அதிகாரம் 72 அவை அறிதல் CHAPTER 72 KNOWING THE STAGE ETIQUETTE 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 72
அவை அறிதல்
CHAPTER 72 
KNOWING THE STAGE ETIQUETTE
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 711:
அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவையில் பேசும்பொழுது, அவையிலுள்ளவர்களின் முதிர்ச்சி அறிந்து நற்கருத்துகளை நயப்பட உரைப்பதே மதிப்பு.
வை.மகேந்திரன்

Explanation in English:
During speaking on the stage, should know the quality of persons seated on the stage and then has to expressing is wisdom.
MAHENDIRAN V
------------------
குறள் 712:
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சொற்களின் நடையறிந்த நல்லார் இருக்கும் சபையில், நன்னடத்தையுடன் நல்நடையில் பேச வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Should know to speak with good dialects and good behaviour infront of the genius seated on the stage.
MAHENDIRAN V
------------------
குறள் 713:
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவையின் அருமை தெரியாமல் மனம் போன போக்கில் பேசுபவர்கள் சொல்லின் வகையுணர்ந்து பேசத்தெரியாதவர்.
வை.மகேந்திரன்

Explanation in English:
One who is speaking loosey goosey without knowing the status of the stage is known as  illknowledged person.
MAHENDIRAN V
------------------
குறள் 714:
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அறிவாளிகள் மத்தியில் அறிவுச்சுடர் ஓங்க பேசுதல் வேண்டும். அறியும் ஆற்றல் குறைவாக உள்ளோர்  அவையில் புரியும்படி உரையாற்ற வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Should be speaking falmmably  infront of persons who are flammable in knowledge, and to be speaking understandably to those who are not so well to grasp.
MAHENDIRAN V
------------------
குறள் 715:
நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அறிவு நிறை ஆன்றோர் அமர்ந்திருக்கும்கால், அவையில் முந்தி நின்று பேசாமல் இருப்பதே அவையடக்கம் எனப்படுகிறது.
வை.மகேந்திரன்

Explanation in English:
Not to be speaking earlier than better persons start to speak on the stage of wisdomed people is considered as stage etiquette.
MAHENDIRAN V
------------------
குறள் 716:
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஆன்றோர் மத்தியில் தவறுடன் பேசி தடுமாறும் நிலைப்பாடு அறநெறி தவறுதலுக்கு ஒப்பானதாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Speaking fault fully unknowingly in the presence of wisdomed people is like the stance of fouling Morality.
MAHENDIRAN V
------------------
குறள் 717:
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொற்றெரிதல் முன்னர் இழுக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கற்றுணர்ந்த அனைத்தையும் கருத்துரைக்க ஏதுவான சபை எதுவெனில், குறையற்ற சொற்கள் பேசாத மதிநிறைந்த மக்கள் இருக்கும் சபையே. (சபையறிந்து பேசுக என்பது இதான்)
வை.மகேந்திரன்

Explanation in English:
Must be speaking all knowledgeable and learned aspects only in the presence of well-versed persons seated in the hall. (This means that to speak knowing the status of the stage)
MAHENDIRAN V
------------------
குறள் 718:
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அறிவு நிறை அவையில் (அவர்கள் அறியவில்லை என நினைத்து) அறிவை போதிக்கிறேன் என உரைப்பது வளர்ந்த பயிருக்கு நீரூற்றுவது போலாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Speaking innocently by means of inputting knowledge to knowldged persons means that putting water to well grown plants.
MAHENDIRAN V
------------------
குறள் 719:
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச்சொல்லு வார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நல்லோர் கூடி நிற்கும் அறிவு மிகு நற்சபையில் பேசும் ஆற்றல் உள்ளவர்கள், அறிவில் நலிந்தோர் மத்தியில் அறிவுடன் பேசுவது ஆக்கம் தராது.
வை.மகேந்திரன்

Explanation in English:
If the people who are fully elegible to speak only to well versed audience are addressing in front of ill knowledged persons,  it is not fair to them.
MAHENDIRAN V
------------------
குறள் 720:
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அறிவுடையார் தன் தன்மைக்கு ஏற்பிலார் மத்தியில் அறிவுடைமை பேசுவது அமிழ்தத்தை அவசியமின்றி அங்கங்கே சிதறவிடுவது போலாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Addressing of well versed persons infront of inappropriate persons of them is like the stance of spilling nectar here and there unnecessarily.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS