Skip to main content

அதிகாரம் 74 நாடு. CHAPTER 74 NATION. 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 74 நாடு.
CHAPTER 74  NATION.
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 731:
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நிறைந்த நிலங்கள் மூலம் விளைபொருளும், மதி நிறைந்த மக்களும், குறையாத செல்வமும் நிறைந்திட்ட பொது நிலமே நாடு ஆகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The good nation is one that has the crops a lot from several fields, wisdomed people and  non-decreasable wealth.
MAHENDIRAN V
------------------
குறள் 732:
பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பெரும் பொருள் நிறைந்திட்டு, பிறர் போற்றும் நிலை பெற்று, கேடு அது இல்லை என கூறப்படும் பெரும் நிலபரப்பே நாடு ஆகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A big surface that has all wealth, prides from all other nations, and the status of no miseries is the best country.
MAHENDIRAN V
------------------
குறள் 733:
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்
கிறையொருங்கு நேர்வது நாடு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வரும் மக்களை வரவேற்று குடிமக்களாக்கி இறைநிலை தழுவி பொருள் சேர வருவாய் தேடும் பரந்த நிலமே நாடு ஆகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A broad surface that welcomes refugees and making them citizens, following spiritual affairs, and having efforts to increase the revenue is the good nation.
MAHENDIRAN V
------------------
குறள் 734:
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மக்களின் பசி போக்கி நோய் அண்டா நிலை ஏற்படுத்தி பகை வந்தால் வெற்றி கண்டு மக்களை காக்கும் புவியின் ஒரு பகுதியே நாடு ஆகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Being a part of the earth that takes care of no hunger, no disease, and winning enemies incase of war and protecting people is the good nation.
MAHENDIRAN V
------------------
குறள் 735:
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அரசுக்கு இடையூறு தரும் குழுக்களும், உள்ளிருந்தே பழி செய்யும் கூட்டமும், வேந்தனை அச்சுறுத்தும் நிலையும் இல்லாத பூமியே நல்ல நாடு ஆகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A good nation must have the stances not to interrupt or threat the king by cunning teams or any kind of teams of astrocities and misery doers.
MAHENDIRAN V
------------------
குறள் 736:
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பகைவரால் கேடு வந்தாலும், கேடு வராவிட்டாலும் தன் வளம் குன்றா நிலையில் இருக்கும் நாடே  தலைச்சிறந்த நாடாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A nation should not lose its dignity and wealth even if there is illy acts from enemies or not such stance.
MAHENDIRAN V
------------------
குறள் 737:
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நில நீரும் மழை நீரும், மலையும் மலையிலிருந்து வீழ்ந்து வரும் நீர் வளமும், காபந்துக்கான அறனும் ஒரு நாட்டின் உறுப்புகளாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The prime elements of a nation are, water sources of the earth and rain; hills and water falling from the hills; and a strong protection for people.
MAHENDIRAN V
------------------
குறள் 738:
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிணியற்ற வாழ்வு, செல்வம் நிறைந்திருத்தல், நல்ல விளைச்சல் தரும் வயல்வெளிகள், பாகாப்பு, மக்களின் மகிழ்ச்சி - இவை ஐந்தே ஒரு நாட்டிற்கு அழகு சேர்க்கும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
These five important sources are beautifying a nation. They are, disease free life, good wealth, enormous harvest from fields, stance of good defence, cheerfulness of people.
MAHENDIRAN V
------------------
குறள் 739:
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிரயத்தனம் மற்றும் கடும் முயற்ச்சியால் வளர்ந்த நாடு, நாடு தான் என்றாலும், இயற்கை வளங்கள் மிகுதியாய் நிறைந்திருந்து அது காக்கப்பட்டு வளரும்  நாடே சிறந்த (அதிஷ்ட்டகரமான) நாடாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even though a nation is growing up of full efforts of people and hard work, one that is growing up of having nature sources and is protected is the best (luckiest) nation.
MAHENDIRAN V
------------------
குறள் 740:
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அனைத்து நன்மைகளும் வளங்களும் நிறைந்திருந்தாலும், மாண்பில்லா/கொடூர மன்னன் ஒரு  நாட்டை ஆண்டால், எல்லாம் பாழாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Although a nation has all wealth and efforts, if the nation is ruled by a dishonest and cruel king, such nation would get collapsed.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖

Comments

Popular posts from this blog

01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு.

 ஆங்கில மொழியின் இலக்கணம் -  சுத்த தமிழில் - எழுதியவர் வை.மகேந்திரன் 01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு. எத்தனையோ மொழிகள் உலகில் தொன்றுதொட்டு பேசப்பட்டு வந்தாலும் கி.பி 1000 -களில் முளைத்த ஆங்கிலம், உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு அத்தியாவசியமான மொழியாக கருதப்படுவது உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம். க்ரீக் லத்தீன் ஸ்பானிஷ் ஜெர்மனிக் பிரெஞ்ச் போன்ற மொழிகளின் கலவை இதில் இருப்பதால் ஆங்கிலம் ஒரு தனி அந்தஸ்தை பெற்றிருக்கக்கூடும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆங்கில மொழியை பற்றி ஒரு உண்மையான கூற்று என்ன தெரியுமா ? பார்ப்பதற்கு அதுவும் வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஆங்கிலம் கடினமாக தோன்றுகிறது ஆனால் இதை புழங்க ஆரம்பித்து விட்டால் இதைப்போல ஒரு எளிதான மொழி எங்கும் இல்லை என்கின்ற உணர்வு நிச்சயமாக தோன்றும். அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என்கின்றார்கள் மொழியியல் நிபுணர்கள். என்னை பொறுத்தவரையில் நான் அதை உள்ளபூர்வமாக உணர்கிறேன் . இந்த மொழியில் உள்ள இலக்கண கட்டமைப்புகள் எந்த மொழியிலும் காணப்படாதவை என்று கூறி விட முடியாது என்றாலும் ஆங்கில இலக்கண கட்டமைப்பு...

Need our seminar programme at your college?

Dear all, (This announcement is only for Engineering colleges) Now you can avail our seminar in your venue itself against your invitation. If you wish to put a programme aiming to boost your final year students of Engineering streams in communication skills and for enabling them to crack job interviews, and to make them know to balance the gape between academy and career, you may contact me.  I can be scheduling date and time any two hours for the seminar depending upon the availability of my hours. Likely the following topics shall be covered and mentored to your students.  How to balance the gape between the terms of academy and career? What's the real communication?  How to crack job interviews? The remuneration for my conducting this programme is variable based on the distance. For more details, please contact me by a call or WhatsApp or Email. Thanking you MAHENDIRAN V A VISITING PROFESSOR OF COMMUNICATION SKILLS AND SOFT SKILLS. MOTIVATIONAL SPEAKER NAGAPATTINAM W.A...

திருக்குறள் அதிகாரம் 118. கண் விதுப்பழிதல் CHAPTER 118. EYES ARE REALISING THE DEPTH OF MY LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள் அதிகாரம் 118. கண் விதுப்பழிதல் CHAPTER 118. EYES ARE REALISING THE DEPTH OF MY LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of  mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1171: கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யாங்கண் டது - தெய்வப்புலவர் விளக்கம்: கண்டதால் தானே இன்பமாக கொல்லும் இந்த காதல் ஏற்பட்டது? அவரை காண விடு என அந்த கண்கள் இப்பொழுது கெஞ்சுவது தான் ஏனோ! - வை.மகேந்திரன் Explanation in English: Because the eyes saw him and caused me the love on him. Being so, Why are those eyes begging me that I have to let them to see him again? - MAHENDIRAN V ------------------ குறள் 1172: தெரிந்துணரா நோக்கிய உண்க...