Skip to main content

அதிகாரம் 75 அரண் CHAPTER 75 BULWARK/ FORT 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 75 அரண்
CHAPTER 75 BULWARK/ FORT
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 741:
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அரண், அதாவது கோட்டை இருவகைகளிளும் ஒரு தேசத்திற்கு பயனாகிறது. படையெடுத்து சென்று எதிரியை அழிக்கவும், எதிரி படையெடுத்தால் படைகளை தற்காத்துக்கொள்வதற்கும் பயன்படுகிறது.
வை.மகேந்திரன்

Explanation in English:
The defensive wall/ bulwark is very important to a country for two reasons. The first one is to invade and destroy enemy's fort, and the second one is to protect and keeping troops inside incase of enemy's invading.
MAHENDIRAN V
------------------
குறள் 742:
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அகன்ற நிலம், ஆழமான நீர்நிலைகள், அடர்ந்த காடு, உயர்ந்த மலை இந்நான்கும் அமையப்பெறுவதே சிறந்த அரண்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The best fort must have the  defensive stances surrounding it  such as a broad land, deep and broad water sources, thicker forest and high hills.
MAHENDIRAN V
------------------
குறள் 743:
உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அகலமாக, உயரமாக, உறுதியாக, அரசுக்கு பாதுகாப்பாகவும், பகைவர் எளிதில் நெருங்க முடியாத இந்நான்கு பொறியியல் தன்மையுடன் கட்டப்பட்டதே சிறந்த அரண் என நூல்கள் கூறுகின்றன.
வை.மகேந்திரன்

Explanation in English:
The ancient books say that a bulwark's architecture should be four stances like, broadly, protectively,  strongly and as if the enemy shouldn't enter easily inside.
MAHENDIRAN V
------------------
குறள் 744:
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காவலுக்கு குறுகிய இடமும், உள்ளிடம் பரந்துவிரிந்தும், சுற்று சுவர் உயர்ந்தும், தடித்தும், எதிரியும் வந்தால் மலைத்துப்போகும் அமைப்பில் உள்ளதே அரண் ஆகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A fort should have a narrow way in the entrance but broad and long space inside. The defensive wall should be thick, strong and tall as much as startled by enemies even if they invade.
MAHENDIRAN V
------------------
குறள் 745:
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீர தரண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
எதிரி ஒருகால் முற்றுகையிட்டாலும், உள்ளே வரமுடியாதவாறும், உள்ளிருக்கும் படையினருக்கு பாதுகாப்பாகவும், தானிய கிடங்குகளுக்கு பாதகமில்லாமலும், உறுதியாய் அமைக்கப்படுவதே அரண் ஆகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even if enemy invade and try to come inside, the fort of a nation should be strong and protective as if not to enter and damage cereal godown and troops that are inside.
MAHENDIRAN V
------------------
குறள் 746:
எல்லாப் பொருளும் உடைத்தா யிடத்துதவும்
நல்லா ளுடைய தரண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தேவையானவை அனைத்தையும் உள்ளிருப்பாய் கொண்டு, தேசத்தை காக்கும் வலிமையுடைய நல்ல வீரர்களை கொண்டிருப்பதே அரண் எனப்படும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The best fort is where all needful items can be kept and stocked for protecting a nation and where strengthened soldiers are alertly.
MAHENDIRAN V
------------------
குறள் 747:
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரிய தரண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
எதிரி சூழ்ந்தாலும் அல்லது சூழாத நிலையிலும்  அல்லது சூழ்ச்சி செய்து உள் நுழைய முயன்றாலும் எந்த சேதமும் ஏற்படாமல் வீரர்களால் காக்கப்படும் கோட்டையே சிறந்த அரண் ஆகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The great fort is which is confidently protected by warriors without any loss even if it is surrounded or not by enemy or any illy actions cunningly done by enemy.
MAHENDIRAN V
------------------
குறள் 748:
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வ தரண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கோட்டை முற்றுகையிட்டபோதிலும், உள்ளிருந்தே எதிரியை தாக்கும் வழிவகைகளை கொண்டதாக அமைக்கப்பட்டதே அரண்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A Fort should have all facilities as if attacking enemies from inside minutely at the time of being surrounded by enemies.
MAHENDIRAN V
------------------
குறள் 749:
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
எதிரி வெளிநின்று போர் துவக்குங்கால், போரின் துவக்கத்திலேயே உள்ளிருந்தபடியே எதிரியை தாக்கும் படி அமைக்கப்பட்டதே அரண் ஆகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
In the case war is begun by enemies from the entrance of the fort, the fort should be as far as facilitable to attack enemies from inside strongly.
MAHENDIRAN V
------------------
குறள் 750:
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்ல தரண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
எத்தனை சிறப்பான தளவாடங்கள் வீரர்கள் ஏராளமாய் இருந்தபோதிலும், ஒரு அரசின் செயல்படும் திறன் வலுவிழந்து காணப்பட்டால் அரண் இருந்தும் இல்லாததேயாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even though a fort is having entire facilities like all weapons tanks and numerous soldiers, if the nation is worthless in ruling activities, the fort of the nation would be invalid.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு.

 ஆங்கில மொழியின் இலக்கணம் -  சுத்த தமிழில் - எழுதியவர் வை.மகேந்திரன் 01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு. எத்தனையோ மொழிகள் உலகில் தொன்றுதொட்டு பேசப்பட்டு வந்தாலும் கி.பி 1000 -களில் முளைத்த ஆங்கிலம், உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு அத்தியாவசியமான மொழியாக கருதப்படுவது உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம். க்ரீக் லத்தீன் ஸ்பானிஷ் ஜெர்மனிக் பிரெஞ்ச் போன்ற மொழிகளின் கலவை இதில் இருப்பதால் ஆங்கிலம் ஒரு தனி அந்தஸ்தை பெற்றிருக்கக்கூடும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆங்கில மொழியை பற்றி ஒரு உண்மையான கூற்று என்ன தெரியுமா ? பார்ப்பதற்கு அதுவும் வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஆங்கிலம் கடினமாக தோன்றுகிறது ஆனால் இதை புழங்க ஆரம்பித்து விட்டால் இதைப்போல ஒரு எளிதான மொழி எங்கும் இல்லை என்கின்ற உணர்வு நிச்சயமாக தோன்றும். அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் என்கின்றார்கள் மொழியியல் நிபுணர்கள். என்னை பொறுத்தவரையில் நான் அதை உள்ளபூர்வமாக உணர்கிறேன் . இந்த மொழியில் உள்ள இலக்கண கட்டமைப்புகள் எந்த மொழியிலும் காணப்படாதவை என்று கூறி விட முடியாது என்றாலும் ஆங்கில இலக்கண கட்டமைப்பு...

Need our seminar programme at your college?

Dear all, (This announcement is only for Engineering colleges) Now you can avail our seminar in your venue itself against your invitation. If you wish to put a programme aiming to boost your final year students of Engineering streams in communication skills and for enabling them to crack job interviews, and to make them know to balance the gape between academy and career, you may contact me.  I can be scheduling date and time any two hours for the seminar depending upon the availability of my hours. Likely the following topics shall be covered and mentored to your students.  How to balance the gape between the terms of academy and career? What's the real communication?  How to crack job interviews? The remuneration for my conducting this programme is variable based on the distance. For more details, please contact me by a call or WhatsApp or Email. Thanking you MAHENDIRAN V A VISITING PROFESSOR OF COMMUNICATION SKILLS AND SOFT SKILLS. MOTIVATIONAL SPEAKER NAGAPATTINAM W.A...

திருக்குறள் அதிகாரம் 118. கண் விதுப்பழிதல் CHAPTER 118. EYES ARE REALISING THE DEPTH OF MY LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள் அதிகாரம் 118. கண் விதுப்பழிதல் CHAPTER 118. EYES ARE REALISING THE DEPTH OF MY LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH; WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of  mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1171: கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யாங்கண் டது - தெய்வப்புலவர் விளக்கம்: கண்டதால் தானே இன்பமாக கொல்லும் இந்த காதல் ஏற்பட்டது? அவரை காண விடு என அந்த கண்கள் இப்பொழுது கெஞ்சுவது தான் ஏனோ! - வை.மகேந்திரன் Explanation in English: Because the eyes saw him and caused me the love on him. Being so, Why are those eyes begging me that I have to let them to see him again? - MAHENDIRAN V ------------------ குறள் 1172: தெரிந்துணரா நோக்கிய உண்க...