அதிகாரம் 73 அவை அஞ்சாமை CHAPTER 73 NOT TO HAVE STAGE-FEAR (The stance of not to fear to speak on stage/council/auditorium) 📖📖(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 73
அவை அஞ்சாமை
CHAPTER 73 
NOT TO HAVE STAGE-FEAR
(The stance of not to fear to speak on stage/council/auditorium)
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 721:
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சொல்லில் தூய்மையுடையோர் சபையில் பேசுங்கால், அவையில் இருப்போரின் வகையறிந்து தவறிழைத்து பேச மாட்டார்கள்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Persons having purity on their speech would never speak faultfully when they speak on a council as they know to distinguish the audience.
MAHENDIRAN V
------------------
குறள் 722:
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கற்றோர் அவையில், தான் கற்றவைகளை நயம்பட ஒருவர் உரை நிகழ்த்தினால், கற்றுத் தேர்ந்தவர் இவர் தான் என்று பெயர் பெறுவார்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If one speaks amazingly his learned aspects on the stage of well-versed, he would be enormously applauded by audience.
MAHENDIRAN V
------------------
குறள் 723:
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத் தஞ்சா தவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
போர்களத்தில், உயிருக்கும் அஞ்சாமல் போரிடுபவர்கள் கூட பலர் உண்டு ஆனால் அவையில் அஞ்சாமல் பேசும் ஆற்றல் உள்ளவர்கள் சிலரே.
வை.மகேந்திரன்

Explanation in English:
There may be many who fight fearlessly on the battle but only a few who have efforts to speak on the stage fearlessly.
MAHENDIRAN V
------------------
குறள் 724:
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கற்றோர் அவையில் ஒருவர் தான் கற்றவைகளை வெளிப்படுத்துவது ஒரு புறமிருந்தாலும் அக்கற்றோரின் கூற்றுகளை கேட்டுணர்ந்து அறிவை உயர்த்திக்கொள்ளவேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even if one speaks his learned aspects so wisely on the stage of well-versed, he has to lend his ears for hearing others' and has to boost up his knowledge.
MAHENDIRAN V
------------------
குறள் 725:
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவையில் உரையாற்றும் பொழுது, அவையினரால் கேட்கப்படும் வினாக்களுக்கு அஞ்சாமல் பதில் கூறும் ஆற்றல் பெற, பல நூல்களை கற்று அறிந்திருத்தல் வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If a stage addresser wants to be capable to answer the questions of well-versed on the stage when he addresses, he must have much stuff by learning a lot.
MAHENDIRAN V
------------------
குறள் 726:
வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
போரிடும் வீரர் அஞ்சி நடுங்கினால் அவர் கையில் வாள் இருந்தும் பயனில்லை. அது போல சபையில் பலர் முன் பேசத் தயங்குபவர் பல நூல்கள் கற்றும் பயனில்லை.
வை.மகேந்திரன்

Explanation in English:
Despite having a sword if a soldier fears to fight on a battle,  the sword had by him is useless likewise, if an addresser fears to speak though he had learned a lot, all his learnings are useless.
MAHENDIRAN V
------------------
குறள் 727:
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்
தஞ்சு மவன்கற்ற நூல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சபையோர் முன் பேச அஞ்சும் மனிதர் கற்ற நூல்கள், போரிடத்தெரியா ஒரு கோழையான  வீரனின் கையில் உள்ள கூர்மையான வாளுக்கு சமமானதாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The learned items of a speaker who fears to speak on the stage is like a sharp-sword had by a coward soldier who fears to fight on battle
MAHENDIRAN V
------------------
குறள் 728:
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பல நூல்கள் கற்றும் பேரறிவு பெற்றும் சபையில் உரையாற்றுபவர், பலரும் புரிந்து கொள்ளாத வகையில் உரை நிகழ்த்தினால், அவர் பயனற்றவராவார்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Although one is well-versed in all respects and having knowledge a lot, if he addresses his aspects ununderstandably to many of audience, he is considered as useless.
MAHENDIRAN V
------------------
குறள் 729:
கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கற்றறிந்து புலமைப் பெற்று அறிவுடையவராயிருந்தாலும், அறிஞர்கள் சபைக்கு வர பயப்படுகிறவர்கள் கல்லாதவர்களை விட கீழானவர்கள்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Although one is a well learned person and having more poetic knowledge, if he fears to come to the council of well-versed, he is considered as lower than illiterates.
MAHENDIRAN V
------------------
குறள் 730:
உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கற்றவற்றை சபைக்கு கொண்டு வந்து பகிர மனமில்லாதவர்கள் வாழ்வதில் அர்த்தம் இல்லை.
வை.மகேந்திரன்

Explanation in English:
Living stance of ones who aren't willing to come to share his learned aspects to the council of literates is meaningless.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Comments

Popular posts from this blog

ADMISSION GOES ON FOR OUR ONLINE ENGLISH COACHING CLASS