Skip to main content

அதிகாரம் 71 குறிப்பறிதல் CHAPTER 71 THE KNOWLEDGE OF MIND-READING 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 71
குறிப்பறிதல்
CHAPTER 71
THE KNOWLEDGE OF MIND-READING
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 701:
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
முகத்தை பார்த்த மாத்திரத்திலேயே ஒருவன் என்ன நினைக்கிறான் என்று குறிப்பு அறிகிறவன் இவ்வுலகின் ஆபரணம்.
வை.மகேந்திரன்

Explanation in English:
One, who reads another one's mind and knowing what that person thinks just by a sight, is a good ornament to this world.
MAHENDIRAN V
------------------
குறள் 702:
ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
துளியும் சந்தேகமில்லாமல் துல்லியமாய் ஒருவரின் முகத்தை பார்த்து கணிப்பவர் தெய்வ கடக்ஷம் பொருந்தியவர்.
வை.மகேந்திரன்

Explanation in English:
One who reads another one's mind presisely by an eyesight is known as a person blessed by God fo his having extraordinary sense.
MAHENDIRAN V
------------------
குறள் 703:
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்துங் கொளல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
முகத்தை பார்த்து துல்லியமாய் கவனிப்பவரை எத்தனை செல்வம் கொடுத்தாவது அவரை தன்னகத்தே தன் பணிக்கு ஒருவர் வைத்துக்கொள்ளலாம்.
வை.மகேந்திரன்

Explanation in English:
One can appoint a person who is skilled in reading mind minutely. He is valuable for confidential works.
MAHENDIRAN V
------------------
குறள் 704:
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மனதில் இருப்பதை மதியால் குறிப்புணர்பவர்கள் மற்றவர்களை போல் உடலுறுப்புகள் கொண்டிருந்தாலும் அறிவில் உயர்ந்தவராவார்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Although Mind readers may be compared to normal persons because of having similar human parts, they are the most wisdomed persons above the normal persons.
MAHENDIRAN V
------------------
குறள் 705:
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வாய்திறவாது கண்களால் பார்த்தே மற்றவரின் உள் மனதை அறிய இயலவில்லையெனில், கண்களால் என்ன தான் பயன் ?
வை.மகேந்திரன்

Explanation in English:
If one is not able to know what is in one's mind by looking at eyes, what is the uses of having eyes?
MAHENDIRAN V
------------------
குறள் 706:
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பளிங்குக்கல் அல்லது கண்ணாடி, அப்படியே ஒருவரின் தோற்றத்தை பிரதிபலிப்பதுபோல் முகத்தின் தன்மை உள்ளத்தில் உள்ளதை காட்டிக் கொடுத்துவிடும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
As if the glittering marble stone reflects one's appearance while standing nearby, one's stance of eye sight would emit what is in his mind.
MAHENDIRAN V
------------------
குறள் 707:
முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
விருப்பையும் வெறுப்பையும் உடனே உமிழ்வது முகம் மட்டுமே. முகம் தான் முதல் அறிவு என்பது மிகையில்லை.
வை.மகேந்திரன்

Explanation in English:
One's first sense of knowledge is eyes, because only the eyes are reflecting one's pleasance and sadness.
MAHENDIRAN V
------------------
குறள் 708:
முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உள்ளத்து உணர்வை உள்ளபடி அறியும் அறிவுடையோர் கிடைத்தால் போதும். அவரை வைத்து சந்தேகத்துரியவரின் முகத்தின் முன் நிற்கவைத்து உண்மையை பெறலாம்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If an intelligent person who is able to bring out one's inner sense through the eye sight is there that is enough, he can be utilised by an admin to know all truths of one who is suspected.
MAHENDIRAN V
------------------
குறள் 709:
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மனதில் உள்ளது பகையா நட்பா என்று ஒருவர் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவரது கண்களின் பார்வை தன்மை அதை எளிதில் சொல்லிவிடும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
It is needless that one has to say that he is being friendly or enemiously, his eye sight would easily emit such stance.
MAHENDIRAN V
------------------
குறள் 710:
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்காற்
கண்ணல்ல தில்லை பிற
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒருவரின் உள்ளத்து அறிவை, பார்வையாலேயே கண்டறிந்து வெளிபடுத்துபவரே நுண்ணறிவு படைத்தவர் ஆகிறார்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Only the person who reads one's mind just by an eyesight and expresses the facts is called the most micro intelligent person.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு.

 ஆங்கில மொழியின் இலக்கணம் -  சுத்த தமிழில் - எழுதியவர் வை.மகேந்திரன் 01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு. எத்தனையோ மொழிகள் உலகில் தொன்றுதொட்டு பேசப்பட்டு வந்தாலும் கி.பி 1000 -களில் முளைத்த ஆங்கிலம், உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு அத்தியாவசியமான மொழியாக கருதப்படுவது உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம். க்ரீக் லத்தீன் ஸ்பானிஷ் ஜெர்மனிக் பிரெஞ்ச் போன்ற மொழிகளின் கலவை இதில் இருப்பதால் ஆங்கிலம் ஒரு தனி அந்தஸ்தை பெற்றிருக்கக்கூடும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆங்கில மொழியை பற்றி ஒரு உண்மையான கூற்று என்ன தெரியுமா ? பார்ப்பதற்கு அதுவும் வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஆங்கிலம் கடினமாக தோன்றுகிறது ஆனால் இதை புழங்க ஆரம்பித்து விட்டால் இதைப்போல ஒரு எளிதான மொழி எங்கும் இல்லை என்கின்ற உணர்வு நிச்சயமாக தோன்றும். அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என்கின்றார்கள் மொழியியல் நிபுணர்கள். என்னை பொறுத்தவரையில் நான் அதை உள்ளபூர்வமாக உணர்கிறேன் . இந்த மொழியில் உள்ள இலக்கண கட்டமைப்புகள் எந்த மொழியிலும் காணப்படாதவை என்று கூறி விட முடியாது என்றாலும் ஆங்கில இலக்கண கட்டமைப்பு...

எத்தனை வார்த்தைகள் தெரிந்திருக்க வேண்டும், ஆங்கிலம் பேச?

It looks difficult but no any other is as easy as it is

 Hello.. Greetings to all. This is MAHENDIRAN, a trainer of English language for grown ups.  Saying frankly, I would express the real fact of tendency of English language whether it is difficult or easy.  Even here too I should have mentioned the word EASY in the first. Because the entire world thinks that it is a bit difficult, I too entered the word DIFFICULT in the first.  When we dig on the Earth for getting water, we dig for a moment and close the pit or leaving it because the water isn't gotten suddenly. And we start the same work, digging for water in another place in the same area. Almost all who learn English are doing the same process when they want to learn English as a language. As I said earlier, Do you know what the real fact in learning English language is? Surely English can never be taught or learned as other skills are.  One can adapt with English only by the way of catching it. I mean IT here is English.  Only by the way of listening and ...