேரத்தில் பலம் பெறும் காக்கை வெல்வது போல, ஒரு அரசன் காலம் கணித்து பகைவரை வெல்லவேண்டும்.
வை. மகேந்திரன்

Explanation in English:
A king must predict the time and defeat the enemy, just as an owl that is strong only at night time is defeated by a strong crow in day time.
MAHENDIRAN V
------------------
குறள் 482:
பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பருவம் அறிந்து, காலத்தை வீணாக்காமல் செய்யப்படும்  ஒரு வினை அல்லது தொழில், செல்வத்தை நீங்காமல் நிறையச் செய்யும்.
வை. மகேந்திரன்

Explanation in English:
Knowing the season, an action or business that is done without wasting time, will fullfill the wealth in treasury.
MAHENDIRAN V
------------------
குறள் 483:
அருவினை யென்ப உளவோ கருவியாற்
கால மறிந்து செயின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தகுந்த கருவிகள்/ சாதனங்களைக் கொண்டு காலம் அறிந்து ஒரு செயலை செய்தால் அரிதான காரியம் எதுவுமில்லை.
வை. மகேந்திரன்

Explanation in English:
You'll feel that nothing is a rare action, if an action is done by a proper tool and equipment at the right time.
MAHENDIRAN V
------------------
குறள் 484:
ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காலம் இடம் அறிந்து ஒரு செயல் செய்யப்படுமாயின், இவ்வையகமும் கைக்குள் வந்தது போன்ற உணர்வு ஏற்படும்.
வை. மகேந்திரன்

Explanation in English:
If an action is taken by knowing the right time and right place, one who does the action will realise that world has been subdued in hand.
MAHENDIRAN V
------------------
குறள் 485:
காலங் கருதி இருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வையகத்தை வசப்படுத்தலாம் என்ற எண்ணமுடையோர், ஒன்றை செயல்படுத்துவதற்கு மனம் தளராமல் காலம் வரட்டும் என்று காத்திருப்பர்.
வை. மகேந்திரன்

Explanation in English:
Those who think that they can subdue the world will wait for the time without getting discouraged to do something.
MAHENDIRAN V
------------------
குறள் 486:
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நெஞ்சுரம் கொண்ட அரசன் தன் பகையை வெல்ல காலம் கருதி காத்திருப்பது, வேகம் எடுத்து சீறி பாய்வதற்கு ஒரு விலங்கு  சற்று பின்னோக்கி செல்வது போல் தான்.
வை. மகேந்திரன்

Explanation in English:
The brave king waits for the time to defeat his enemy, like an animal going backwards a little to pick up speed to attack.
MAHENDIRAN V
------------------
குறள் 487:
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அறிவுடைய அரசன், தன் பகைவனின் தீமை பொல்லாததாகினும், தாக்குவதற்கு சினத்தை வெளியில் காட்டாமல் அகத்தில் வெகுண்டு, காலம் வரும் வரை காந்திருப்பான்.
வை. மகேந்திரன்

Explanation in English:
The wise king, despite his enemy's evil is worst, would have longed for the time to come, without showing outbursts but sharpening his anger inside to attack.
MAHENDIRAN V
------------------
குறள் 488:
செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை
காணிற் கிழக்காந் தலை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பகைவனின் அழிவு அவன் கையிலே தான் என்று அவன் அழியும் வரை சினம் காட்டாது பொறுத்திருப்பான் சிறந்த அரசன்.
வை. மகேந்திரன்

Explanation in English:
The best king is the one who does not show anger until the destruction of the enemy that the destruction is in his hands.
MAHENDIRAN V
------------------
குறள் 489:
எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காலம் நேரம் ஒத்துப் போனால், தாமதமேதும் செய்யாது செயற்கரிய செயல்களை செவ்வனே செய்து முடிப்பதே மான்பான செயல்.
வை. மகேந்திரன்

Explanation in English:
If the time is appropriate to do an action, Doing it without delay even a bit though it is difficult is an intelligent action.
MAHENDIRAN V
------------------
குறள் 490:
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இரை கிடைக்கும் வரை அசையாது நின்று இரை வந்ததும் விரைந்து கொத்தும் ஒரு கொக்கை போல, காலம் வந்ததும் எதிரியை விரைந்து தாக்குவதே நல்-அரசனுக்கு அழகாகும்.
வை. மகேந்திரன்

Explanation in English:
The beauty for a good king is, attacking his enemy immediately when the time is very appropriate, as if the bird (Crane) is standing motionless until it gets prey and hooking (picking) the prey in no time when it sees the prey.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS