Skip to main content

அதிகாரம் 77 படை மாட்சி CHAPTER 77 THE MAJESTY OF ARMY/TROOPS 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 77 
படை மாட்சி
CHAPTER 77
THE MAJESTY OF ARMY/TROOPS
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 761:
உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நான்கு வித படைபலமும் சிறந்திருந்து, பகைவனை வெல்லும் ஆற்றலே ஒரு அசனுக்கு நிறை மிகு செல்வம் ஆகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The great wealth of a king is what he is having promptly the four troops and their ability of effort of collapsing his enemies.
MAHENDIRAN V
------------------
குறள் 762:
உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
போரில் பின்னடைவு ஏற்பட்டாலும், முன்னோர்களின் வீரத்தை மனதிற்கு கொண்டு முடிந்தவரை முன்னேறும் விவேகம், பரம்பரை வலிமைக்கான அடையாளம்.
வை.மகேந்திரன்

Explanation in English:
No matter at all if a king's troop is back foot during war. The troops have to prove their genetic bravery and have to forward to attack for showing the icon of the nation's ancestry effort.
MAHENDIRAN V
------------------
குறள் 763:
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
எண்ணிலடங்கா எலிப்படை எதிர்த்து வருவதால் என்ன பயன்? நாகம் ஒன்று மூச்சு விட்டால் எலிகளனைத்தும் நாசமாகும். (படைக்கு எண்ணிக்கை பெரிதல்ல, வலிமை தான் முக்கியம்.)
வை.மகேந்திரன்

Explanation in English:
A long and deep breath of dragon is enough to throw away the numerous troops of rats. (Numbers of soldiers is not a matter but their strength and efforts)
MAHENDIRAN V
------------------
குறள் 764:
அழிவின் றறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
எதிரியின் பலத்தையும் சூழ்ச்சியையும் எளிதில் வெல்லும் பாரம்பரிய பலம் கொண்ட படையே சிறந்த படை.
வை.மகேந்திரன்

Explanation in English:
The best army is who can win the maneuver and strength of enemy's army, by having traditional bravery.
MAHENDIRAN V
------------------
குறள் 765:
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உயிர்களை பறிக்கும் நிலையில் எதிரி திரண்டு வந்தாலும் அஞ்சாமல் கூடி நின்று எதிர்த்து நிற்கும் திறன் படைத்ததே சிறந்த படை.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even if numerous members of enemy's army are coming forward to pluck souls, the army of a country who are courageously standing up with enormous effort and fighting with them is the great one.
MAHENDIRAN V
------------------
குறள் 766:
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வீரம், மானம், நன்னடத்தை, தலைவனின் உறுதியான கட்டளை - இவை நான்கும் ஒரு படை கடைபிடிக்க வேண்டிய பண்புகள்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The four best characteristics to be followed by an army are, keeping bravery, dignity, good attitudes and obeying the prominent order of the king.
MAHENDIRAN V
------------------
குறள் 767:
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
போரை நிறுத்தும் அல்லது வெல்லும் மதிநுட்பம் எதுவெனில் முன்னேவரும் தூசு படைகளை முன்னேற விடாமல் தாங்கி தாக்கும் ஆற்றல் அறிந்திருப்பதே.
வை.மகேந்திரன்

Explanation in English:
The intelligence of stopping or winning the war is, to know to  collapse the infantry troops earlier as a bilateral action.
MAHENDIRAN V
------------------
குறள் 768:
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு படையின் சிறந்த அணிவகுப்பே, எதிரியை வீழ்த்தும் போர் திறமைக்கு அடிப்படை ஆதாரம் ஆகும். பலமும் வீரமும் ஆற்றலும் அணிவகுப்பின் தோற்றத்தின் மூலமே வெளிப்படும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The prominent parade before war is the base of victory. The appearance of parade would say the strength and efficiency of an army.
MAHENDIRAN V
------------------
குறள் 769:
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தாழ்வு மனப்பான்மை, வறுமை, மன்னன் அல்லது நாட்டின் மீது வெறுப்பு- இவை ஒரு படைக்கு இல்லாதிருந்தால் எதிரியை எளிதில் வீழ்த்தும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Soldiers shouldn't have a drop of inferiority, poverty and hatred on the king or nation. Only then, it's easy one to defeat enemy.
MAHENDIRAN V
------------------
குறள் 770:
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வீரம் விவேகம் நிறைந்த போர்வீரர்களை ஒரு படை கொண்டிருந்தாலும், நல்லதோர் படைத்தலைவன் அப்படைக்கு இல்லாவிட்டால் அப்படை சிறந்து விளங்காது.
வை.மகேந்திரன்

Explanation in English:
Although an army is strong and brave, if it doesn't have a good leadership, such army would lose its strength.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖

Comments

Popular posts from this blog

01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு.

 ஆங்கில மொழியின் இலக்கணம் -  சுத்த தமிழில் - எழுதியவர் வை.மகேந்திரன் 01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு. எத்தனையோ மொழிகள் உலகில் தொன்றுதொட்டு பேசப்பட்டு வந்தாலும் கி.பி 1000 -களில் முளைத்த ஆங்கிலம், உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு அத்தியாவசியமான மொழியாக கருதப்படுவது உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம். க்ரீக் லத்தீன் ஸ்பானிஷ் ஜெர்மனிக் பிரெஞ்ச் போன்ற மொழிகளின் கலவை இதில் இருப்பதால் ஆங்கிலம் ஒரு தனி அந்தஸ்தை பெற்றிருக்கக்கூடும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆங்கில மொழியை பற்றி ஒரு உண்மையான கூற்று என்ன தெரியுமா ? பார்ப்பதற்கு அதுவும் வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஆங்கிலம் கடினமாக தோன்றுகிறது ஆனால் இதை புழங்க ஆரம்பித்து விட்டால் இதைப்போல ஒரு எளிதான மொழி எங்கும் இல்லை என்கின்ற உணர்வு நிச்சயமாக தோன்றும். அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என்கின்றார்கள் மொழியியல் நிபுணர்கள். என்னை பொறுத்தவரையில் நான் அதை உள்ளபூர்வமாக உணர்கிறேன் . இந்த மொழியில் உள்ள இலக்கண கட்டமைப்புகள் எந்த மொழியிலும் காணப்படாதவை என்று கூறி விட முடியாது என்றாலும் ஆங்கில இலக்கண கட்டமைப்பு...

Need our seminar programme at your college?

Dear all, (This announcement is only for Engineering colleges) Now you can avail our seminar in your venue itself against your invitation. If you wish to put a programme aiming to boost your final year students of Engineering streams in communication skills and for enabling them to crack job interviews, and to make them know to balance the gape between academy and career, you may contact me.  I can be scheduling date and time any two hours for the seminar depending upon the availability of my hours. Likely the following topics shall be covered and mentored to your students.  How to balance the gape between the terms of academy and career? What's the real communication?  How to crack job interviews? The remuneration for my conducting this programme is variable based on the distance. For more details, please contact me by a call or WhatsApp or Email. Thanking you MAHENDIRAN V A VISITING PROFESSOR OF COMMUNICATION SKILLS AND SOFT SKILLS. MOTIVATIONAL SPEAKER NAGAPATTINAM W.A...

திருக்குறள் அதிகாரம் 118. கண் விதுப்பழிதல் CHAPTER 118. EYES ARE REALISING THE DEPTH OF MY LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள் அதிகாரம் 118. கண் விதுப்பழிதல் CHAPTER 118. EYES ARE REALISING THE DEPTH OF MY LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of  mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1171: கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யாங்கண் டது - தெய்வப்புலவர் விளக்கம்: கண்டதால் தானே இன்பமாக கொல்லும் இந்த காதல் ஏற்பட்டது? அவரை காண விடு என அந்த கண்கள் இப்பொழுது கெஞ்சுவது தான் ஏனோ! - வை.மகேந்திரன் Explanation in English: Because the eyes saw him and caused me the love on him. Being so, Why are those eyes begging me that I have to let them to see him again? - MAHENDIRAN V ------------------ குறள் 1172: தெரிந்துணரா நோக்கிய உண்க...