அதிகாரம் 46 சிற்றினம் சேராமை CHAPTER 46 NOT TO BE AFFILIATED TO EVIL TEAM. 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 46 சிற்றினம் சேராமை
CHAPTER 46  NOT TO BE AFFILIATED TO EVIL TEAM.
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR
From the domain of mahendiranglobalenglish.blogspot.com
------------------
குறள் 451:
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தீய சிந்தனையுடையோரிடம் தீய குணம் படைத்தோரே சேர்வர். நற்சிந்தனையுள்ள பெரியோர்கள் தங்கள் பெருமை கருதி  ஒருகாலும் அவர்களுடன் சேர மாட்டார்கள்.
வை. மகேந்திரன்

Explanation in English:
Evil-minded server would join with evil-minded people. Good-natured adults will never join them because of protecting pride.
MAHENDIRAN V
---------------------
குறள் 452:
நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நீர், தான் சேரும் நிலத்தின் தரத்திற்கேற்ப தன் தன்மையை மாற்றிக் கொள்வதுபோல மக்களின் அறிவும் அவர்கள் சேர்ந்து பழகும் மக்களின் தரத்தின்படியே அமையும்.
வை. மகேந்திரன்

Explanation in English:
Like water changes its character according to the quality of the land it joins, the knowledge of the people and the quality of the people with whom they live.
MAHENDIRAN V
---------------------
குறள் 453:
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னா னெனப்படுஞ் சொல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒருவர் இயல்பாக அறிவு நிறைந்து காணப்பட்டாலும், சேர்ந்திருக்கும் கூட்டத்திற்கேற்றவாறே  அவர் எத்தகையர் என்பது தீர்மானிக்கப்படும்.
வை. மகேந்திரன்

Explanation in English:
Although a person is naturally knowledgeable, his or her size will be determined by the congregation to which he or she belongs.
MAHENDIRAN V
---------------------
குறள் 454:
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்
கினத்துள தாகும் அறிவு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிறப்பில் இயற்கையாய் பெறப்பட்ட அறிவு அழகாகினும், பழகும் சேரும் கூட்டத்தின் தன்மைக்கேற்ப அது மாறிப்போகும்.
வை. மகேந்திரன்

Explanation in English:
Naturally acquired knowledge at birth is beautiful, but it will change according to the nature and quality of the gathering from society.
MAHENDIRAN V
---------------------
குறள் 455:
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மனமும் செயலும் செழுமையானாலும் சேரும் கூட்டத்தின் தன்மை பொறுத்தே தூய்மை நிலை அமையும்.
வை. மகேந்திரன்

Explanation in English:
Although the mind and action are rich, the level of purity depends on the nature of the gathering from the colleagues with whom one joins.
MAHENDIRAN V
---------------------
குறள் 456:
மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மனம் தூய்மையாக இருக்குங்கால், புகழும் பெருமையும் பெருகும். சார்ந்திருக்கும் கூட்டம்/இனம் சிறப்புற இருப்பின், தீவினைகள் எதுவும் அண்டாது.
வை. மகேந்திரன்

Explanation in English:
If the mind is pure, fame and glory will increase. If the dependent crowd / race is good, there will be no harm or evil.
MAHENDIRAN V
---------------------
குறள் 457:
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழுந் தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மனத்தூய்மை உயிரை காக்கும். சார்ந்திருக்கும் இனத்தின் தூய்மை நல்லவை அனைத்தையும் கொண்டு வரும்.
வை. மகேந்திரன்

Explanation in English:
Purity of mind saves lives. The purity of the race with whom one accompnies will bring all that is good.
MAHENDIRAN V
---------------------
குறள் 458:
மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
கினநலம் ஏமாப் புடைத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மனமது நலமாயிருந்து நன்மை பயத்தாலும், சார்ந்திருக்கும் இனம் நலமாக இருந்தால் மனம் மேலும் வலிமை பெறும்.
வை. மகேந்திரன்

Explanation in English:
Though the mind is healthy and causes good, the mind will gain more strength if the affiliated race is good.
MAHENDIRAN V
---------------------
குறள் 459:
மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தி னேமாப் புடைத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மனம் நலமாயிருந்து எல்லையில்லா தொடர் இன்பம் பெற்றாலும் கூடி நிற்கும் இனத்தின் தரமே அதற்கு வலிமை சேர்க்கும்.
வை. மகேந்திரன்

Explanation in English:
Even if the mind is healthy and enjoys boundless happiness, the quality of the assembled race will add strength to it.
MAHENDIRAN V
---------------------
குறள் 460:
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉ மில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒருவர் சேர்ந்து நிற்கும் நல்ல இனத்திற்கு இணையான துணை எதுவுமில்லை; தீய இனத்திற்கு இணையான துன்பம் எதுவுமில்லை.
வை. மகேந்திரன்

Explanation in English:
There is no equal to the good race in which one stands together; There is no suffering equal to that of the evil race.
MAHENDIRAN V
---------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS