அதிகாரம் 76 பொருள் செயல்வகை CHAPTER 76 THE ACTIVITIES OF WEALTH 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 76
பொருள் செயல்வகை
CHAPTER 76 
THE ACTIVITIES OF WEALTH
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 751:
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மதியில்லாதவரையும் மதியுள்ளவராக்கி மதிக்கத்தக்கவராக்கும் ஒரே கருவி, ஒருவரிடம் குவியும் செல்வம் தான்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The big tool that is called wealth would make a person who is utter fool as an intelligent as if would be personalized.
MAHENDIRAN V
------------------
குறள் 752:
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
செல்வமில்லாதவரை விட செல்வம் நிறைந்திருப்போரை தான் இவ்வுலகம் போற்றுவது இயற்கையாக உள்ளது.
வை.மகேந்திரன்

Explanation in English:
It seems to be nature that only the persons who have wealth a lot are praised by the world, than those who have no sufficient wealth.
MAHENDIRAN V
------------------
குறள் 753:
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
செல்வம் எனும் அனையா விளக்கு தேசமெங்கும் சென்று பகை எனும் இருளை போக்க வல்லது.
வை.மகேந்திரன்

Explanation in English:
The un put off lamp called wealth is capable to hurl up darkness namely eneminess across the world.
MAHENDIRAN V
------------------
குறள் 754:
அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிறர்க்கு தீமை தராது திரட்டிய பணம் மட்டுமே ஒருவனுக்கு அன்பையும் அறனையும் தந்து நிலைத்து நிற்கும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Only the wealth earned by moral way without giving any adversities to any one would stably tend with one granting him morality and kindness.
MAHENDIRAN V
------------------
குறள் 755:
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அறவழியில், அன்புடைமையுடன்  ஈட்டா பணம் அடிவாசல் வந்து நின்றாலும் அதனை அனுமதித்திடல் கூடாது.
வை.மகேந்திரன்

Explanation in English:
One should not allow the wealth that was earned by immoral ways, even if it waits in the entrance
MAHENDIRAN V
------------------
குறள் 756:
உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வரி, திறை, சுங்கத்தின் மூலம் வசூலிக்கும் செல்வம், பகைவரை வீழ்த்தி கொணர்ந்த செல்வம் அனைத்தும் அரசனுடையதே.
வை.மகேந்திரன்

Explanation in English:
The wealth collected through many kinds of taxes including customs affairs and the same brought from other contries by winning in the war belong to the king of the nation.
MAHENDIRAN V
------------------
குறள் 757:
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அன்பினால் ஈன்ற அருள் ஒரு குழந்தையாக கருதப்படுமானால் அக்குழந்தை, செல்வம் எனும் செவிலி தாயாரால் வளர்க்கப்படுவது ஆகும். (செல்வம் இல்லாமல் அருள் ஒளி பெறாது என்கிறார்)
வை.மகேந்திரன்

Explanation in English:
If the grace obtained from the kindness is considered as a child, it would be bred of course by a step mother that is called wealth. (The Saint Poet says that the grace wouldn't glitter without wealth)
MAHENDIRAN V
------------------
குறள் 758:
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கைக்கொண்ட செல்வத்தை கொண்டு, தெரிந்த தொழிலை செய்பவது, இரு யானைகள் சண்டையிடுவதை அருகில் நின்று கண்டு ஆபத்தை சந்திக்காது குன்றின் மீது நின்று அப்போரை காண்பதற்கு ஒப்பாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If one starts his known business by the money with his hand and surviving, that is equallent to looking at two elephants fighting with each other in the land, by standing on a hill safely instead of standing near the fight unsafely.
MAHENDIRAN V
------------------
குறள் 759:
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃதனிற் கூரிய தில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பகைவர்களின் ஆணவத்தை அகற்ற வேண்டுமெனில், போதுமான செல்வம் கையிருப்பு வேண்டும். அதற்கு இணையான வலுவான வாள் எதுவுமில்லை.
வை.மகேந்திரன்

Explanation in English:
Of course it is must having a sufficient own wealth to abate/remove the aragance of the enemies. No any other strong sword is as it is.
MAHENDIRAN V
------------------
குறள் 760:
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நல்வழிகளில் திரட்டிய நற்பொருள் நலம் பட இருந்தால், அறம் இன்பம் இரண்டும் தானாய் அமையும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If the wealth is earned by all moral ways and being good, the remain two  properties such as Morality and pleasance would reach to him themselves.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS